வெள்ளி, 8 அக்டோபர், 2010

நவீன சந்தைப் பகுதியிலிருந்த 6 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை


சட்டவிரோதமான முறையில் பொருட்களைக் கடைகளுக்கு முன்பாக வைத்திருந்தாகத் தெரிவித்து யாழ் நவீன சந்தை உட்பகுதியிலிருந்த ஆறுக்கு மேற்பட்ட கடை உரிமையாளர்கள் யாழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். பொலிஸாருடன் யாழ்.மாநகரசபை ஊழியர்களும் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸார் அராஜகமான முறையில் தம்மிடம் நடந்துகொள்வதாக வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பொலிஸாரும் மாநகர சபையும் இணைந்து மாநகரசபை சட்டத் திற்கு அமைவாக நடைபாதை வியாபாரத்தை அகற்றுவதாகத் தெரிவித்து தினம் தினம் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து பொருட்களைப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்கின்றனர். பின்னர் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தும் வருகின்றனர். இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக மாலை வேளைகளில் பிரதான வீதியயான்றில் தனியார் போக்குவ ரத்து வண்டிகளை நிறுத்துவதற்கான அனுமதியை பொலிசார் மறுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர ்அதேவேளை, தென்னிலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த அரசாங்கத்தின் ஆதரவாளர் ஒருவருக்கு மட்டும் அனுமதி வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: