சனி, 9 அக்டோபர், 2010

பெரியார்-அண்ணா ஒருபுறம் ராஜராஜன்-ராஜேந்திரன் பெயரை மறுபுறம் சூடிக்கொள்வதும்

வருணாசிரமம் வளர்த்தவனே ராஜராஜன்!
(அருணன்)
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தித்தான்- ராஜராஜ சோழன் காலத்தில் தான் தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வேர் பிடித்து நின்றது. மூன்று வகை நிலவுடை மையாளர்கள் தோன்றினார்கள். பெரும்பா லான நிலங்கள் பெரும் வேளாளர்களுக்குச் சொந்தமாக இருந்தன. இதுவெள்ளான் வகைஎனப்பட்டது. அரசுக்கு வரி செலுத்திய கிராமம் இந்த வகையைச் சார்ந்தது என்கிறது திருவாலங்காட்டுச் செப்பேடு. கிராமத் தொழில் செய்வோருக்கு ஊழிய மானியமாக ஒதுக்கப்பட்ட நிலம் இரண்டாவது வகையா கும். பிராமணர்களுக்குத் தானமாக தரப்பட்டபிரமதேயம்”, “தேவதானம்எனப்பட்டவை மூன்றாவது வகையாகும்.

நிலமானது பிராமணர்கள் குழு ஒன்றுக் குக் கூட்டாகத் தரப்பட்டால் அது பிரமதேயம், அதுவே தனியொரு பிராமணருக்குத் தரப்பட் டால் அதுஏகபோக பிரமதேயம்”. கல்கி எழு தியபொன்னியின் செல்வன்சரித்திர நாவ லில் அநிருத்த பிரம்மராயர் என்கிற மந்திரி வருவார். இவருக்குப் பத்துவேலி நிலம் இப் படி ஏகபோக பிரமதேயமாகத் தரப்பட்டதாக அன்பில் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

முதலாம் ராஜராஜன், ராஜேந்திரனின் ஆட்சிக்காலங்களில் பிரமதேயக் கிராமங் களின்தனித்தன்மையைக் காக்க வேண்டி இதர வகுப்பினரின் நில உரிமைகள் சுருக்கப் பட்டனஎன்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார். இதற்குச் சில திட்டவட்டமான ஆதாரங்களைத் தந்திருக் கிறார் அவர். அவை-”ராஜராஜனின் 17ம் ஆண்டில் (கி.பி.1002) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பிரமதேயங்களில் நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல் லோரும் தங்களுடைய நிலங்களை விற்று விடவேண்டும். நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போரும் மட் டும் இதற்கு விதிவிலக்கு. அவ்வாறு விற்கப் பட்ட நிலங்களை வாங்கும் பிராமணர்கள் பணத்தை உடனடியாக இதற்காக நியமிக்கப் பட்ட விசேஷ அதிகாரியிடம் கட்டிவிட வேண்டும். ராஜகேசரி சதுர்வேதி மங்கலத் தில் இவ்வாறு விற்கப்பட்ட நிலங்களை அர சனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி அவ்வூர்க் கோவிலுக்குத் தானமாக அளித் தார். இதுபோன்றுமுதலாம் ராஜேந்திரன் காலத்திலும் புலியூர்க் கோட்டத்தில் உள்ள வேளச்சேரி என்னும்பிரமதேயத்திற்கும் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது

ராஜராஜ சோழன் காலத்து சமூகக் கட்ட மைப்பு வருணாசிரமமே என்பதை இது துல்லியமாகக் காட்டுகிறது. அதுவே தங்களது ஆதிக்கத்திற்கு ஏற்றது என்று நிலப்பிரபுக் களும், அவர்களது தலைவராகியப் பேரரசரும் உணர்ந்து அதை நிலைநிறுத்தியிருக்கிறார் கள். கோவில் கட்டுமானமும், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட சமூக உறவுகளும்கூட அடிப் படையில் நிலப்பிரபுத்துவக் காப்பு வேலைகளே.

கோவில்களுக்குத் தானமாக வழங்கப் பட்ட நிலங்களேதேவதானம்”. சிவன் கோவில் என்றால் சூலாயுதமும், விஷ்ணு கோவில் என்றால் சங்கு சக்கரமும் பொறிக்கப்பட்ட கற்கள் அந்த நிலத்தில் ஊன்றப்பட்டன. இந்த நிலங்களிலிருந்து கிடைத்த வருமானத் தைக் கொண்டு வருணாசிரமக் கல்வி போதிக்கப்பட்டது. நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார்- “உயர்கல்வியானது சாதி தழு வியே கற்பிக்கப்பட்டது. மடங்கள்-கோவில் களைச் சார்ந்தபள்ளிகளிலும் கல்லூரிகளி லும் இது பயிற்றுவிக்கப்பட்டது

முதலாம் ராஜேந்திரன் காலத்தில் தென் னாற்காடு மாவட்டத்தின் (எண்ணாயிரம்) ராஜராஜசதுர்வேதி மங்கலத்தில் ஒரு கல் லூரி இயங்கியது. அங்கே 340 மாணவர்களும், 14 ஆசிரியர்களும் இருந்தார்கள். அவர்கள் படித்ததும் இவர்கள் சொல்லிக்கொடுத்ததும் சமஸ்கிருத நூல்கள். நான்கு வேதங்கள், பல சூத்திரங்கள், ரூபாவதரா இலக்கணம் போன்ற வையே அந்தக் கல்லூரியின் பாடத்திட்டம். ஆக, வேதக்கல்வி சொல்லிக்கொடுத்தது தான் சோழர்கால ஆட்சி.

இதிலே வேதனையானதொரு நகைமுரண் உண்டு. அதை சாஸ்திரியார் முத்தாய்ப்பாகக் கூறுகிறார்- “சமஸ்கிருதத்தில் உயர்படிப்பு முறை அமைந்திருந்தது குறித்து நமக்கு மேற் கண்ட விபரங்கள் தெரிகின்றன. ஆனால், அதே காலத்தில் தமிழ்க் கல்வியின் தன்மைஎவ்வாறு இருந்தது என்பது பற்றி நம்பிக்கை யான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை

வருணாசிரமத்தின் ஒரு முக்கியமான கூறாக, தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்துசமஸ்கிருதத்தை முனனிறுத்துவது இருந் தது. இடைக்காலத்தில் சமண-புத்த மதங் களைஒழித்துக்கட்டத் தமிழ் இசைப்பாடல்க ளைப் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, காரியம்முடிந்ததும் மீண்டும் தங்கள் பழைய நிலைமைக்குத் திரும்பி விட்டார்கள். அதைத் தான் ராஜராஜன் - ராஜேந்திரன் காலம் உணர்த்துகிறது. சிதம்பரம் கோவிலில் பதுக் கப்பட்டிருந்த மூவர் தேவாரத்தை ராஜராஜன் மீட்டெடுத்தான் என்பதும் கர்ண பரம்பரைக் கதையாகக் கூறப்படுகிறதே ஒழிய வலுவான கல்வெட்டு ஆதாரம் இல்லை.

மற்றொரு புகழ்பெற்ற வரலாற்றாளரான கே. கே.பிள்ளையும் கூட கீழ்க்கண்டமுடிவுக்கே வந்தார் - “பிற்காலச் சோழர் காலத்தில் வட மொழியும் வடமொழி நூல்களும் எந்தஅள விற்குப் போற்றி வளர்க்கப்பெற்றன என்ப தைத் தெளிவாய் அறிந்து கொள்ள முடிகின் றது. ஆயின், தமிழ்மொழி வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்க வில்லைதேவாரம் ஓதுவதற்குக் கோவில்க ளில் ஓதுவார்களை நியமித்தான் ராஜராஜன் என்பதைத் தவிரமற்றபடி அவனது காலத்து கல்வி முறை சமஸ்கிருத மயமாகவே இருந்தது. கோவிலில் அர்ச்சனை மொழியாக சமஸ்கிருதம் இருந்தது என்றே நீலகண்ட சாஸ்திரியார் கருதுகிறார். அதற்கு ஏராளமான கல்வெட்டு ஆதாரம் உண்டு என்கிறார்.

அரசு நிர்வாக அமைப்பில் சில புதுமை களைச் செய்தான். உள்ளாட்சி அமைப்பு களை முறைப்படுத்தினான் என்பது உண் மையே. ஆனால் அவையெல்லாம் வருணாசி ரமக் கட்டமைப்பிற்குள் உள்ளடங்கியவையே என்பதை மறந்துவிடக்கூடாது. பிரபலமான உத்திரமேரூர்ச் சாசனம் அன்று நிலவிய கிராம சபை பற்றிப் பேசுகிறது. அதன் உறுப்பினர் களது தகுதி பற்றியும் பேசுகிறது. அதில் ஒன்று- “பிராமணர் அல்லாதவர்கள்கிராம சபையில் உறுப்பினராகும் தகுதியற்றவர்கள் ஆவர்இதன் பொருள் பிரமதேயக் கிராமங் களை பிராமணர்களே நிர்வாகம் செய்து கொண்டார்கள் என்பது. பிற கிராமங்களை பிராமணரல்லாத நிலப்பிரபுக்கள் நிர்வாகம் செய்து கொண்டார்கள். இந்த இரண்டிலும் பஞ்சமர்கள் போன்ற அடித்தட்டு உழைப் பாளிகளுக்கு எந்தப்பங்கும் இல்லை என் பதே யதார்த்தமாகும். அவர்கள் கிட்டத்தட்ட அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் பண்ணையடிமைகளும் இருந் தார்கள், தினக்கூலிகளும் இருந்தார்கள்.

இதிலே பெண்கள் நிலை மிகப் பரிதாப மானது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு இரு பெண்கள், அவர்களது நண் பர்கள், உறவினர்கள் தங்களைத்தாங்களே விற்றுக்கொண்டார்கள். வயலூர் கோவிலுக் குத் திருப்பதிகம் பாடவும், ஈசனுக்கு வெண்சாமரம் வீசவும் மூன்று பெண்கள் விலைக்கு வாங்கப்பட்டார்கள்.

இது பிற வேலைகளுக்கு விற்கப்பட்டவர் கள், வாங்கப்பட்டவர்கள். தேவரடியார்கள் என்று தாசித் தொழிலுக்காகவே உருவாக்கப் பட்டவர்கள் கதை தனி. அது பற்றி நிறைய கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தென்னாற் காடு திருவக்கரை சந்திர மவுலீசுவரர் கோவி லுக்கு சில வேளாளப்பெண்மணிகள் தேவரடி யார்களாக கி.பி.1098ல் விற்கப்பட்டார்கள்.எங்களடியாள் அங்காடியும் இவள், மகள் பெருங்காடியும், இவள் மக்களும் திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக நீர் வார்த்துக் கொடுத்தோம்என்பது நம்மை உருக்கும் அக்னி வார்த்தைகள்.

சதி எனப்படும் உடன்கட்டை ஏற்றுகிற பழக்கம் சங்க காலத்திலேயே துவங்கிவிட் டது. அது சோழர்கள் காலத்தில் சர்வசா தாரணமாக நடந்தது. ராஜராஜனின் தந்தையா கிய சுந்தரசோழன் மாண்டபோது அவனோடு உடன்கட்டை ஏறினாள் அவனது மனைவி வானவன் மாதேவி என்பாள். தென்னாற்கா டில் கிடைத்த வீரராஜேந்திரனின் (கி.பி.1063-1070) கல்வெட்டு ஒன்று கணவனை இழந்த மனைவியின் மனப்போராட்டத்தை உணர்த்து கிறது. தனது சக்களத்திகளுக்கு அடிமையாக வாழ்வதைவிட அவள் உடன்கட்டை ஏற விரும்பினாள். இதைத் தடுக்க முயன்றவர் களைக் கண்டு அவளுக்கு கோபம் வந்த தாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அன்று நிலவிய பலதார மணத்தின் கொடுமை, மனைவியே விரும்பி உடன் கட்டை ஏறியதாகத் தோற்றம் காட்டும் தந்திரம் எனப் பல செய்திகள் வெளிப்படுகின்றன.

பொருளியல் வாழ்வில் நிலப்பிரபுத்துவ மும், அதன் சமூகக் கட்டமைப்பாக வருணா சிரமமும் இருந்தன என்பதே ராஜராஜன்-ராஜேந்திரன் காலத்து நடப்பாகும். வருணா சிரமம் வளர்த்தவர்களே இவர்கள். இதை மறந்துவிட்டு அவர்களைப் போலவே தற்போ தைய மத்திய - மாநில அரசுகள் இயங்குகின் றன என்று காங்கிரஸ், திமுக தலைவர்கள் மார்தட்டுவது கேலிக்குரிய விஷயமாகும். எது பெருமை என்று தெரியாமலேயே பெருமை யடித்துக் கொள்வதாகும்.

பெரியார்-அண்ணா பெயரை ஒருபுறம் சொல்வதும், ராஜராஜன்-ராஜேந்திரன் பெயரை மறுபுறம் சூடிக்கொள்வதும் முற்றிலும் முரணான விஷயங்கள் என்பதை திமுக தலைவர்கள் உணர வேண்டும். கட்சிக் கரைவேட்டி கட்டிக்கொண்டு, புதிய அரசு செயலகக் கட்டிடத்தில்அமைச்சர் நாற்காலி யில் உட்கார்ந்து கொண்டு, இருபுறமும் பெண் கள் சாமரம்வீசவேண்டும் என்று நினைக் கக்கூடாது!

வரலாற்றை முன்னோக்கி நடத்த வேண் டுமே தவிர, பின்னோக்கி நகர்த்தக்கூடாது. தமிழனின் புராதனக் கலை ஆற்றலைப் போற்றுவோம், பாதுகாப்போம். அதே நேரத் தில் அவன் கடந்து வந்த சமூக-பொருளாதார ஒடுக்குமுறைக்கு மீண்டும் திரும்ப மாட் டோம் மாறாக சமத்துவ சமுதாயப் பாதையில் நடைபோடுவோம் என்பதில் உறுதியாக இருப்போம்.

கருத்துகள் இல்லை: