சனி, 18 ஜூன், 2011

தாத்தா சன் டி.வி.யையும் தி.மு.க.வையும் பிரிப்பதற்கு பார்ப்பனர்கள் சதி

சமீபத்தில் கலைஞரை சந்தித்த தயாநிதி, "தாத்தா சன் டி.வி.யையும் தி.மு.க.வையும் பிரிப்பதற்கு பார்ப்பனர்கள் சதி செய்கிறார்கள் . அதில் சிக்கிக்கொள்ளக் கூடாது' என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கலைஞர், "ஆட்சி யிலிருந்தப்பவே அரசுக்கு எதிராகத் தானே பேப்பரிலும் சேனலிலும் செய்தி வந்துக்கிட்டிருந்தது. இதில் பிரிக்கிறதுக்கு யார் சதி செய்யப்போறா?' என்று கேட்டிருக்கிறார்.

கலைஞரிடம் தயாநிதி, "என்னைத் தாக்குவது மூலமா உங்களைத் தாக்குவதா அவங்க நினைக்கிறாங்க தாத்தா. இதையெல்லாம் அவங்க திட்டமிட்டே தொடர்ந்து செய்துகிட்டிருக்காங்க. நீங்க கவனிச்சிக்கிட்டிருப்பீங்க' என்று சொல்ல, "நானும் கவனிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன்' என்ற கலைஞர், "2ஜி விவகாரம் ஆரம்பிச்சப்ப ராசா என்ன சொன்னார்? தயாநிதி என்ன செஞ்சாரோ அதைத்தான் நான் செய்தேன்னு சொன்னார். அவரையும் எதிர்த்துதான் நீங்களும் நடந்துக்கிட்டீங்க. இப்ப அவர் ஜெயிலில் இருக்கிறார். என்ன செய்ய முடியும்? இப்ப நான் யாரையும் சந்திக்க முடியாது. எதையும் பேசுறதா இல்லை. நீங்களே பார்த்துக்குங்க' என்று தயாநிதியிடம் சொல்லிவிட்டாராம்.

டெல்லியில் பிரதமர் அலுவலக வட்டாரத்திலும் தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பான பேச்சுகளே அதிகளவில் நடை பெறுகின்றன. சி.பி.ஐ.யிடம் பல ஆதா ரங்களைக் கேட்டு வாங்கி, பிரதமர் அவற்றைப் பார்வையிட்டிருக்கிறார் என்கிறது அவரது வட்டாரம். தொலைத்தொடர்புத் துறைக்கு தயாநிதி அமைச்சராக இருந்தபோது நடந்த வில்லங்கங்கள் பற்றிய பல விவரங்கள் அவருக்குத் தெரியும் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரம்.

தயாநிதி தொலைத்தொடர்புத்துறை அமைச்ச ராக இருந்தபோது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு உத்தர விட, அவருடைய சென்னை வீட்டிற்கு அந்த இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஒரு மினி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அளவுக்கு அமைந்த இந்த இணைப்புகளுக்காக சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளத் திற்கு ரோட்டில் கேபிள்கள் பதிக்கப்பட்டன. அதாவது, மாறன் சகோதரர்களின் போட் கிளப் சாலை வீட்டிலிருந்து சன் டி.வி.யின் பழைய அலுவலகம் வரையில் இந்த இணைப்பு களைப் பயன்படுத்துவதற் காகத்தான் இந்த கேபிள் பதிப்பு வேலை நடந்தது.

அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லின் 323 இணைப்புகளும் சன் டி.வி. குழுமச் சேனல் களில் நடை பெறும் நிகழ்ச்சி களுக்குப் பயன் படுத்தப்பட்டன என்பதுதான் முக் கியமானது. இவை சாதாரண தொலை பேசி இணைப்புகளை விட விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என் இணைப்பு களைக் கொண்டவை. செயற்கைகோள்களை விட அதிக விரைவாக உலகின் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களை யும் வீடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டு போய்ச் சேர்க்கும் அதிநவீனத் தகவல் தொடர்பு இணைப்பு களாகும்.

டிஜிட்டல் வழியிலான தகவல் களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும், வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும், ஆடியோ-வீடியோ சேவை களை அளிக்கவும் இந்த இணைப்புகள் வலிமையானவை. இவற்றைத் தனியார் மூலம் பெறவேண்டுமானால் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.

ஆனால், தொலைத்தொடர்புத் துறைக்கு தயாநிதி மாறன் பொறுப்பு வகித்ததால், அவற்றை இலவசமாகவே சன் டி.வி. நிறுவனம் பெற்றுக்கொண்டது. இதன் மூலமாக மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறைக்கு சுமார் 440 கோடி ரூபாய் இழப்பு என்றும் மேலே குறிப்பிட்ட அனைத்துக் குற்றச் சாட்டுகளையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்தது.

பத்திரிகைகளில் சமீபத்தில் இந்தத் தகவல் வெளியாகியிருந்தாலும், இந்த இணைப்புகள் கொடுக்கப்பட்ட 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதுபற்றிய புகார்கள் கிளம்பியதால், மத்திய உளவுத்துறை மூலம் இது சம்பந்தமான அறிக்கை, பிரதமர் மன்மோகன்சிங்கின் கைக்குப் போனதாம். அவர் அதைக் கவனமாகப் பரிசீலித் திருக்கிறாராம்.

தொழிலதிபர் சிவசங்கரன், சி.பி.ஐ யிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் எதிர்பாராத பல முக்கிய விஷயங்கள் இருப்பதாக, அவரது வட்டாரத்திலிருந்து தகவல் வருகிறது. பல ஆவணங்களையும் அவர் கொடுத்திருக்கிறாராம். இதை அறிந்தவர்கள் சிங் கப்பூரிலிருந்த சிவ சங்கரனிடம் பொது நண்பரை அனுப்பி பேசி யிருக்கிறார்கள். அர சியல் சூழ்நிலைகள் அப்படியும் இப்படியும் மாறக்கூடியவை. பிசினஸ் அப்படிப் பட்டதல்ல என்று சொல்லி நீண்ட நேரம் பேசியிருக்கிறார் அந்த நண்பர்.

அப்போது சிவசங்கரன், "எனக்கு இதுவரை அவர்களால் 7000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. அவங்க நிறுவனத்தில் எனக்கு ஷேர் கொடுப்பார்களா? எனக்கு என்னென்ன நிலைமைகள் ஏற்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும். என்னைத் தமிழ்நாட்டிற்கே வரமுடியாதபடி, கேஸ் போட்டு விரட்டியடித்தார்கள். என்னுடைய உறவினர்கள் எல்லோரையுமே பொய் வழக்கில் போலீஸ் தேடியதால் பல கஷ்டங்களை அனுபவித்து வெளிநாட்டுக்கு போனார்கள். இதையெல்லாம் நான் எப்படி மறக்க முடியும்?' என்று கேட்டிருக்கிறார்.

2ஜி விவகாரத்தின் அடுத்த கட்டம் பற்றி, பிரதான எதிர்க்கட்சி யான பா.ஜ.க கேள்வி எழுப்பத் தொடங்கி யிருக்கிறது. நாடாளு மன்றக் கூட்டத் தொடரில் தயாநிதிக்கு எதிரான கேள்விகள் தான் அதிகம் இருக் கும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆரம்பத்திலிருந்தே, 2ஜி விவகாரத்தில் தன் மீது எந்தக் குற்றச்சாட்டும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங், தயாநிதி மாறன் தொடர்பான சர்ச்சைகளிலும் அதே நிலையைத்தான் மேற்கொள்வார் என பா.ஜ.க எதிர்பார்க்கிறது.

சி.பி.ஐ.யும் இதே எதிர்பார்ப்பில்தான் உள்ளது. ஜூலை முதல் வாரம் முதல், தன்னுடைய அடுத்த கட்ட விசா ரணையை விரைவுபடுத்துவதில் சி.பி.ஐ. தீவிரமாக இருக்கிறது. ஜூலை 4ஆம் நாள், தயாநிதியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாநிதிக்கு முன்பாக, தொலைத்தொடர்புத்துறைக்குப் பொறுப்பு வகித்த பா.ஜ.க அமைச்சர் அருண்ஷோரியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. தயாநிதி குறித்து சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் முக்கியமான சில தொழிலதிபர்களும் தங்களுக்கு வந்த மிரட்டல்கள், நெருக்கடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றை சி.பி.ஐ.யிடம் பல வழிகளிலும் தெரிவித்தபடியே இருக்கி றார்களாம். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பிரதமரின் கவனத்திற்கும் சென்றுவிடுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சி.பி.ஐ.யும் மேலும் பல விவரங்களைத் திரட்டியபடியே இருக்கிறது.

தற்போது மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ள தயாநிதியை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்றால், அதற்கு பிரதமரின் அனுமதி தேவை. விசாரணை யைத் தொடர்ந்து, சி.பி.ஐ. தாக்கல் செய்யவிருக்கும் 2ஜி தொடர்பான மூன் றாவது சார்ஜ் ஷீட்டில் தயாநிதி யின் பெயர் இடம் பெறும் என்ற தகவலும் தலை நகரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. சி.பி.ஐ. விசா ரணை என்று வரும்போது அவரை ராஜினாமா செய்யச் சொல்லும் பிரதமர் அலுவலகம் என்கிறார்கள் டெல்லி காங் கிரஸ் பிரமுகர்கள்.

சி.பி.ஐ. விசாரணை, சார்ஜ் ஷீட் எனத் தொடர்ச்சியாக புயல் வீசும் என்பதையே தலைநகர அரசியல் தட்பவெப்ப நிலை காட்டுகிறது. அதனைத் தடுப்பதற்கான வேலைகளை தயாநிதியும் அவரது தரப் பினரும் வேக வேகமாக மேற்கொண்டு வருகிறார்கள். புயலைத் தடுக்க முடியுமா, அது கரை கடக்கத்தான் செய்யும் என்கிறார்கள் டெல்லி அரசியல் பிரமுகர்கள்.

கருத்துகள் இல்லை: