வியாழன், 7 அக்டோபர், 2010

Kilinochi.குடும்பத்தையே அழித்து விடுவேன் என்று பயமுறுத்தி பாலியல்

குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவவீரர் ஒருவர் தன்னிடம் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்று பயமுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கிளிநொச்சியைச் சேர்ந்த 20வயதுடைய யுவதியொருவர் யாழ். நீதிமன்றத்தில் நிகழ்ச்சித்திட்ட உதவியாளரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 31திகதி 20 வயதுடைய திருமணமாகாத யுவதி யொருவர் பெண்பிள்ளையொன்றைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தையை வளர்க்க தனக்கு விருப்பமில்லையென்றும் அதனைச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க விரும்புவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைக்கும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்துக்கும் அப்பெண் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். இந்தக் கடிதம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந் தராசா குறித்த பெண்ணி டமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு நிகழ்ச்சித்திட்ட உதவியாளரிடம் உத்தரவிட்டார். அந்தப் பெண்மணி நிகழ்ச்சித்திட்ட உதவியாளரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்த விடயங்கள் வருமாறு:, வவுனியா அருணாச்சலம் முகாமில் தங்கியிருந்தபோது இராணுவத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த இராணுவவீரர் ஒருவர் என்னுடன் உடலுறவு கொள்ளுமாறும் இல்லையெனில் எனது குடும்பத்தையே அழித்து விடுவேன் எனவும் என்னைப் பயமுறுத்தினார். புலனாய்வாளரின் மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிந்ததால் நான் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டியநிலை ஏற்பட்டது. எனது குழந்தையை வளர்க்க விரும்புகிறேன். எனது குழந்தையை பதுளையில் உள்ள மாமியார் வீட்டில் வளர்க்க எண்ணியுள்ளேன் என்று அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் நீதிவான் நீதிமன்றத்தில் அதனைச் சமர்ப்பித்தார். இதன் பின்னர் குழந்தையை அழைத்துச்செல்ல நீதிமன்ற நீதிவான் அனுமதியளித்தார். இதுபற்றிய மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை: