புதன், 15 ஜூன், 2011

சீனா அணை,"பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, பாதிப்பு வராது என்கிறார் கிருஷ்ணா

புதுடில்லி : ""பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டியிருப்பதால், இந்தியாவுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இமயமலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, சீனா வழியாக இந்தியாவுக்குள் பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே சீனா அணை கட்டி நீரை மடை மாற்றம் செய்வதால், இந்தியாவுக்குள் வரும் பிரம்மபுத்ரா நதி நீரின் அளவு குறைந்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குறிப்பிடுகையில், "திபெத்தில் உள்ள சாங்மு என்ற இடத்தில், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, நீர்மின் திட்டத்துக்காக சீனா அணை கட்டியுள்ளது. சீன அரசின் இந்த நடவடிக்கையால், நம் பகுதிக்கு வரும் தண்ணீர் அளவில், உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. பிரம்மபுத்ரா நதியின் பெரும்பாலான நீர்பிடிப்பு பகுதிகள், இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் உள்ளது. எனவே, இந்த விஷயம் முக்கியமானதாகும். பிரம்மபுத்ரா நதி நீரை சீனாவின் வடக்கு பகுதிக்கு மடை மாற்றம் செய்வது அந்நாட்டின் நீண்ட நாள் திட்டம். எனவே, இது புதிய தகவல் அல்ல. இருப்பினும் இந்த விஷயம் குறித்து அந்நாட்டிடம் தூதரக மட்டத்தில் விவாதிக்கப்படும். பிரம்மபுத்ரா நதி விவகாரத்தால் கார்கில் போன்ற சம்பவம் ஏதும் ஏற்பட்டு விடாது. ஏனென்றால், நம் எல்லைபுறம் மிகுந்த கண்காணிப்பில் உள்ளது. ராணுவ மட்டுமல்ல, மற்ற ஏஜன்சிகளும் எல்லைபுறத்தை கண்காணிக்கின்றன' என்றார். கசகஸ்தானில் நடக்கும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க கிருஷ்ணா சென்றுள்ளார். அங்கு சீனாவிடம் இது குறித்து விவாதிக்கப்படுமா என்பதற்கு அவர் பதில் ஏதும் கூறவில்லை.

Krish - India,சிங்கப்பூர்
2011-06-15 05:09:27 IST Report Abuse
சீனா காரன் ஒரு தடவ முடிவு பண்ணிடான்னா, அவன் பேச்ச அவனே கேக்க மாட்டான். இதுக்கு காரணம் தேச பற்று இல்லாத குப்பை காங்கிரஸ். All credit goes to Sonia. எந்த பார்டர் விஷயத்திலும் காங்கிரசால் ஒன்னும் கிழிக்க முடியவில்லை. சீனா வின் இந்த செயல், சில வருடங்களில், இந்தியாவை கண்டிப்பாக பாதிக்கும்.
vsrinivasan - pondicherry,இந்தியா
2011-06-15 05:06:11 IST Report Abuse
சீனா அண்டை நாடுகள் எல்லாவற்றுடனும் சுமுகமான உறவில் இல்லை ! நம்மை கேட்காமல் எப்படி பிரமபுத்ராவில் அணை கட்டலாம் ? நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாமா ? இந்திரா காந்தி இப்போது இருந்து இருந்தால் அவர் சும்மா விடுவாரா ? தண்ணீர் போன்ற வாழ்வாதார பிரச்சனை எதிர்கால சந்ததிகளை பாதிக்கும் ! பாராளு மன்றத்தில் விவாதிக்க வேண்டும் !
john - tirunelveli,இந்தியா
2011-06-15 04:55:07 IST Report Abuse
"சீனா அணை கட்டியதற்கு கருணாநிதிதான் காரணம்"-ஜெயலலிதா அதிரடி . வெளியுறவுத்துறையை எங்கள் அம்மையாரிடம் கொடுங்கள் .அப்புறம் சீனா பாடு திண்டாட்டம்தான்
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
2011-06-15 02:47:39 IST Report Abuse
சீனாவுடன் மோத, இந்தியா தயாரில்லை. இந்தியாவை கலந்து ஆலோசித்த பிறகு தான், அணையை சீனா கட்டியதா என்றும் தெரியவில்லை. இனிமேலாவது, இது குறித்து இந்தியா பேச்சு வார்த்தை நடத்துமா என்று புரியவில்லை. மொத்தத்தில், இது நமக்கு இழப்பு தான்
KRISHU - DELHI,இந்தியா
2011-06-15 02:23:59 IST Report Abuse
நேரு, மைசூர் ராஜா ஜெயச்சாமராஜ உடையாரை மெட்ராஸ் கவர்னராக நியமித்தார் ! மெட்ராஸ் வந்து பதவியை ஒப்புக் கொண்டு போனதோடு சரி ! பிறகு சாகும்வரை வரவே இல்லை ! அதிகாரிகள் எல்லாம் கொபுகலித் தூக்கிக் கொண்டு மிசொருக்கு ஓடினார்கள் ஒவ்வொரு முறையும் கையெழுத்து வாங்க ! பின்னர் V .V .கிரியை இந்த்ரா ஜனாதிபதி ஆக்கினார், இருமுறை ! நீட்டிய இடத்தில் எல்லாம் கைநாட்டுப் போட்ட " ரப்பர் ஸ்டாம்ப் " என்று பெயர் வாங்கிய முதல் ஜனாதிபதி என்று பேர் வாங்கினார் ! முதல் முறை பதவிக் காலம் முடிந்து போகுமுன் அவர் மனைவி ஜனாதிபதி மாளிகையின் கிச்சன் கதவைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போனார் ! இரண்டாவது முறை திரும்பி வந்தபின் சொன்னார் ' எங்கூர்ல, வெளியே போகும் போது கிச்சன் கதவைப் பூட்டிட்டுப் போனா , மறுபடித் திரும்பி வருவோம்னு ஒரு நம்பிக்கை உண்டு . அதான் அப்படிச் செஞ்சேன் ! " என்று பேட்டி கொடுத்தார் ! இந்தக் கிருஷ்ணா , கர்நாடகா மந்திரியாக இருந்த போது , சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் , நமக்குத் தண்ணீர் தர முடியாது என்று பெரிய கலவரம் எல்லாம் பண்ணி, சுப்ரீம் கோர்ட் வாயாலேயே " ரௌடி ஸ்டேட் " என்று தன்னாட்டுக்கே பெயர் வாங்கிக் கொடுத்த பெரிய மனிதன் ! இப்போது வெளி உறவுத்துறை மந்திரி ! பேசுவதைப் பார்த்தீர்களா ? "சீன அரசின் இந்த நடவடிக்கையால், நம் பகுதிக்கு வரும் தண்ணீர் அளவில், உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. " உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது என்றால் பின்னாளில் ஏற்படும் என்றுதானே அர்த்தம் , காவேரி போல ? "...இந்தியாவுக்குள் வரும் பிரம்மபுத்ரா நதி நீரின் அளவு குறைந்துள்ளது." என்று தினமலர் சொல்கிறது ! " அங்கு சீனாவிடம் இது குறித்து விவாதிக்கப்படுமா என்பதற்கு அவர் பதில் ஏதும் கூறவில்லை." தண்ணி விவகாரம் என்றாலே இந்த ஆள் ஒரு மாதிரித்தான் ஆகி விடுகிறார் ! இன்னும் என்னென்ன பதவிகளைக் கன்னடியர் கெடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை !
brahmaputra river in tibet photo
Brahmaputra River in Tibet, photo: Gerry Chu.
In a move that is sure to prove increasingly controversial as the details become more fleshed out, Chinese officials in Lhasa, Tibet have indicated that they are considering developing a series of dams in southern Tibet.
The Guardian reports that the director of the region's water resource department said, “Tibet is rich in water resources and has good potential for setting up more hydropower stations and dams. With the economic development of Tibet we need more resources. We will take great care in protecting Tibet’s natural life and consider the [impact] on society.”
Though the exact number of dams being considered has not been specified, the proposal has already aroused opposition:

கருத்துகள் இல்லை: