வெள்ளி, 17 ஜூன், 2011

மோசடி.கல்வி முதலாளிகளை கல்வியாளர்கள் என சமசீர் கல்வி திருத்தகுழுவில் சேர்த்திருப்பது


சமச்சீர்க் கல்வி குழுவில் மாற்றம் வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் 

டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.
ஆனால், 
கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர்.

கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது

அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.
சமச்சீர்க் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டுவிட்டனர்.

எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் ஒசார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலை பிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

நமது கருத்து : அய்யா நீங்கள் மட்டும்தான் மிகச்சரியான ஒரு எதிர்கட்சியாக உங்கள் கடமையை செய்துள்ளீர்கள். ஏனைய எதிர்கட்சிகள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒய் ஜி பார்த்தசாரதியை சுட்டி காட்டினால் ரஜனியின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவருமே என வாய்மூடி கொண்டிருக்கிறார்கள். கப்டன் மற்றுமொரு கல்வி முதலாளி போதாக்குறைக்கு  ரஜனியை வேறு பகைக்க அவருக்கு என்ன பைத்தியமா/?
ஒரு கொசுறு செய்தி, ஜெயலலிதாவின் சித்தி ஸ்ரீ வித்யா பிரபல நாடக நடிகையாவார். அவர் நீண்ட காலமாக இதே பார்த்தசாரதி குடும்பத்தின் நாடகங்களில் நடித்து வந்துள்ளார். இந்த ஒய் ஜி பார்த்தசாரதியின் மகன்தான் பிரபல காமடி நடிகன் ஒய் ஜி மகேந்திரன். 
 Kopi ,Montreal
அடடே, கல்வியாளர் என்பதற்கு புது விளக்கத்தினை அரசாங்கம் கொடுத்திருக்கிறதே. மகிழ்ச்சி. பெருமளவிற்குப் பணம், பெரிய அந்தஸ்து கொண்ட மனிதர்கள் தங்கள் பிள்ளைகளை பெருமளவிற்கு பணம் செலுத்தியும், இக்கல்வி நிலையங்கள் ஏழை குழந்தைகளை தகுதியில்லாதவர்கள் என சேர்க்க மறுக்கும் கல்வி நிலையங்களின் தாளாளர்கள் தான் கல்வியாளர்கள் என்றால், சபாஷ், பலே. இந்த இரு கல்வியாளர்களும் எனக்கு தெரிந்த வரையில் சமசீர் கல்வி சம்பந்தமாக இதுவரை ஏதும் வாய் திறக்கவில்லை என்றே அறிகிறேன். ஜெயலலிதாவிற்கு கருணாநிதியின் மீது இருக்கும் கோபத்தின் அளவு எத்துனையானது என்று எவரும் நினைக்க வேண்டாம். மெட்ரிக் பள்ளிகள் இந்த அரசிற்கு கொடுக்கும் பிரஷர் எத்துனையானது என்பதே இதிலிருந்து விளங்குகிறது.

கருத்துகள் இல்லை: