சனி, 4 ஆகஸ்ட், 2012

வெடிகுண்டு பார்சல்; நரேந்திர மோடிக்கு குறியா?- மதுரையில் பரபரப்பு

 Modi S Madurai Visit Cancelled Due மதுரை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மதுரைக்கு வரவிருந்த நிலையில், ஒரு வெடி குண்டு பார்சல் சிக்கியதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இன்று சௌராஷ்ட்ரா சமூகத்தினரின் அகில இந்திய மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக குஜராத்திலிருந்து முதல்வர் நரேந்திர மோடி மதுரை வருவதாக இருந்தது. ஆனால் அவரின் மதுரை வருகை சில தினங்களுக்கு முன்பே ரத்தாகிவிட்டது.
இந் நிலையில் மதுரையில் இன்று வெடிகுண்டு பார்சல் பிடிபட்டது. மேலும் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நடக்கும் என மர்ம போன்காலும் வந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

காலையில் மதுரையில் பிரபல நகைக்கடை வியாபாரி உமரிடம், அடையாளம் தெரியாத சிறுவன் பார்சல் ஒன்றை கொடுத்துவிட்டு திடீரென்று தலைமறைவானான்.

அந்த பார்சலை அப்துல்லா என்பவர் வாங்கிக் கொள்வார் என்று அவன் கூறிவிட்டுச் சென்றான். சந்தேகத்தின் பேரில், உமர் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, சரியாக 12.30 மணிக்கு வெடிக்கும் விதமாக அந்த பார்சலில் வெடிகுண்டு தயார் செய்து வைக்கப்படிருந்தது.
இதைக்கண்டு அதிர்ந்த உமர், தெற்குவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பார்சல் கொடுத்த சிறுவனைத் தேடி வருகிறார்கள்.
உமரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
இதற்கிடையே இன்று காலை மதுரை ரயில் நிலையத்துக்கு வந்த மர்ம தொலைபேசியில், ரயில் நிலையத்தில் இன்று குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ரயில் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மதுரைக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி வந்த போதும் திருமங்கலம் அருகே பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: