பள்ளி மாணவி பலாத்காரம் : வயதை மறைக்க தலையில் விக் ரகசிய அறை வைத்து சில்மிஷம்
இதை உறவினர்களிடம் கூறி ராதா கதறினார். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து டாக்டரை கைது செய்தனர். டாக்டர் குறித்து நோயாளிகள், நர்சுகளிடம் போலீசார் விசாரித்தபோது கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள் வருமாறு: டாக்டர் சங்கரநாராயணன் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளில் அழகானவர்களை தேர்வு செய்து சில்மிஷம் செய்து வந்துள்ளார். நோய் குணமாகி விட்டாலும், உள்நோயாளியாக இருக்க வேண்டுமெனக் கூறுவார். குளுக்கோஸ் மற்றும் ஊசியில் மயக்க மருந்து செலுத்தியும் நோயாளிகளை அரை மயக்கத்தில் வைத்து சில்மிஷத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சில்மிஷம் செய்வதை அறிந்து பெண் நோயாளிகள் சத்தம்போட்டால் அவர்களது கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, எப்படியாவது பிரச்னை வெளியே வராமல் பார்த்துக் கொண்டுள்ளார்.
தன்னிடம் தவறாக நடந்த டாக்டர் குறித்து புகார் தெரிவிப்பதாக ராதா கூறியதும், உடனே ராதாவின் காலில் விழுந்து டாக்டர் கதறி அழுததுபோல் நடித்துள்ளார். உடனே ராதா மவுனமாக இருப்பதைப் பார்த்ததும் சமாதானமாகிவிட்டதாக டாக்டர் தவறாகக் கருதி, அந்த அறைக்குள் இருந்த பாத்ரூம் சென்ற நேரத்தில் ராதா வெளியில் ஓடி தப்பினார். 52 வயதான நிலையிலும் தன்னை அழகாகவும், இளமையாகவும் காட்டிக் கொள்ள தலையில் Ôவிக்Õ வைத்துள்ளார். இந்த விக் விலையே 25ஆயிரமாம். பெரும்பாலும் மனைவி, குழந்தைகளை வெளியூரில் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். வீட்டின் முன்பகுதியில்தான் கிளினிக் வைத்துள்ளார். யாரையாவது சில்மிஷம் செய்ய திட்டமிட்டு விட்டால், கிளினிக்கை ஒட்டியுள்ள வீட்டின் அறைக்கு நோயாளியை அழைத்துச் சென்று விடுவார். இந்த அறை இருப்பது சாதாரணமாக யாருக்கும் தெரியாத வகையில் அமைத்திருந்தார். முன்பகுதியில் பீரோ போன்ற ரேக் அமைத்திருந்தார். அதை உள்புறம் தள்ளித்தான் அறையைத் திறக்க முடியும். இந்த ரகசிய அறையைத்தான் சில்மிஷ வேலைகளுக்கு பயன்படுத்தியுள்ளார். இதுபோன்ற பல அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் சங்கரநாராயணன் மருத்துவ பரிசோதனைக்காக இன்று மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ஏற்கனவே மாணவி ராதாவிற்கு மருத்துவ பரிசோதனை நடந்து முடிந்துள்ளது.
மாணவி பலாத்கார வழக்கில் சிக்கிய டாக்டரைப் பற்றி பரபரப்பு
தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர்
ராதா(16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் 2 மாணவி. டைபாய்டு காய்ச்சலால்
பாதிக்கப்பட்ட இவருக்கு மதுரை பைபாஸ் ரோடு, டிஎஸ்பி நகரில் உள்ள கேகே
ஆஸ்பத்திரி டாக்டர் சங்கரநாராயணன்(52) சிகிச்சையளித்து வந்தார். நேற்று
முன்தினம் டாக்டர் சங்கரநாராயணன் ஊசி போட்டதில் மாணவிக்கு லேசான மயக்கம்
ஏற்பட்டது. மாணவியை தனி அறையில் வைத்து டாக்டர் பலாத்காரம் செய்தார். இதை உறவினர்களிடம் கூறி ராதா கதறினார். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து டாக்டரை கைது செய்தனர். டாக்டர் குறித்து நோயாளிகள், நர்சுகளிடம் போலீசார் விசாரித்தபோது கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள் வருமாறு: டாக்டர் சங்கரநாராயணன் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளில் அழகானவர்களை தேர்வு செய்து சில்மிஷம் செய்து வந்துள்ளார். நோய் குணமாகி விட்டாலும், உள்நோயாளியாக இருக்க வேண்டுமெனக் கூறுவார். குளுக்கோஸ் மற்றும் ஊசியில் மயக்க மருந்து செலுத்தியும் நோயாளிகளை அரை மயக்கத்தில் வைத்து சில்மிஷத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சில்மிஷம் செய்வதை அறிந்து பெண் நோயாளிகள் சத்தம்போட்டால் அவர்களது கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, எப்படியாவது பிரச்னை வெளியே வராமல் பார்த்துக் கொண்டுள்ளார்.
தன்னிடம் தவறாக நடந்த டாக்டர் குறித்து புகார் தெரிவிப்பதாக ராதா கூறியதும், உடனே ராதாவின் காலில் விழுந்து டாக்டர் கதறி அழுததுபோல் நடித்துள்ளார். உடனே ராதா மவுனமாக இருப்பதைப் பார்த்ததும் சமாதானமாகிவிட்டதாக டாக்டர் தவறாகக் கருதி, அந்த அறைக்குள் இருந்த பாத்ரூம் சென்ற நேரத்தில் ராதா வெளியில் ஓடி தப்பினார். 52 வயதான நிலையிலும் தன்னை அழகாகவும், இளமையாகவும் காட்டிக் கொள்ள தலையில் Ôவிக்Õ வைத்துள்ளார். இந்த விக் விலையே 25ஆயிரமாம். பெரும்பாலும் மனைவி, குழந்தைகளை வெளியூரில் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். வீட்டின் முன்பகுதியில்தான் கிளினிக் வைத்துள்ளார். யாரையாவது சில்மிஷம் செய்ய திட்டமிட்டு விட்டால், கிளினிக்கை ஒட்டியுள்ள வீட்டின் அறைக்கு நோயாளியை அழைத்துச் சென்று விடுவார். இந்த அறை இருப்பது சாதாரணமாக யாருக்கும் தெரியாத வகையில் அமைத்திருந்தார். முன்பகுதியில் பீரோ போன்ற ரேக் அமைத்திருந்தார். அதை உள்புறம் தள்ளித்தான் அறையைத் திறக்க முடியும். இந்த ரகசிய அறையைத்தான் சில்மிஷ வேலைகளுக்கு பயன்படுத்தியுள்ளார். இதுபோன்ற பல அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் சங்கரநாராயணன் மருத்துவ பரிசோதனைக்காக இன்று மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ஏற்கனவே மாணவி ராதாவிற்கு மருத்துவ பரிசோதனை நடந்து முடிந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக