மலையகத்தில் உள்ள மொறவக கிராமத்தில் உள்ள தனது மூத்த சகோதரியுடன் வாழ்ந்து வந்த 12வயது சிறுமியே ஒரு பிள்ளைக்கு தாய் ஆகியுள்ளார். இவரது தந்தை இறந்தவுடன் தாய் வெளியேறி சென்றுவிட்டார். இந்நிலையிலேயே சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார். குழந்தையை பெற்றெடுத்த சிறு தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் 14 வயது சிறுமி குழந்தையை பெற்றெடுத்ததாகவும் இது குறித்து மைத்துணர் மற்றும் இளம் சகோதரர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு தேசிய சிறுவர் பராமரிப்பு நிலையத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக