செவ்வாய், 5 அக்டோபர், 2010

Jaffna University.சீரழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல்லை ஆதரிக்குமாறு கோரிக்கை!

யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் அவர்களை உபவேந்தராக நியமிப்பதே தமிழ் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு சிறந்தது. கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் இருந்து சுமுகமான நிலைக்கு திரும்பி கொண்டுள்ள தமிழ் சமுதாயத்திற்கு கல்வி நிலையை கட்டியெழுப்ப வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ் சமூகத்தின் அதியுயர்ந்த கல்வி ஸ்தானத்தை கட்டியெழுப்ப வேண்டிய யாழ் பல்கலைக்கழகத்தின் நிலை சீரழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. ஆகவே இதனை தலைநிமிர்ந்து முன்னெடுத்து செல்லக்கூடிய ஆற்றல் மிகு உபவேந்தரை தெரிவு செய்யவேண்டியது தமிழ் சமூகத்தின் கடப்பாடாகும்.
யாழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலையை மாற்றியமைக்க கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழ் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை கட்டியெழுப்ப வேண்டும் என்று கருதும் ஒவ்வொரு தமிழனும் விரைவில் இடம்பெறவுள்ள உபவேந்தருக்கான தேர்தலில் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் தரமான பல்கலைக்கழகமாக மாற்றக் கூடிய தகுதியும், ஆளுமையும் உள்ள ரட்ணஜீவன் ஹுல் அவர்களிற்கு ஆதரவு வழங்க வேண்டும்.
இந் நியமனத்தில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டிய அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவிற்கு சமூக பொறுப்பு இருப்பதால் அவரும் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும், அதேவேளை பல்கலைக்கழகத்தின் கவுண்சில் உறுப்பினர்களும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இம்மடலின் இறுதியில் ரட்ணஜீவன் ஹுல் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வரவேண்டும் என்று ஆதரிப்பவர்கள் கீழே உள்ள இணைப்பிற்கு சென்று உங்களது பெயர்களை பதிவு செய்து கொள்வதுடன் உங்களது நண்பர்கள், உறவினர்களிற்கு இதனை எடுத்து விளக்கி ஆதரவு வழங்குங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: