வெளிநாட்டுக்கு தப்பத் திட்டமா?
டெல்லி: நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா மற்றும்
நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்த 30 பேரின் பாஸ்போர்ட்களுடன் டெல்லி விமான
நிலையத்திற்கு வந்த ஒரு நபரை போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதனால்
நேபாளத்திலிருந்து வெளிநாடுக்கு தப்பியோட நித்தியானந்தாவும், அவரது
கோஷ்டியினரும் திட்டமிட்டிருந்தனரா எனற பெரும் கேள்வி எழுந்துள்ளது.நித்தியானந்தா மீது பாலியல் புகார்கள் ஏராளமாக உள்ளன. அதேபோல ரஞ்சிதா மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் அந்தரங்கமாக இருந்தது போன்ற காட்சி வெளியானது முதலே இருவரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.
நித்தியானந்தாவுடனேயே ரஞ்சிதா தொடர்ந்து இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்கள் இருவரும் சேர்ந்து லெனின் கருப்பன் உள்ளிட்ட பல பேர் மீது வழக்குகளையும் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்த நித்தியானந்தா, ரஞ்சிதா உள்ளிட்ட 30 பேரின் பாஸ்போர்ட்களை டெல்லி சர்வதேச விமான நிலையம் முடக்கி வைத்துள்ளது.
கயிலாயத்திலிருந்து எஸ்கேப் ஆகத் திட்டம்?
சில நாட்களுக்கு முன்புதான் நித்தியானந்தா தனது ஆதரவாளர் பட்டாளத்துடன் கயிலாத்திற்குப் போனதாக கூறப்படுகிறது. கயிலாயம் என்று கூறப்படுவது திபெத் பகுதியில் இருப்பதாக தெரிகிறது. நேபாளத்திலிருந்துதான் இங்கு போக வேண்டும்.
இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்துக்கு காத்மாண்டுவிலிருந்து விமானம் மூலம் கவுசிக் என்பவர் வந்து சேர்ந்தார். அவரிடம் பரிசோதனை நடத்தியதில் 32 பாஸ்போர்ட்களை வைத்திரு்நதார். அதில் நித்தியானந்தா, ரஞ்சிதா ஆகியோரின பாஸ்போர்ட்களும் அடக்கம்.
இவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் மொத்தமாக பறிமுதல் செய்துள்ளனர். ஏன் இத்தனை பேரின் பாஸ்போர்ட்களுடன் இவர் வந்தார் என்பது தெரியவில்லை. நித்தியானந்தா உள்ளிட்டோர் நாட்டை விட்டுத் தப்பியோடும் திட்டத்துடன் இருந்தனரா என்பதும் புரியவில்லை.
கவுசிக்கிடம் நடத்திய விசாரணையில் நேபாளத்தில் இந்த பாஸ்போர்ட்களை ஒருவர் கொடுத்ததாக கூறியுள்ளார். நித்தியானந்தா விவகாரத்தில் இந்த பாஸ்போர்ட் முடக்கம் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஆண்மைப் பரிசோதனையிலிருந்து தப்பத் திட்டம்?
நித்தியானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை செய்ய சம்மன் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவர் பாட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார். பாஸ்போர்ட்கள் சிக்கியிருப்பதைப் பார்த்தால், கயிலாயம் போன நித்தியானந்தா, அப்படியே ரஞ்சிதா உள்ளிட்டோருடன் வெளிநாட்டுக்கு ஓடிப் போய் விடும்திட்டத்தில் உள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.
எப்படியோ இப்போதைக்கு நித்தியானந்தா நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக