சில்லறை
வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு
தி.மு.க. தனது ஆதரவைத் தெரிவிப்பதாக கலைஞர் இன்று (27.11.2012) அறிக்கை
வெளியிட்டார். இதற்கு காங்கிரஸின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், அறிக்கை ஒன்றில்
கூறியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,>சில்லறை
வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது எந்த வகையிலும் சிறு வியாபாரிகளை
பாதிக்காது என்ற உறுதிமொழியை மத்திய அரசு பலமுறை அளித்துள்ளது.
எந்தக்
காலக்கட்டத்திலும் அன்னிய முதலீட்டால் சிறு வியாபாரிகள் பாதிப்படைய
மாட்டார்கள் என்பது ஒருபக்கம் இருக்க, எந்த மாநிலம் தேவை என கருதுகிறதோ,
அந்த மாநில அரசு அமல்படுத்திட வசதியான கொள்கை முடிவை மத்திய அரசு
வகுத்துள்ளது.
இந்தச்
சூழ்நிலையில் கலைஞர் வாக்கெடுப்பு வந்தால் அந்த வாக்கெடுப்புக்கு
எதிராகவும், மைய அரசுக்கு ஆதரவாகவும் திராவிட முன்னேற்ற கழகம்
வாக்களிக்கும் என்று அறிவித்திருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி இந்த அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறது, நன்றி
தெரிவிக்கிறது. இவ்வாறு பி.எஸ். ஞானதேசிகன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக