பதினைந்து லட்சம் கொடுங்க. மாதம் முப்பதாயிரம் ருபாய்
சம்பளம். காலை பத்து மணிக்கு போய் ஈவினிங் அஞ்சு மணிக்கு வந்துடலாம்.
அதிகம் வேலை கிடையாது. சுருக்கமா சொன்னா கவர்மெண்ட் வேலையை விட செம
ரிலாக்ஸாக இருக்கலாம். ஒரு கைல கேஷ் கொடுத்தா, இன்னொரு கையல
அப்பாயின்மெண்ட் ஆர்டர்."
- இப்படி என்னிடம் மார்கெட்டிங் செய்தார் ஒரு நபர்.
அவர் குறிப்பிட்ட அந்த ஜாலி(?) வேலை - லெக்சரர். இடம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம்.
உங்களிடம் இரண்டு அல்லது மூன்று லட்சம் மட்டுமே இருக்கிறதா? அதற்கு ஏற்றார்போல கூட்டுற அல்லது பெருக்கிற வேலையோ உங்களுக்கு அங்கு ஏற்பாடு செய்துவிடலாம்
அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்களில் 90 சதவீதம்பேர் இப்படி வேலையை "வாங்கியவர்கள்தான்" என்பது நூறுசதவீத உண்மை (நான் சிதம்பரத்துக்காரன்). http://idlyvadai.blogspot.com
இங்கு என்ஜினியரிங், டாக்டர் போன்ற உயர்படிப்புகளில் சேர, Marks தேவையில்லை. Money மட்டுமே தேவை.
பெரிய இடத்து பிள்ளைகள் சும்மா ‘பெயருக்கு’ படிக்க தேர்ந்தெடுக்கும் இடமே இப்பல்கலை கழகம்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். இவ்வாறு சம்பாதிக்கும் பணத்தில்தான் ஒட்டுமொத்த நிர்வாகமே நடைபெற்று வருகிறது. ஒரளவுக்கு சிறப்பாக செயல்படுவது உலகமெங்கும் மாணவர்களை கொண்ட தொலைதூர கல்வி.
ஒவர் ஊழலின் விளைவாக பாரம்பரியமிக்க அண்ணாமலை பல்கலைகழகம் திவாலாகும் நிலைக்கு போய்விட்டது. பணிபுரியும் எல்லா ஊழியர்களுக்கும் அறுபது சதவீத் சம்பள குறைப்பு மற்றும் ஆள் குறைப்பு என நிர்வாகம் அறிவித்தது. இதை அடுத்து, காலவரையின்றி பல்கலைகழகம் மூடப்பட்டது,
பல்கலைகழக ஊழியர்களும், அவர்களின் வாக்குகளை கவர அனைத்து கட்சிகளும் தொடர் போராட்டத்தில் இறங்க, நிர்வாகமும் தற்போது பல்கலைக்கழத்தை திறக்கவும், ஊழியர்களுக்கு எதிரான அறிவிப்புகளை திரும்ப பெற நடவடிக்கை எடுப்பதாவும் அறிவிக்க, தற்காலிகமாக பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
"படிக்க ஸீட், படிக்காமலே டிகிரி, படித்தவுடன் வேலை - எல்லாவற்றுக்கும் பணம்".
இதுதான் அண்ணாமலையின் தாரக மந்திரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக