வியாழன், 7 அக்டோபர், 2010

Ajith starting own.பட கம்பெனி துவக்கம் தயாரிப்பாளராகும் அஜீத்

பட கம்பெனி துவக்கம்
 
 தயாரிப்பாளராகும் அஜீத்அஜீத் தயாரிப்பாளராகிறார். “குட்வில் என்டர் டெய்ன்மென்ட்” என்ற பெயரில் புதிய பட கம்பெனியை அவர் துவக்கியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் இதனை பதிவு செய்து இருக்கிறார்.
ஏற்கனவே ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றோர் பட நிறுவனங்கள் துவக்கி புதுப்படங்கள் தயாரித்தனர். அவர்கள் வரிசையில் அஜீத்தும் சேருகிறார்.
 
கம்பெனியின் அதிகாரபூர்வ தயாரிப்பாளராக மனைவி ஷாலினியை நியமிக்க முடிவு செய்துள்ளார்.
அஜீத் 1993-ல் “அமராவதி” என்ற படம் மூலம் அறிமுகமானார். “ஆசை”, “காதல்கோட்டை”, “வாலி”, “சிட்டிசன்”, “வரலாறு”, “பில்லா”, “அமர்க்களம்”, “தீனா” உள்பட பல ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: