செவ்வாய், 5 அக்டோபர், 2010

பயணிகள் பஸ் கே.கே.எஸ். வீதியூடாக கீரிமலை வரை செல்வதற்கு அனுமதி - யாழ்.கட்டளைத் தளபதி அறிவிப்பு


காங்கேசன்துறை வீதியூடாக கீரிமலை வரை செல்வதற்குப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.இவ் அனுமதி இன்றுமுதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று யாழ்.ஆயர் இல்லத்தில், சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான குழுவினருக்கும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மற்றும் யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்க ஆகியோருக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இவ் அனுமதி வழங்கப்பட்டது.

யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை வீதியூடான சேவையில் ஈடுபடும் தனியார் மற் றும் வட பிராந்திய போக்குவரத்துச் சபை யின் பஸ்கள் தெல்லிப்பழை துர்க்காபுரம் மட்டுமே செல்கின்றன. கீரிமலை வரை செல்வதற்கு படையினர் அனுமதி மறுத்திருந்தனர். எனினும் தென் னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கீரிமலை வரை செல்வதற்கு அனு மதி வழங்கப்படுகின்றது என சமாதானத்துக் கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவினர், யாழ்.கட்டளைத் தளபதியிடம் குற்றஞ்சுமத்தினர்.

இதனையடுத்து காங்கேசன்துறை வீதி யூடாகப் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் இன்றுமுதல் கீரிமலை வரை செல்ல அனு மதி வழங்கப்படுவதாகக் கட்டளைத் தளபதி கூறினார். எனினும் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் கீரிமலை வரை செல்ல அனுமதியில்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை சேந்தான்குளம் ஊடாக வும் கீரிமலைக்குச் செல்வதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை கீரிமலை வரை பஸ்சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில் பிதிர்கடன் களை நிறைவேற்றுவதற்குப் பொதுமக்கள் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கீரிமலை வரை செல்வதற்குப் படையினரால் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் உடனடியாக தனக்கு அறிவிக்குமாறு யாழ்.கட்ட ளைத் தளபதி கூறினார்.

இதேவேளை சேந்தான்குளம் வீதியூடாக கீரிமலைக்குச் செல்லும் பாதையை திறப்பது குறித்துக் கடற்படையுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத் தபளதி உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை: