இந்நிலையில் கடந்த 23ம் தேதி அகிலா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது சாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வினோத், ஜெகன், மாமா மகன் எழிலரசன் ஆகியோர்தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். இவர்கள் மூன்று பேரும் கல்லூரி மாணவர்கள்.
இதுகுறித்த புகாரின்பேரில் செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 3 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த செல்போன், சிம்கார்டையும் கைப்பற்றினர். போலீசில் அவர்கள் அளித்த வாக்குமூலம்:
மாணவி அகிலா ஒரு மாணவனை காதலித்து வந்தார். வீட்டுக்கு தெரியாமல் அதை ரகசியமாக வைத்திருந் தார். அதை கண்டுபிடித்த நாங்கள் அவரை மிரட்டி எங்களிடமும் பழகவேண்டும் என்றோம். எங்களிடம் நீ பழகாவிட்டால் பெற்றோரிடம் கூறிவிடுவோம் என்றோம். இதையடுத்து படிப்பு சம்பந்தமாக சந்தேகம் கேட்பது போல் அகிலாவின் வீட்டுக்கு 3 பேரும் அடிக்கடி சென்று வந்தோம்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாத்ரூமில் செல்போன் வைத்து அகிலா குளிப்பதை படமாக்கினோம். அதை அகிலாவிடம் காட்டி அவரை பலாத்காரம் செய்தோம். மேலும் தொடர்ந்து வீடியோ காட்சிகளை காண்பித்து 3 பேரும் அகிலாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தோம். இதனால் மனவேதனை அடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியது உள்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான 3 மாணவர்களையும் நேற்று திருவண்ணாமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக