இந்த
வகையில் இப்போது மீண்டும் ஒரு வில்லங்கமான படமாக உருவாகி வருகிறதாம்
குற்றாலம் என்ற படம்.
சஞ்சய் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் இது.
முதலில் இதற்கு அவர்கள் வைத்த பெயர் ரோசா. பின்னர்தான் இதை குற்றாலம் என்ற
பெயரில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.இந்தப் படத்தின் கதையே படு வில்லங்கமானதாக இருக்கிறதாம். அதாவது இப்படத்தில் நாயகிகளாக நடிக்கும் மீனு கார்த்திகாவும், செளகந்தியும் அக்கா, தங்கச்சியாம். படத்தின் கதைப்படி அக்காவுக்கு, தங்கச்சி புருஷனுடன் கள்ளத் தொடர்பு இருக்கிறதாம். இது அக்காவுக்கும் தெரியுமாம்.
இந்தக் காட்சியைத்தான் சமீபத்தில் குற்றாலத்தில் படமாக்கினார்களாம். காட்சியமைப்பைப் பார்த்து படக் குழுவினரை அதிர்ந்து போயுள்ளனராம். வில்லங்கமான சீனா இருக்கே என்று இயக்குநரிடம் குழுவினர் கேட்டபோது, பெண்களுக்குத்தான் ஆண்களை விட காம உணர்வு அதிகம். மேலும் இப்படிப்பட்ட காட்சிகள் வீடுகளில் இருக்க்த்தானே செய்கிறது. அதைத்தானே படம் பிடிக்கிறேன் என்றாராம்.
இந்தப் படம் என்னவெல்லாம் வில்லங்கத்தைக் கொண்டு வரப் போகிறதோ என்ற அச்சம் இப்பவே கிளம்பியிருக்கிறதாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக