சண்டிகர்: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ரூ.2,645 கோடி இழப்பு என்று கொடுத்த
அறிக்கையை திருத்தி ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று மாற்றப்பட்டது பற்றி
பொது விவாதம் நடத்த சி.ஏ.ஜி தயாரா என்று மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி
சவால் விடுத்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் மணிஷ் திவாரி
சண்டிகரில் நேற்று அளித்த பேட்டி: தொலைதொடர்பு துறையின் கணக்குகளை தலைமை
தணிக்கை அதிகாரி(சி.ஏ.ஜி) அலுவலக உயர் அதிகாரி ஆர்.பி.சிங் தலைமையிலான குழு
ஆய்வு செய்தது. ஆர்.பி.சிங் தயாரித்த வரைவு தணிக்கை அறிக்கையில், முதலில்
வருபவருக்கு முன்னுரிமை என்ற முறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு
செய்யப்பட்டதால் அரசுக்கு ரூ.2,645 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக
கூறியுள்ளார். ஆனால் சி.ஏ.ஜி வெளியிட்ட இறுதி அறிக்கையில், இழப்பு தொகை
ரூ.1.76 லட்சம் கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏலம் மூலம்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்க அரசு முடிவு செய்யாத நிலையில் இழப்பு தொகையை சி.ஏ.ஜி
கணக்கிடவே முடியாது. ரூ.2,645 கோடி இழப்பு, ரூ.1.76 லட்சம் கோடியாக மாறியது
எப்படி என்ற கேள்விக்கு பதில் தெரிந்தவர் சி.ஏ.ஜி ஒருவர்தான். http://www.dinakaran.com/
இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு. எனவே, இது தொடர்பாக பொது விவாதத்துக்கு சி.ஏ.ஜி தயாரா? அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சி.ஏ.ஜி பதில் அளிக்கட்டும். இழப்பு தொகையை அதிகரித்து காட்ட வேண்டும் என்று பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி வலியுறுத்தினாரா? என்பது பற்றி சி.ஏ.ஜி விளக்க வேண்டும். இவ்வாறு மணிஷ் திவாரி கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக