நெல்லூர்: டில்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில்
இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் 5 பயணிகள்
பலியானார்கள். டில்லியிலிருந்து சனி இரவு 10.30 மணிக்கு
புறப்பட்டுசென்னைக்கு வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர
மாநிலம் நெல்லூர் அருகே வந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டபோது 11வது
பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள்
உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். பலர்
காயமடைந்துள்ளனர். நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு
சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அங்கு கலெக்டர் கூறுகையில்,
இது வரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இவ்விபத்து
ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில்
பலியாகியிருக்கக்கூடும் என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக