விளம்பர பேனர்களில் இனி அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏக்கள் படங்கள் கூடாது: ஜெயலலிதா அதிரடி உத்தரவு
அதிமுக கூடாரத்தில் அம்மா மட்டுமே சாஸ்வதம் ஏனையோர் எல்லாம் எதோ ஒரு காலத்தில் கட்டம் கட்டபடுபவர்களே எனவே எந்த ஒரு ஜால்ரா அடிமையினதும் படமும போஸ்டர்களில் வைப்பதில் உள்ள வில்லங்கங்களை ஜனநாயகவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்
சென்னை: அதிமுக விளம்பர பேனர்களில் இனி அமைச்சர்கள்,
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் படங்கள் இருக்கக் கூடாது என்று அக்
கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அதிரடி உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். காலந்தொட்டு அ.தி.மு.க. கழகத்திற்கென்று வகுக்கப்பட்ட நெறிமுறைகளை தொடர்ந்து நாம் கடைபிடித்து வருகின்றோம். கழகம் தொடங்கப்பட்ட காலந்தொடங்கி எம்.ஜி.ஆர். உத்தரவுப்படி, நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிற்கு நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் வைக்கின்ற வரவேற்பு பலகைகள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் போன்றவற்றில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.
புரட்சித் தலைவி அம்மா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தலைமை ஏற்ற பிறகு, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது படங்களை மட்டுமே பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தோம். ஆனால் இந்த நடைமுறைக்கு மாறாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன??
இதனால் கழகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அப்பகுதியில் வைத்திருக்கும் பேனர்களை கிழித்து விடுவதாக செய்திகள் வருகின்றன. இச்செயல்கள் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, தவறான முன்னுதாரணமாகவும் அமைந்து விடுகின்றன.நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கு கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதற்கு கழகத்தில் அனுமதியும் இல்லை. அத்தகைய பழக்கமும் இதுவரை கிடையாதுj
எனவே கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனி வரும் காலங்களில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது படங்களை மட்டுமே விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளில் பயன்படுத்த வேண்டும்.
நிகழ்ச்சிக்கு வருகை தரும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும், அவர்கள் வகித்து வரும் பதவி மற்றும் பொறுப்புகளையும் எழுத்துக்களில் குறிப்பிட்டால் போதும். அ.தி.மு.கவின் நெறிமுறைகளுக்கு ??/ மாறாக, இனிமேல் மற்றவர்களுடைய படங்களை போட்டு விளம்பரம் செய்யும் கழகத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக