வியாழன், 7 அக்டோபர், 2010

நாதஸ்வர வித்துவான் கே.எம் பஞ்சாபிகேசனுக்கு


நாதஸ்வர வித்துவான் கே.எம் பஞ்சாபிகேசனுக்கு
யாழ். பல்கலையின் கௌரவ கலாநிதிப் பட்டம்
யாழ். பல்கலைக்கழகத் தின் இவ்வாண்டுக் குரிய பட்டமளிப்பு விழாவில் பிரபல நாதஸ்வர வித்துவான் சாவகச்சேரி கே. எம். பஞ்சாபிகேசனுக்கு கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் புகழடைந்த பஞ்சாபிகேசன் அவர்கள் 1924 ஆம் ஆண்டு தவில்வித்துவான் முருகப் பாபிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வராய்ப் பிறந்தார். இவரது சகோதரன் நடராஜ சுந்தரம்பிள்ளை. அவர்கள் பிரபல தவில்வித்துவான் ஆவார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1934 ஆம் ஆண்டளவில் பிர பல நாதஸ்வர வித்துவான்களான சண் முகம்பிள்ளை, அப்புலிங்கம்பிள்ளை, ராமைய்யாபிள்ளை, கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் நாதஸ்வர இசைப் பயிற்சியினைப் பெற்றார்.
தொடர்ந்து தனது இசையாற்றலை வளர்த்துக் கொள்வதற்காக தமிழகம் சென்ற இவர் நாதஸ்வர இசை மாமேதைகளான திருவாவடுதுறை ராஜரட்ணம்பிள்ளை, “கக்காயிநடராஜசுந்தரம்பிள்ளை ஆகியோரிடம் பயின்றார். பின்னர் ஐயம்பேட்டை வேணுகோபால்பிள்ளையிடம் பயிற்சி பெற்று பாரம்பரிய மரபுவழிக்கச்சேரி செய்யும் முறைமையினை நன்கு பயின்று கொண்டார்.
தனது 14வது வயதில் முதல் நாதஸ் வரக் கச்சேரியை நிகழ்த்திய இவர் அன்றுதொட்டு படிப்படியா கப் பெரும் புகழ்கொண்டார்.
அளவெட்டி மாணிக்கம் இரத்தினம் அவர்களைத் தனது வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்ட இவருக்கு மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைக ளும் உள்ளனர். இவரது புதல்வர்களான நாகேந்திரம் அவர்களும், விக்னேஸ்வரன் அவர்களும் தந்தையின் தடம்பற்றி நாதஸ்வரத் துறையில் புகுந்து வித்து வான்களாய் விளங்கி வருகின்றனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான்களான திருவாரூர் இலட்சியப்பா, திருநெல்வேலி பிச்சை யப்பாகம்பர், மாசிலாமணி போன்றோரோடும் நம் நாட்டின் பிரபல கலைஞர் களான நல்லூர்சிவாசாமி, அளவெட்டிபத்மநாதன் போன்றோரோடும் இணை ந்து பல கச்சேரிகளை இவர் வாசித்துள்ளார். உல கப்புகழ்பெற்ற தவில்மேதை தட்சிணாமூர்த்தி அவர்களு டன் இணைந்து இவர் செய்த கச்சேரிகள் மறக்க முடியாதவை.
இவர் அகில இலங்கை கம்பன் கழகத்தின்இசைப்பேரறிஞர்விருதினையும், கலாசார அமைச்சின்கலாபூஷணம்விருதினையும், யாழ். இந்து கலாசார சபையின்சிவகலாபூஷணம்விருதினையும் பெற்ற வராவார். 1998 இல் வடகிழக்கு மாகாண சபையினால் இவருக்கு ஆளுநர் விருதும் வழங் கப்பட்டது.
திருக்கேதீஸ்வர தேவஸ்தானத்தினால்இசைவள்ளல் நாதஸ்வரகலாமணிஎனும் பட்டமும், கல்வி அமை ச்சினால்நாதஸ்வர கானவாரிதிஎனும் பட்டமும், இந்து கலாசார அமைச்சினால்ஸ்வரஞானதிலகம்எனும் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டன. மலேசியா, சிங்கப்பூர், பாங்கொக், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் இவரது இசைக்கச்சேரிகள் நிகழ்ந்துள்ளன.
தனிமனித ஒழுக்கம், பண்பாடு, தன்னடக்கம், ஆகிய நற்பண்புகளின் உறைவிடமாய்த் திகழும் பஞ்சாபிகேசன் அவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகம் இவ்வாண்டு கெளரவ கலாநிதி விருதினை அளிப்பது இசை ரசிகர்கள் அனைவரதும் மனங்களையும் மகிழ்வுறச் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: