செவ்வாய், 31 ஜூலை, 2012

நான் ஈ - புதிய சாதனை! பில்லா 2 out மீண்டும் நான் ஈ release


Naan Ee Continues With Packed Houses
சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான்.
இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம். தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2.
இந்தப் படத்தா ஜூலை 13-ம் தேதி திரையிட்டார்கள். ஆனால் 12-ம் தேதி இரவுக் காட்சிகூட நான் ஈ ஹவுஸ்புல்லாக ஓடியது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு கூட்டம் குவிந்தும் நான் ஈயைத் தூக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் பில்லாவைத் திரையிட்டார்களாம்.
பில்லா 2-ன் வசூல் நிலவரம் என்ன என்பது கோடம்பாக்கத்துக்கே தெரிந்த கதைதானே.

இப்போது காசி தியேட்டர் பக்கம் போனவர்களுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்! பில்லாவைத் தூக்கிவிட்டு மீண்டும் நான் ஈயைத் திரையிட்டுள்ளனர். மறு திரையிடலுக்கும் ஈ-க்கு பெரிய பேனர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர். வெளியிட்ட நாளிலிருந்தே நல்ல கூட்டம்!
காசி தியேட்டர் என்றல்ல... தமிழகத்தின் பல ஊர்களிலும் பில்லாவுக்கு பதில் நான் ஈ மீண்டும் திரையிடப்பட்டிருப்பதுதான் விசேஷம்!

கருத்துகள் இல்லை: