கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டபோது மகளிர் சூழ்ந்து நின்று குறைகளை சுட்டிக்காட்டுகின்றனர்.
சென்னையில்
காலரா பரவாமல் தடுக்க நட வடிக்கை எடுக்காவிட் டால் மக்களை ஒன்று திரட்டி
போராட்டம் நடத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறி னார்.
தி.மு.க. பொருளா ளரும், கொளத்தூர்
சட்டமன்ற உறுப்பின ருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் பகுதிக்குச்
சென்று பொதுமக்களை சந்தித்து அப்பகுதியில் உள்ள குறைகளைக் கேட்டறிந்து பணி
களை ஆய்வு செய்தார்.
இதன்பின்பு மு.க.ஸ்டாலின் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனது தொகுதி நிதி யிலிருந்து கொளத்தூர்
திரு.வி.க. நகர் சமூக நலக் கூடம் அமைக்க ரூ.ஒரு கோடியும், கும ரன் நகரில்
புதிய பேருந்துநிலையம் அமைக்க ரூ.20 லட்சம், வார்டு 64, 66 மற்றும் 68 ஆகிய
வட்டங்களில் அங்கன்வாடி மய்யங் கள் அமைக்க ரூ.20 லட்சம், கொளத்தூர்
தொகுதிக்கு கழிவுநீர் அடைப்புகள் நீக்க ஜெட்ராடிங் இயந்திரம் வாங்க ரூ.37
லட்சம், கொளத்தூர் மயானத் திற்கு சுற்றுச் சுவர் கட்ட ரூ.30 லட்சம்
ஒதுக்கியி ருப்பதாகவும், ஒதுக்கீடு செய்து ஆறு மாத காலம் ஆகியும் மாநக
ராட்சி முறையாக மதிப் பீடு தயாரித்து பணி களைத்துவங்கிடும் ஆயத்த வேலைகளைக்
கூடப் பார்க்கவில்லை.
கொளத்தூர் தொகுதி யில் 10, 12 இடங்களில்
குடிநீரில் கழிவுநீர் கலப் பதை பார்வையிட்டேன். பொதுமக்கள் என்னிடம் கழிவு
நீர் குடிநீரில் கலந் திருப்பதை பாட்டில் களில் பிடித்து காட்டி னார்கள்.
புகார் செய்யுமாறு அறிவிக்கப்பட்ட
தொலைபேசி எண்களில் புகார் செய்தால் அதி காரிகள்தொலை பேசியைஎடுப்பதே இல்லை
என்றும் மக்கள் தெரிவித்தனர். நான் தொகுதிக்கு ஆய்வு செய்ய வருவதை அறிந்த
தும் சில பகுதிகளில் லாரிகளை வைத்து அவ சரம் அவசரமாக கழிவு நீரை
அப்புறப்படுத்தி னார்கள்.
சென்னையில் காலரா நோய் இருக் கிறது என்று
முன்னாள் மேயர் மா.சுப்பிரமணி யம் கூறினால் காலரா இல்லை என்று மேயர் சைதை
துரைசாமி கூறுகிறார். ஆனால் தினமும் 4, 5 பேர் மருத் துவமனையில் அனும
திக்கப்படுவதாக பொது மக்கள் கூறுகிறார்கள்.
நானும் மா.சுப்பிரம ணியமும் மேயராக இருந்த
போது மாநக ராட்சி, குடிநீர், பொதுப் பணித்துறை, குடிசை மாற்று வாரியம்
போன்ற துறைகளை ஒருங்கி ணைத்து மாதந்தோறும் கூட்டம் நடத்துவோம். அதன்படி
மழைக் காலம் தொடங்கும் முன்பு போர்க்கால அடிப்படையில் முன் னெச்சரிக்கை
நடவடிக் கைகள் எடுக்கப்படும்.
அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு எந்தக் கூட்
டமும்நடத்தப்பட வில்லை. அதனால்தான் இந்தக் கோளாறு. நாங் கள் தவறான
பிரச்சாரம் செய்வதாக மேயர் துரை சாமி கூறியதால் நேரில் வந்து
பார்வையிட்டேன். இந்தக் குறைகளைப் போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட
வடிக்கை எடுக்க வேண் டும். காலரா பரவாமல் தடுக்க மாநகராட்சி உரிய
நடவடிக்கையை உடனடி யாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நானே மக்களை
ஒன்றுதிரட்டி பெரிய அளவில் போராட் டம் நடத்துவேன்.
-இவ்வாறு மு.க.ஸ்டா லின் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக