சனி, 18 ஜூன், 2011

Alaveddi, சரவணபவானின் பேச்சு இனக் குரோதத்தையூட்டும்,கூட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை


அளவெட்டியில் அமளி துமளியில் முடிந்த கூட்டமைப்பு கூட்டம் !
உண்மையில் நடந்தது என்ன ?
- நமது யாழ் நிருபர், யூன் 17
நேற்று புதன் கிழமை யாழ் அளவெட்டி மகாஜனா சபை மண்டபத்தில் நடைபெற்று அமளி துமளியில முடிவடைந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் காங்கேசன்துறைப் பொறுப்பாளர் மற்றும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களிடமிருந்து தெரியவரும் விபரங்களின்படி நடந்த உண்மைச் சம்பவங்கள் வருமாறு.

நேற்று மாலை 3 மணியளவில் இக்கூட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் மாலை 6 மணிக்குப் பின்னரே கூட்டம் ஆரம்பமாகியிருந்துள்ளது. அத்துடன் இக் கூட்டத்தில் ஆகக் கூடியளவு 50 பேர்கள் வரையிலேயே சமூகமளித்திருந்துள்ளனர் அத்துடன் இவர்களுள் 25 பேர்கள்வரை உள்ள+ராட்சி சபை வேட்பாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இக் கூட்டம் பற்றிய விபரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்த பின்னர் இக் கூட்ட ஏற்பாட்டுக்கான அனுமதியைப் பெறும்படி இக் கூட்ட ஏற்பாட்டாளர் உள்ள+ர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரத்திலுள்ள ஒருவரினால் ஒன்றுக்கு மேற்பட்டதடவைகள் அறிவுறுத்தப்பட்டிருந்துள்ளார் எனத் தெரியவருவதுடன், இதுவரை தெரியவராத காரணங்களுக்காக இவ் அறிவுறுத்தல் உதாசீனப்படுத்தப்பட்டு கூட்ட ஏற்பாட்டாளர்களினால் இக் கூட்டத்திற்கான பொலிசாரின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இக் கூட்டம் ஆரம்பமாகிய பின்னர் இராணுவத்தினர் வந்திருந்து கூட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டிருந்ததா என விசாரித்துள்ளனர். அப்போது அவ்வாறு அனுமதிகள் ஏதும் பெறப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் அனுமதியின்றி கூட்டத்தை நடாத்துவது சட்டப்படி தவறு என்றும் கூட்டத்தை நிறுத்தமாறும்கூறி திரும்பிச் சென்றுள்ளனர். அவர்களுடைய இந்த அறிவுறுத்தலையும்மீறி கூட்டம் தொhடர்ந்து நடந்துள்ளது. அத்துடன் இக் கூட்டத்தில் பேசியவர்கள், குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் திரு சரவணபவானின் பேச்சு இனக் குரோதத்தையூட்டும் வகையில் அமைந்திருந்ததாக இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஒருவர் கவலை தெரிவித்தார்.

இப் பிரச்சாரக்கூட்டம் ஆரம்பமாகி, இரண்டு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் முடிவடைந்து மூன்றாவதாக ‘உதயன்’ பத்திரிகை நிறுவனர் திரு சரவணபவான் பேசிக் கொண்டிருந்தபோது சீருடையில் வந்திருந்த ஏறத்தாள பத்து இலங்கை ராணுவத்தினர் கூட்டத்தை கலைக்க முற்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புப் பிரிவினருடன் வாய்த் தர்க்கம் ஏற்பட்டு இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில் வந்திருந்த ராணுவத்தினர் சிலர் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களை பொல்லுகளால் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். இது தவிர அங்கிருந்த வாகனங்கள் எவையும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கவில்லையென்றே தெரியவருகிறது. அக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தமது வாகனங்களில் வந்திருந்தனர் எனவும், ஏனையோர் மோட்டார் சையிக்கில்களிலும், துவிச்சக்கர வண்டிகளிலுமே வந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரினதும் வாகனங்கள் எவையும் தாக்குதல்களுக்கு உள்ளாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் அல்லோகல்லோலப்பட்டு எழுந்து ஓடும்போது அங்கு தரித்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சையிக்கில்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் ஒன்றில்மேல் ஒன்று விழுந்து சில சேதங்கள் ஏற்பட்டிருக்கலாமெனவே பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அத்துடன், கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் இன்று காலையே திரும்பிச் சென்று தமது மோட்டார் சையிக்கில்களையும், துவிச்சக்கர வண்டிகளையும் எடுத்துச் சென்றதாகவும், அவைகள் எவையும் அடித்து நொருக்கப்பட்டதாக அடையாளங்கள் எவையும் இருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர். 

இவைகiளே உண்மையில் நடந்த சம்பவமாயிருக்க யாழ் குடாநாட்டுப்பத்திரிகைகள் சில இச்சம்பவத்தை திரித்து ஊதிப் பெருப்பித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக யாழ் ‘தினக் குரல்’ மற்றும் ‘உதயன்’ பத்திரிகைகள் மிக மோசமான முறையில் செய்திகளை திரித்து வெளியிட்டுள்ளன. இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே இக்கூட்டத்திற்கு பொலிசாரின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லையெனவும், 10ற்கும் 15ற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான ராணுவத்தினரே ரகளையில் ஈடுபட்டதாகவும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள நிலையில், பொலிசாரின் அனுமதிபெற்றே இக்கூட்டம் நடாத்தப்பட்டதாகவும், கூட்ட மேடையில் மட்டும் 50ற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் ஏறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இப் பத்திரிகைகள் செய்திகளை திரித்து வெளியிட்டுள்ளன. ‘உதயன்’ பத்திரிகை, இக் கூட்டத்திற்கு பொலிசாரின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்ற விடயத்தை மறைத்துள்ளதுடன், வழமைபோல தமது நிறுவன இயக்குனர் நூழிழையில் உயிர் தப்பினார் என கதை எழுதியுள்ளது.

கருத்துகள் இல்லை: