சனி, 1 டிசம்பர், 2012

விஜய் டெக்னீஷியன்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.


இயக்குனர் ராஜா இயக்கத்தில் விஜய், ஜெனீலியா, ஹன்ஸிகா மோத்வானி நடித்த வேலாயுதம் படம் வெற்றியடைந்ததற்காக இந்த விருந்து எனக் கூறி, விஜய் தனது வீட்டில் வேலாயுதம் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு பார்ட்டி கொடுத்தார். 

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் துப்பாக்கி தெலுங்கிலும் நல்ல வசூலைக் குவிப்பது விஜய்க்கு டபுள் சந்தோஷமாக அமைந்துள்ளது. 

இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதத்தில், துப்பாக்கி படத்தில் தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் துப்பாக்கி படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்களுக்கு விஜய் தனது வீட்டில் ஒரு பார்ட்டி வைத்தாராம்.

கருத்துகள் இல்லை: