புதன், 6 அக்டோபர், 2010

Call center ஊழியர் பிரதிபா கொலை வழக்கு : பெங்களூரு விரைவு கோர்ட் தீர்‌ப்பு

பெங்களூரு : கால் சென்டர் ஊழியர் பிரதிபா கொலை வழக்கில், இன்று ­பெங்­க­ளூ­ரு ­வி­ரை­வு ­கோர்ர்ட் தீர்ப்பு வழங்கி­யது. பெங்களூரில் கால்சென்டர் ஊழியராக பணியாற்றியவர் பிரதிபா. இவரை பணிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, டிரைவர் சிவகுமார் கடத்திச் சென்று, கற்பழித்து கொலை செய்தார். இச்சம்பவம் 2005 டிசம்பர் 13ம் தேதி நடந்தது. இவ்வழக்கு விசாரணை முடிவடைந்து, கடந்த செப்டம்பர் 17ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், செப்., 28ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி குதலி அறிவித்திருந்தார். ஆனால், அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அக்., 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் ­பெங்­க­ளூ­ரு ­ஐ­கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கி­ய­து. டி­ரை­வர் ­சி­வக்­கு­மார் ­குற்­ற­வா­ளி ­எ­ன ­நீ­தி­ப­தி­ ­தெ­ரி­வித்­தார். ­நீ­தி­ப­தி ­கு­­த­லி ­கூ­று­கை­யில் : சி­வக்­கு­மார் ­மீ­தா­ன ­கற்­ப­­ழிப்­பு ­மற்­றும் ­கொ­லை ­குற்­றச்சாட்­டு­கள் ­ஆ­தா­ரங்­க­ளு­டன் ­நி­ரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­­து ­என்றார்.
கண்ணீர் சிந்திய தாய் : கோர்ட்டில் சிவக்குமார் குற்றவாளி என நீதிபதி அறிவித்தவுடன் , பிரதீபாவின் தாய் கவுரம்மா கண்ணீர் மல்க மகிழ்ச்சியுடன் தீர்ப்பை வறவேற்றார். 5 ஆண்டுகளாக தீர்ப்புக்காக காத்திருந்ததாக கூறிய அவர். சிவக்குமாருக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடயிருப்பதாக கூறினார். சிவக்குமாருக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றார். இந்த வழக்கில் சிவக்குமாருக்கு அளிக்கவிருக்கும் தண்டனையை அக்டோபர் 8ம் தேதி அன்று நீதிபதி அறிவிக்க இருக்கிறார்.

பிரியதர்சனி வழக்கு - தண்டனை குறைப்பு : இதே போல் டில்லியில் நடந்த மற்றொரு கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. டில்லி பல்கலைக்கழக மாணவி பிரியதர்சினி மட்டூ கடந்த 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் , சந்தோஷ் குமார் சிங் என்பவரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2006ம் ஆண்டு டில்லி ஐகோர்ட் சந்தோஷ் குமார் சிங்குக்கு தூக்கு தண்டனை அளித்தது. இதனை எதிர்த்து சந்தோஷ் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் இன்று ­­சுப்­ரீம் ­கோர்‌ட்டில் ­வி­சா­ர­ணைக்­கு ­வந்­த­து. ­மேல்­மு­றை­யீட்­டு ­ம­னு­‌­வை ­வி­சா­ரித்­த ­நீ­தி­ப­தி­கள் சந்­தோஷ் ­தூக்­கு தண்­ட­னை­யை ­கு­றைத்­து ­ஆ­யுள் ­தண்­ட­னை­யா­க ­உத்­த­ர­விட்­ட­னர். சந்தோஷ் தற்போது திஹார் சிறையில் இருக்கிறார். இவர் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசு சுரேஷ் குருசாமி - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-06 15:56:10 IST
இது போன்ற தவறுகளுக்கு உடனுக்குடன் தண்டனை தரப்பட வேண்டும்.ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் வழக்கு நடப்பதாலும் ,பின்னர் தண்டனை குறைப்பு செய்வதும் தான் குற்றங்கள் பெருக காரணமாக அமைகிறது.இது போன்ற இருபது வழக்குகளில் தூக்கு தண்டனை கொடுங்கள்.பின்னர் தவறு செய்ய பயப்படுவான் . குற்றமற்ற இந்தியா உருவாகும்....
ரவி - தோஹா,கத்தார்
2010-10-06 15:34:39 IST
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "கற்பழிப்பு மற்றும் கொலை" என்ற குற்றத்திற்கு சரியான தண்டனை கொடுத்தாகி விட்டது என்றே வைத்துக்கொண்டாலும் மகளை கொடூரமாக சாககொடுத்த தாய்க்கு என்ன பரிகாரம் செய்யப்பட்டது உங்கள் சட்டத்தில்? செத்தவளைப்போல அவளும் பாதிக்கப்பட்டவள் தானே? குற்றம் செய்தவன் செய்த குற்றத்திற்கு தானே தண்டனை அனுபவிக்க போகிறான்? இது எப்படி அந்த தாய்க்கு கிடைத்த நீதியாகும்?இந்த தாய் மன ரீதியாக எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பாள்...? அரசியலமைப்பு சட்டத்தில் இது போன்ற கொடூர குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பதில் மாற்றம் தேவை....இல்லையென்றால் இது ஒருவகை அநீதியே!!! மனித உரிமை மீறலே!!...
ஹனீப் தாரக் - துபாய்,இந்தியா
2010-10-06 15:02:46 IST
வினோத் மிகவும் சரியாக சொன்னீர்கள்...இந்தியாவின் சட்டத்துறை இந்தியர்களின் பின்னடைவை காட்டுகிறது...அரசிடம் ஒரு கேள்வி; எப்போ இந்த நிலை மாறும்? அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா????...
கருத்து குஞ்சுமணி - தீர்ப்பைகண்டுநொந்துபோனவன்தெரு,இந்தியா
2010-10-06 15:01:39 IST
அய்யா என்னையா சட்டம், என்னய்யா நாடு இது. இந்த நாடும் உருப்படாது, இந்த நீதி வழங்கும் சட்ட அதிகாரிகளும் திருந்த மாட்டார்கள்.இதுபோல் தண்டனை கொடுத்தால் இந்த கற்பழிப்பு கொலை நடந்து கொண்டுதான் இருக்கும்.இந்த நாடு உருப்படுவதற்கு வழியே இல்லையா....
srinivasan - chennai,இந்தியா
2010-10-06 14:54:00 IST
கற்பழிப்பு என்பது காட்டுமிராண்டிதனத்தின் உச்சகட்டம். இதற்கு மரண தண்டனை வரவேற்கதக்கது....
Bமுரளிதரன் - துபாய்uae,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-06 14:53:48 IST
துபாயில் சமீபத்தில் இது போன்ற ஒரு வழக்கில் விரைவில் 6 மாதத்திற்குள் மரணதண்டனை தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. ஒரு பாகிஸ்தானி குழந்தையை இந்நாட்டு குடிமகன் கற்பழித்து கொன்றதுதான் வழக்கு. இந்நாட்டு குடிமகன் என்பதற்காக சட்டம் வளைந்து கொடுக்கவில்லை . தண்டனை கடுமையாக இருந்தால்தான் குற்றம் குறையும். அதிகாரி மகன், அரசியல்வாதி மகன் என்பதற்காக சட்டத்தை வளைப்பது என்பது எல்லாம் நம் நாட்டின் சாபக்கேடு. சட்டம் அனைவருக்கும் சமம் என்பது உறுதிபடுத்த வேண்டும்....
பர்தி - லக்ஷ்மாங்குடி,இந்தியா
2010-10-06 14:43:03 IST
கற்பழிப்பு வழக்கில் சிவகுமாருக்கு தூக்கு தண்டனை கொடுப்பதே சரி . இதற்கு முன் கல்லூரி மனைவியை கற்பழித்து கொலை செய்தவருக்கு தண்டனை குறைப்பு செய்தது தவறு. இதுபோன்ற மன்னிப்புகளால் தான் குற்றம் அதிகரிக்கிறது ....
mano - nz,நிக்கர்குவா
2010-10-06 14:28:57 IST
கண்டிப்பாக சட்ட திருத்தம் வேண்டும்...... மிக கடுமையான சட்டம் இருந்தால் தான், மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்...... இப்பொழுது உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக யாராவது தொடர்ந்து முழுமையாக போராடினால்தான் ஓரளவாவது நியாயம் கிடைக்கிறது...... அதுவும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை...... சட்டத்தில் மாற்றம் செய்ய இனிமேலும் தாமதித்தால், அதை யாருமே மதிக்காமல் போக கூடும்......!...
வண்டுமுருகன் - மதுரை,இந்தியா
2010-10-06 14:04:35 IST
கண்டிப்பாக பிரதீபாவை பறிகொடுத்த தாய்க்காக மட்டும் அல்ல மனிதாபிமானதுடன் வாழும் இந்த மனித இனம் ஒழுக்கம் தழைத்து நல் வழி கோலாக இருக்க குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட அந்த கல் நெஞ்ச காமுகன் கயவன் தூக்கிலிட்டு சாகடிக்கபடவேண்டும் என்பதே மனித நெஞ்சம் கொண்ட இந்த வாசகனாகிய என் கருத்து.வாழ்க நீதி வளர்க நற்குணம் ....
வினோத் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-06 13:09:50 IST
ஒவ்வொரு வழக்குக்கும் 5 (அ) 10 ஆண்டுகள் கழித்தே தீர்ப்பு கிடைக்கிறது... கிடைக்கும் தீர்ப்பும் பிறகு மேல் முறையீடு செய்து மாற்றபடுகிறது ஏன்? சட்டம் உயர்நீதிமன்றதிற்கும், உச்சநீதிமன்றத்துக்கும் வெவ்வேறாக உள்ளதா! இல்லை நீதிபதிகளின் தவறினால் ஏற்படுகிறதா? இப்படி நடப்பதால் இருதரப்பினர், காவல் துறையினர், வழக்கறிஞர், நீதிபதி, பிரஸ் என்று அனைத்து தரப்பினரின் நேரம், பணம் எத்தனை வீணடிக்க படுகிறது. ஏன் இதை சரி செய்ய சட்ட நிபுணர்களும், அரசியல் தலைவர்களும் நினைப்பது இல்லை. பொறியியல், மருத்துவம், விவசாயம், வங்கி என இதில் உள்ள அத்தனை துறைகளும் மற்றும் மனிதனின் ஆடை, அணிகலன்கள், பழக்கவழக்கம், பண்பாடு, ஒழுக்கம் என்று அனைத்தும் காலத்திற்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் சட்ட துறை மட்டும் ஏன் அதே நிலையில் அதே எழுதிய புத்தகங்களையே பின் தொடர்கிறது. சட்டத்துறை ஒன்றும் வரலாறு இல்லையே! மற்ற முடியாது என்று கூற........
செய்தி படித்து நொந்தவன் - செய்யார்,இந்தியா
2010-10-06 13:03:34 IST
ஐ எ எஸ் அதிகாரி மகனுக்கு சிவப்புல இல்லாம பச்சைல ரதம் ஓடுதா...இது ரொம்ப மோசமான ஒரு செய்தி...படித்து மிக கவலை படுகிறேன்...காசிருந்தால் பவர் இருந்தால் குற்றம் செய்தவன் கூட சட்ட திட்டம் நீதி இல் இருந்து தப்பித்து விடலாம் என்பதற்கு நல்ல எடுத்து காட்டு...பெண்ணை கற்பழித்து கொலை செய்தவன் உடனே தூக்கிலிட பட வேண்டும் என்பது தான் சரியான தண்டனையாக இருக்கும்.இல்லா விட்டால் இது போன்ற குற்றங்களை காசு இருப்பவன் பவர் இருப்பவன் செய்து கொண்டே இருப்பான்.இதே ஆயுள் தண்டனை பெற்றவன் ஐந்து அல்லது பத்து வருடத்துக்குள் நன்னடத்தை பேரில் பவரை வைத்து வெளி வந்து விடுவான்.கன்றாவி இது......

கருத்துகள் இல்லை: