உகம்சந்த் Ex MLA + MGR + Nirmala + ஜெயாவின் தளபதி இன்று உள்ளே
தமிழக மேல் சபை இல்லாமல் போனதற்கும் இவருக்கும் நெருங்கிய வரலாற்று தொடர்பு உண்டு. வெண்ணிற ஆடை நிர்மலாவை MGR மேலவை உறுப்பினாராக நியமித்த பொழுது அவர் சட்டப்படி வங்கிரோத்து நிலைமையில் இருந்தார் . அப்பொழுது இந்த விடயத்தை திமுக கையில் எடுக்க இதே உகம்சந்துதான் பத்து லட்சம் ரூபாவை உடனே செலுத்தினார். ஆனாலும் சட்ட சிக்கல் காரணமாக எம்ஜியாரின் ஆசைக்கு உரிய நிர்மலாவுக்கு மேல் சபை உறுப்பினாராக முடியாமல் போவிட்டது .இந்த கோபத்தில் கலைஞருக்கு பாடம் படிப்பிக்க எண்ணிய எம்ஜியார் மேல் சபையையே நிரந்தரமாக கலைத்துவிட்டார் . குளத்துடன் கோபித்து எதோ ஒன்றை கழுவாதவன்?
ஜெயலலிதாவின் ‘அன்றைய தளபதி’, இன்றைய மணல் திருடர்?
ஒரு
காலத்தில் அ.தி.மு.க.-வின் எம்.எல்.ஏ.வாகவும், கட்சித் தலைவி ஜெயலலிதாவின்
நம்பிக்கைக்கு உரிய தளபதியாகவும் இருந்தவர் மீது மணல் திருட்டு தொடர்பான
வழக்கு பாய்ந்திருக்கிறது. வழக்கு பாய்வதற்கு முன்னரே, இவர்
அ.தி.மு.க.-வில் இருந்து தி.மு.க.-வுக்கு பாய்ந்ததும், தற்போது வழக்கு
பாய்ந்த காரணங்களில் ஒன்று.
மதுராந்தகம் தி.மு.க. நிர்வாகி எஸ்.டி.
உகம்சந்த் மீது 6 வாரத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்
என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாய நிலத்தில் மணல்
திருடியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகர அ.தி.மு.க. மாணவர் அணி
துணைத் தலைவர் என்.சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த
மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. சம்பத்தின் மனுவில்,
“மதுராந்தகம் தி.மு.க.-வைச் சேர்ந்த எஸ்.டி. உகம்சந்த் மற்றும் அவரது
கூட்டாளிகள் சுந்தரராஜன், திருவேங்கடம் ஆகியோர் விவசாய நிலத்தில் 7,000
லாரிகளுக்கு மேல் மணல் திருடியுள்ளார். அதன் இன்றைய மதிப்பு ரூ.2 கோடியே 50
லட்சம்.
இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. ஆட்சியில்
நாங்கள் எல்லாம் எவ்வளவோ போராடியும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
தி.மு.க. ஆட்சியில் எஸ்.டி உகம்சந்த் பண பலம் மற்றும் அதிகார பலத்தைப்
பயன்படுத்தி பல முறைகேடுகள் செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்.
ஆட்சியைக் கைப்பற்றிய காலத்தில் 1980-ல் மதுராந்தகம் தொகுதியில்
அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு ஜெயித்தவர், எஸ்.டி. உகம்சந்த்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் கட்சி, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து
நின்றபோது, ஜெயலலிதாவின் நெருக்கமான தளபதிகளில் ஒருவராக இருந்தவர். 1989-ல்
அ.தி.மு.க. ஜெ. அணியில் போட்டியிட்டு ஜெயித்தவர்.
அதன்பின்
கார்டனால், ஒதுக்கப்பட்டிருந்தார். காரணம், சசிகலா குரூப்புடன் பண
விவகாரத்தில் ஏற்பட்ட சில தகராறுகள் என்று கூறப்பட்டது. ஒரு கட்டத்தில்
அ.தி.மு.க.-வுக்குள் இருக்க முடியாமல் தி.மு.க.-வில் இணைந்து கொண்டார்.
தற்போது, மணல் கொள்ளை வழக்கில் சிக்கியுள்ளார்.
மணல் கொள்ளை மனுவை
விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி திமுக நிர்வாகி
எஸ்.டி.உகம்சந்த் மீது 6 வாரத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய
வேண்டும் என்று உத்தரவிட்டார்.
எஸ்.டி.உகம்சந்த் தி.மு.க.காரர்
என்றாலும், தற்போதும் காவல்துறையில் நல்ல கனெக்ஷன் உடையவர். வழக்கு அநேகமாக
லோ-ப்ரொஃபைலில் அடக்கி வாசிக்கப்படலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக