வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

தலையில் தேங்காய் உடைத்து 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்

bleeding for belief: Chief Priest A. Periasamy breaking a coconut over the head of devotees as part of the Adi Perukku festival of the Sri Mahalakshmi Amman Temple at Mettumahadanapuram in Karur district on Thursday.

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்: ரத்தம் வழிந்தோடியபடி 50 பேர் ம.மனையில் அனுமதி< திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கோவில் திருவிழாக்களில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மகாலட்சுமி அம்மன் கோவி-ல் ஆடிப்பெருக்கையடுத்து தலையில் தேங்காய் உடைதது பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆணிக்கால் செருப்பு அணிந்தும், சாட்டையால் அடித்தும் பக்தர்கள் நூதன முறையில் வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கரூர் அருகே உள்ள மகாலட்சுமி கோவில், புதுக்கோட்டை அருகே உள்ள செல்லுக்குடி வீரலட்சுமி அம்மன் கோவில்களில் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு நடைபெற்றது. தேங்காய் உடைத்ததில் பலருக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் வழிந்தோடியது. காயம் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: