சென்னை:
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் 2 நாட்களை எதிர்க்கட்சிகளை
முடக்கி வைத்திருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை
மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத் இன்று
சந்தித்துப் பேசினார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இந்த விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. விவாதம் நடத்த தயார்... ஆனால் வாக்கெடுப்புக்கு அவசியமில்லை என்று கூறி வருகிறது மத்திய அரசு.
இதனிடையே 2ஜி விவகாரத்தில் புதிய திருப்பமாக ரூ1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறிய சிஜிஏ அறிக்கையில் தம்மை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக சிஏஜியின் தொலைத்தொடர்புத் துறைக்கான இயக்குநர் ஆர்.பி.சிங் புகார் கூறியிருந்தார். இதை ஆயுதமாகப் பயன்படுத்தி 2ஜி விவகாரம் தொடர்பாக ஆர்.பி.சிங் கூறியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக மூலம் தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.http://tamil.oneindia.in/
மேலும் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் இன்று திமுக தலைவர் கருணாநிதியை இது தொடர்பாக சந்திப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து அவருடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக