செவ்வாய், 27 நவம்பர், 2012

மங்காத்தா ரீமேக்கில் அஜித்குமார்!

நடிகர் அஜித்குமாரின் 50-வது படம் ‘மங்காத்தா’. வசூலிலும் ரசிகர்களின் மனதை கவர்வதிலும் சூப்பர் ஹிட் அடித்த மங்காத்தா படத்தில் ரசிகர்கள் ஒரு புதிய அஜித்தை கண்டனர். வெங்கட் பிரபு மங்காத்தா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறாராம். இந்தியிலும் அஜித் நடிக்க வேண்டும் என விருப்பப்பட்டு அஜித்திடம் கேட்டிருக்கிறாராம்.

வெங்கட்பிரபு அஜித்தை தமிழில் அஜித் நடித்த கேரக்டரில் நடிக்கவைக்கப்போவதில்லையாம். அர்ஜூன் நடித்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க கேட்டிருக்கிறாராம். ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் டிசம்பர் 10 முதல் அஜித் கலந்துகொள்கிறார். வெங்கட் பிரபுவும் பிரியாணி படப்பில் பிசியாக இருப்பதால் மங்காத்தா படத்தின் இந்தி ரீமேக் புராஜெக்ட் இன்னும் வேகம் எடுக்கவில்லை. 


அஜித்துக்கு சமீபத்தில் ஏற்பட்ட விபத்தின் போது உண்டான காயத்தின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக ஆப்ரேஷன் செய்தாக வேண்டும் என்று கூறியிருக்கிறார்களாம் அஜித்தின் குடும்ப மருத்துவர்கள். ஆப்ரேஷன் முடிந்ததும் அதிக நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் ’சிறுத்தை’ சிவா படம் முடிந்தபிறகு ஆபரேஷன் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டாராம் அஜித்குமார்.

கருத்துகள் இல்லை: