செவ்வாய், 5 அக்டோபர், 2010

5 தங்கம் வென்றது இந்தியா பட்டியலில் 2 ம் இடம்

புதுடில்லி: காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெறுவார்கள் என்ற இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தங்க மகன்கள் அபினவ்பிந்த்ரா மற்றும் ககன்நரங் வீரமகன்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியா தற்போது தங்கம் 5, வெள்ளி 4, வெண்கலம்2 என மொத்தம் 11 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 8 தங்கம், 8 வெள்ளி 3 வெண்கலம் ‌பதக்கம் வென்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 நேற்று முன் தினம் துவங்கிய காமன்வெல்த் கோலாகல போட்டியில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தாலும், கோலாகல துவக்க விழாவை அடுத்து இந்தியா தனது பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக்கொண்டது.

முதல் நாள் ஆட்டத்தில் பதக்கம் பெற்ற வீரர்கள்: முதல் நாள் ஆட்டத்தில் நேற்று இந்திய வீராங்கனைகள் பளு தூக்கும் 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சோனியாசானு வெள்ளி பதக்கத்தையும், சந்தியார் ராணி வெண்கலம் பதக்கத்தையும் பெற்றனர். 56 கிலோ பிரிவு பளூதூக்குதல் பிரிவில் இந்திய வீரர்கள் சுகேன் தேவ் வெள்ளி பதக்கமும், ஸ்ரீநிவாசா வி ராவ் வெண்கல பதக்கமும் வென்றனர். நேற்றைய போட்டியில் இந்தியா 2 வெண்கலம், 2 வெள்ளி மொத்தம் 4 பதக்கம் பெற்றது.

இன்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் அபினவ்பிந்த்ரா ,ககன்நரங் ஜோடியினர் வெற்றி பெற்று தங்கம் வென்றனர். ககன் நரங் 99, 100, 100, 99, 100, 100 என மொத்தம் 598 புள்ளிகளையும், அபினவ் பிந்த்ரா, 100, 98, 99, 100, 99, 99 என 595 புள்ளிகளையும் பெற்றனர். இங்கிலாந்து ஜோடியான ஜேம்ஸ் ஹக்கிள், கென்னி பார் 2வது இடத்தையும், வங்கதேசத்தின் அப்துல்லா ஹெல் பாக்கி, முகம்மது ஆசிப் ஹூசேன் கான் 3வது இடத்தையும் பிடித்தனர்.

ஒரே நாளில் 5 வது தங்கம் : அபினவ் பிந்த்ரா - ககன்நரங் ஜோடியினர் தங்கம் வென்ற சில நிமிடங்களில் மீண்டும் ஒரு தங்கம் கிடைத்தது. 25 மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அனீஷா சயீத், ராகி சர்னோபட் ஜோடியினர் மற்றாரு தங்கப் பதக்கத்தை வென்றனர். 50 மீ பிஸ்டல் பிரிவில் தீபக் சர்மா, மற்றும் ஓம்கார் சிங் வெள்ளிப் பதக்கம் ஜோடியினர் வென்றனர். மாலை 60 கிலோ பிரிவில்  மல்யுத்த பிரிவில் ரவிந்தர் சிங் இங்கிலாந்து வீரர்  கிறிஸ்டோபர் போசனை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல் பளூதூக்குதல் 74 கிலோ கிரேசா ரோமன் பிரிவில் இந்தியாவின் சஞ்சய் தங்கப்பதக்கம் வென்றார். பளூதூக்குதல்  96 கிலோ கிரேசோ ரோமன் பிரிவில்  இந்தியாவின் அனில் குமார்  தங்கப்பதக்கம் வென்றார்.இதன் மூலம் இந்தியா 5 வது தங்கப்பதக்கத்தை வென்றது.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா தனது தங்க பதக்க வேட்டையை இன்று துவக்கியிருப்பது இந்தியர்களின் மனதை மகிழ்விக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 7 வது இடத்தில் இருந்த இந்தியா முன்னோக்கி நகர்ந்து வருகிறது.

பதக்க பட்டியலில் முன்னேற்றம் : கடந்த 2002 ம் ஆண்டில் நடந்த கான்வெல்த போட்டியில் இந்தியா துப்பாக்கி வீரர்கள் மொத்தம் 24 பதக்கமும், 2006 ல் மெல்போர்னில் நடந்த போட்டியில் 27 பதக்கமும் பெற்றனர். கடந்த பததக்க பட்டியலில் 22 தங்கம், 17 வெள்ளி 11 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியது.

இந்த முறை இந்தியா தற்போது 2 வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. கடந்த காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலியா 84 தங்கம், , 69 வெள்ளி , 68 வெண்கலம் ‌என மொத்தம் 221 பதக்கம் பெற்று காமன்வெல்த் போட்டியின் சாம்பியனாக திகழ்ந்து வருகிறது.
மணிவேல் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-10-05 13:07:42 IST
வாழ்த்துக்கள்! வெற்றி பயணம் தொடரட்டும், வாழ்க பாரதம், வளர்க இந்தியாவின் புகழ்...
தமிழ்ச்செல்வன் - coimbatore,இந்தியா
2010-10-05 13:07:29 IST
உங்களுடைய வெற்றி இளம் வீரர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை ஏற்படுத்தும்........ பதக்க வேட்டை தொடர வாழ்த்துக்கள் ........
H.MANIKANDAN - RAMANATHAPURAM,இந்தியா
2010-10-05 12:44:01 IST
CONGRADULATION,FOR GIVING TIMLY INFORMATION- DINAMALAR...
pradeepa - coimbatore,இந்தியா
2010-10-05 12:41:33 IST
congrats அபினவ் பிந்த்ரா,ககன்நரங் happy to hear this. All the best indians. u rock......
ஜெயராமன். ந. - BHAVANISAGAR,இந்தியா
2010-10-05 12:29:25 IST
தங்க பதக்கங்கள் குவியட்டும், தரணி எங்கும் இந்தியன் புகழ் பரவட்டும். வாழ்த்துக்கள்....
ப.சுப்ரமணியன் - குன்னூர்,இந்தியா
2010-10-05 12:09:29 IST
இன்னும் பல வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்...
2010-10-05 12:08:14 IST
வாழ்த்துக்கள். ஆனால் தென் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழ் நாட்டுக்கு வாய்ப்பும் ஊக்கமும் மத்திய அரசால் மறுக்கபடுகிறது அல்லது வஞ்சிக்கிறது. எங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவை மிஞ்ச யாரும் இல்லை....
indhu - chennai,இந்தியா
2010-10-05 12:04:54 IST
வாழ்த்துக்கள்!!! இந்தியாவின் பெருமையை மேலும் நிலை நாட்டுங்கள்!!!...
மு.பாலகிருஷ்ணன் - பணகுடி,இந்தியா
2010-10-05 12:03:17 IST
வாழ்த்துக்கள் அபினவ் & ககன்நரங்........ மேலும் வெற்றி பெற்று இந்திய கௌரவத்தை நிலை நாட்டுங்கள்.ஜைஹிந்த்...
ஆனந்தபாபு.k - tamilnadu,இந்தியா
2010-10-05 12:02:02 IST
vallthukkal. again win to gold medal...
ஹாஜா - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-05 11:54:05 IST
வாழ்த்துக்கள் அபினவ் & ககன்நரங்........ மேலும் வெற்றி பெற்று இந்திய கௌரவத்தை நிலை நாட்டுங்கள்....ஜைஹிந்த்......
அப்துல்லா - dubai,இந்தியா
2010-10-05 11:51:04 IST
வாழ்த்துக்கள். மென்மேலும் பல பதகங்களை பெற என் இதயம் கனிந்த vallthukall india...

கருத்துகள் இல்லை: