வெள்ளி, 8 அக்டோபர், 2010

கதாநாயகன் குளிரூட்டிய அறையில் பணநோட்டுகளில் புரண்டிரு க்க, ரசிகனோ மரத்தில் ஏறி பதாகை கட்டுவதிலும்

சினிமாவின் பிறழ்ச்சியும் இன்றைய ரசிகனும்!
முத்தமிழ் வடிவங்களெனப் போற்றப்படும் இயல், இசை, நாடகக் கலைகளெல்லாம் எமது ஆன்றோரால் வெறு மனே பொழுதுபோக்குக்காக போற்றிப் பேணப்பட்டவை அல்ல... அன்றைய மக்களின் உயிருடன் இரண்டறக் கலந்து விட்ட கலைகளாகவே அவை இருந்தன. முத்தமிழ் கலைகளில் தேர்ச்சி பெற்ற சான்றோர் அக்கலைகளையெல்லாம் தெய்வீகக் கலைகளாகவே பேணி வந்தனர்.
மனங்களை நெறிப்படுத்தும், ஆற்றுப்படுத்தும் அன்றைய தெய்வீகக் கலைகளெல்லாம் எமது இன்றைய சமூகத்தில் இறுதி மூச்சு விட்டுக் கொண்டி ருக்கின்றன. மறுபுறத்தில் நோக்குமிடத்து அக்கலைகள் பிறழ்ச் சியடைந்து செல்கின்றன. இன்னொரு தரப்பினர் தெய்வீகக் கலைகளை பணமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இயல், இசை, நாடகக் கலைகளின்நதிமூலம்பாரத தேசமென் பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இலக்கியம், இசை, நாட கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட அத்தனை கலை களையும் இந்திய தேசத்திடமிருந்துதான் நாம் பெற்றுக் கொண் டோம்.
கலைகளால் கிட்டியுள்ள பெரும்பேறு குறித்து நாமெல்லாம் களி ப்படையும் காலம் சிறிது சிறிதாக முடிவுக்கு வந்து கொண்டி ருப்பதாகவே தெரிகிறது.
தெய்வாம்சம் பொருந்திய எமது பாரம்பரியக் கலைகளை இன்றைய சினிமாவும் சின்னத்திரையும் படிப்படியாக விழுங்கிக் கொண்டி ருக்கின்றன. புதுமையென்பதன் பேரிலான இந்த கபZகரம் விரைவில் முழுமையடைந்து விடும் ஆபத்து எம்முன்னே உள் ளது. இதற்குச் சமாந்தரமான விதத்தில் இன்றைய தலைமுறை யினரின் ரசனையும் எங்கோ தறிகெட்டுச் சென்று கொண்டிரு க்கிறது.
சினிமாவென்பது சக்தி வாய்ந்ததொரு ஊடகம். சிக்கல் நிறைந்த கருப்பொருளை இலகு முறையில் பாமர மகனுக்கும் புரிய வைக்க முடிந்ததானஇலகு ஊடகம்என்று சினிமாவைக் கூற லாம். அக்காலத் திரைப்படங்கள் வாயிலாக பெரும் காவியங் களையே பாமர மக்களுக்கும் எடுத்தியம்ப முடிந்தது.
பெரும் இலக்கியங்களை மட்டுமன்றி சங்கீதம், நடனம் போன்ற அருங் கலைகளையும் மக்களின் காலடிக்கு எடுத்துச் சென்ற பெருமை சினிமாவுக்கே உண்டு. சினிமா சங்கீதம் கூட தனது பாதையை விட்டு விலகிச் சென்று நெடுங்காலமாகிவிட்டது. அதற்கு ஒப் பாக இன்றைய தலைமுறையினரின் ரசனையும் சித்தப் பிரமை க்குள்ளாகி விட்டதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இன்றைய தலைமுறையினர் தனது அபிமான நடிகன் ஒருவனின் திரைப்படம் வெளியானதும் பித்துப் பிடித்த நிலைக்குள்ளாவதி லிருந்து இன்றைய ரசனையின் போக்கை நாம் அறிந்து கொள்ள முடியும். அறிவீனம், பாமரத்தனம், வெகுளித்தனம், பேதமை, முதிர்ச்சியீனம் போன்ற எந்த வரையறைக்குள் இத்த கைய ரசிகனை உள்ளடக்குவதென்பதுதான் புரியாமலுள்ளது.
கதாநாயகன் குளிரூட்டிய அறையில் பணநோட்டுகளில் புரண்டிரு க்க, அவனது ரசிகனோ மரத்தில் ஏறி பதாகை கட்டுவதிலும் திரையரங்கு வாசலில் வரிசையில் வாழ்நாளைக் கழிப்பதிலும் வாழ்வையே வீணடிக்கிறான்.
இவையெல்லாம் போதாதென்று தனது கதாநாயகனின் படவெற்றிக்காக மொட்டை போட்டு சுவாமி தரிசனம் செய்வதிலும் ஆளுயரப் படத்துக்கு பாலாபி ஷேகம் செய்வதிலும் காலத்தையும் பணத்தையும் பாழாக்கி பகுத்தறிவென்பதையே கேலிக்குள்ளாக்குகின்றான்.
சினிமாவின் இன்றைய பிறழ்வு தவிர்க்க முடியாதது. அதனை வெறும் பொழுது போக்குச் சாதனம் என்று மட்டுமே நாம் கொள்ள வேண்டிய காலம் உருவாகியுள்ளது. சினிமாவின் போக்கை தடுத்து நிறுத்தும் வல்லமை ரசிகனுக்கு மட்டுமே உண்டு. ஏனெனில் அப்பாவி ரசிகனை நம்பியே இன்றைய சினிமா உள்ளது.
அபிமான கதாநாயகனுக்கு அடிமைப்பட்டுப் போன ரசிகர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்வது அவசியம். திரையில் தென்படுவது நடிகனின் நிஜ முகமல்ல’. அவனும் ஆசாபாசங்களு க்கு ஆட்பட்டுப் போன நம்மைப் போன்றதொரு பிரகிருதி தான். அங்கும் கவலைகள், கற்பனைகள், ஏக்கங்கள் உண்டு. அதனால்தான்கனவுத் தொழிற்சாலைஎன்று சினிமாவைக் குறிப்பிட்டார் எழுத்தாளர் சுஜாதா.
கல்வி, பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் துரிதமாக முன்னே றிக் கொண்டிருக்கையில், வெண்திரையில் தோன்றும் பொய் முகத்துக்காக வாழ்நாளை விரயம் செய்வதானது பேதமையின் உச்சம்தான். இளம் தலைமுறையினர் தமது நெஞ்சில் கை வைத்துப் பார்க்கட்டும்! உங்கள் இதயம் எழுப்பும் ஒலி உங்கள் சுயகெளரவத்தை உரசிப் பார்க்கும் ஒலியாக இருக்கட்டும்!

கருத்துகள் இல்லை: