திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு வரும் இந்துக்கள்
அல்லாதோர், தாங்கள் வெங்கடாஜலபதி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக, இனி
உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும்.
நல்ல கூத்துதான் போக போக தலிபான்களை மிஞ்சி விடுவார்கள்
ஆந்திர மாநில அறநிலையத் துறை, இதுதொடர்பாக உத்தரவு ஒன்றை
பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள்
நுழையும் முன், தாங்கள் வெங்கடாஜலபதி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக,
உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்திட்டு தர வேண்டும். இந்த விதிமுறை,
ஏற்கனவே அமலில் இருந்தாலும், அது பல ஆண்டுகளாக கடுமையாகப்
பின்பற்றப்படவில்லை. இனி, அது கடுமையாகப் பின்பற்றப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெகனால் சர்ச்சை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவருமான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, சில நாட்களுக்கு முன், திருமலைக்கு வந்த போது, இதுபோன்ற உறுதி மொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்காமல், கோவிலுக்கு சென்றது சர்ச்சையை எழுப்பியது.
பிறவி கிறிஸ்துவரான அவரை கோவிலுக்குள் அனுமதித்ததை, பல்வேறு அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் கண்டித்தன. இதையடுத்து, பழைய உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ""இந்துக்கள் அல்லாதோர், கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டிய உறுதி மொழிப் படிவம், கியூ காம்ப்ளக்சில் மட்டுமின்றி, விசாரணை மையம் மற்றும் இணை நிர்வாக அதிகாரி அலுவலகத்திலும் கிடைக்கும். இந்துக்கள் அல்லாதோர், இந்த விதிமுறையை மீறினால், அவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்,'' என்றார்.
ஆதரவாளர்கள் எதிர்ப்பு: ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகனின் விஜயத்தின் போது, அவர் உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தாலும், அவர் ஏற்கனவே, 2009ம் ஆண்டில், கோவிலுக்கு வந்த போது, இதுபோன்ற படிவத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளதால், புதிதாக படிவம் தர வேண்டியதில்லை என, அவரின் ஆதரவாளர்கள் கூறியதை அடுத்து, கோவில் நிர்வாகத்தினர் அவர் உள்ளே செல்ல அனுமதித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட எல்லாம் ஜெகனை பார்த்து பயந்ததால் வரும் வியாதி .ம்ம் என்ன செய்ஞ்சு என்ன ஜெகனைதான் கவர்சிகரமான தலைவர் ஆக்கி விட்டீர்களே
- நமது சிறப்பு நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக