புதன், 6 அக்டோபர், 2010

அன்புமணிக்கு எம்பி சீட் தருவதாக சொல்லி திமுக ஏமாற்றி விட்டது-ராமதாஸ்

சென்னை: அன்புமணிக்கு ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக திமுகவினர் கூறி வந்தனர். ஆனால் பிறகு நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி எங்களை ஏமாற்றி விட்டனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக் கோரி சென்னை சைதாப்பேட்டையில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

அதில் பேசிய ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லாதது போல கற்பனை செய்து கொண்டு, பாமகவினர் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு போராட்டம் [^] நடத்துகிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி [^] கூறியுள்ளார்.

இதில் எந்தவித கற்பனையும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை. இதை நாங்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறோம்.

2011ம் ஆண்டு பிப்ரவரியில் நடை பெறும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு சமுதாயத்தின் சமூக- பொருளாதார பின்னணியோடு கூடிய விவரங்கள் கிடைக்கும்.

தனியாக கணக்கெடுப்பு நடத்தினால் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்று தலைகளை மட்டும்தான் கணக்கெடுக்க முடியும். இதனால் எந்த பயனும் கிடைக்காது. எனவே 2011ம் ஆண்டு ஜூன் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும் என்று கூறுவது வெறும் கண்துடைப்பு.

நான் இந்த அரசை எப்போதும் போற்றிப் புகழ்ந்து கொண்டு மட்டும் இருக்க முடியாது. மக்கள் பிரச்சனைகளை முன்நிறுத்தி பாமக தொடர்ந்து போராட்டங்களை நடத்தும். இதை இந்த அரசால் தாங்க முடியவில்லை.

தமிழ்நாட்டில் மீண்டும் மேலவை அமைக்க வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியின் 25 வருட கனவு. அது இந்த ஆண்டு நிறைவேறியதற்கு பாமக எம்எல்ஏக்கள் அளித்த ஆதரவுதான் காரணம்.

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக திமுகவினர் கூறி வந்தனர். ஆனால் பிறகு நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி எங்களை ஏமாற்றி விட்டனர்.

நாங்கள் அரசியல் வியாபாரம் [^] நடத்துவதாகவும், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டுள்ளார். திமுகவும் பல்வேறு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்துள்ளது. அவர்களுக்கு பாமகவை பற்றி விமர்சிக்க தகுதியில்லை என்றார்.

அதிமுக கூட்டணியில் சேர பாமக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது
பதிவு செய்தவர்: இவன்
பதிவு செய்தது: 06 Oct 2010 9:38 am
ஊர் தாலிய அறுத்தது போதும் கொஞ்சம் நாட்டுக்காக ஒழைங்க பின்ன என்னங்க mp சீட்டுக்கு உங்கள விட்ட வேற ஆளே இந்தியால கிடையாதுனு பார்த்துகோங்க

பதிவு செய்தவர்: kannan
பதிவு செய்தது: 06 Oct 2010 9:01 am
அன்புமணி அதிகமே மக்களுக்கு அனானி இருகார் நீ மூடு வந்துடன் மற்றவன் பண்ணினதா விட அதிகமாவே தமிழ் நாட்டுக்கு திட்டம் கொண்டு வந்தார் நல்ல மந்திரியாக பதக்கம் வாங்கி இருகார் எதாவது அரிசியல் படி சும்மா வந்து கக்கி வைக்காத

பதிவு செய்தவர்: அப்பாவி நாடோடி
பதிவு செய்தது: 06 Oct 2010 8:51 am
ராமதாஸ் இப்போ போராட்டம் உன் பையனுக்கு MP சீட் தறளின்னா இல்ல ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தணும்னா ஒன்னும் புரியலை புரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்கப்பா

பதிவு செய்தவர்: குள்ள நரி
பதிவு செய்தது: 06 Oct 2010 8:40 am
ஆமா இந்த அன்புமணி என்ன பண்ணிபுட்டான் இவனுக்கு மந்திரி பதவி அட போங்கடா புன்னகுகளா

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 06 Oct 2010 7:26 am
தமிழ்நாடு மக்களே ஜாதியை பத்தி பேசாம இருகாங்க, ஜாதிய பாக்காம கல்யாணம் பண்றாங்க, இந்த நேரத்துல இந்த பன்னாட நாதாரி பொறம்போக்கு ஜாதி கணக்கெடு போராட்டம் நடத்துறான். இவன முதல சாவடிங்க. இவனுக்கு ஏழு தொகுதி குடுத்தாலும், 700 தொகுதி குடுத்தாலும், ஒரு தொகுதிகுட வின் பண்ணமாட்டான், இவன் காட்சிய யாரும் குட்டனி வச்சுகாதிங்க.

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 06 Oct 2010 7:24 am
தமிழ்நாடு மக்களே ஜாதியை பத்தி பேசாம இருகாங்க, ஜாதிய பாக்காம கல்யாணம் பண்றாங்க, இந்த நேரத்துல இந்த பன்னாட நாதாரி பொறம்போக்கு ஜாதி கணக்கெடு போராட்டம் நடத்துறான். இவன முதல சாவடிங்க. இவனுக்கு ஏழு தொகுதி குடுத்தாலும், 700 தொகுதி குடுத்தாலும், ஒரு தொகுதிகுட வின் பண்ணமாட்டான், இவன் காட்சிய யாரும் குட்டனி வச்சுகாதிங்க.

பதிவு செய்தவர்: VanniyarPadayachi
பதிவு செய்தது: 06 Oct 2010 1:27 am
Anbumani enna thiyagiya illai katchiyai vlarthavar kidaika koodiya vote-ium veenadikirar intha persusu pls excuse me to tell these things

பதிவு செய்தவர்: உண்மை விளம்பி
பதிவு செய்தது: 05 Oct 2010 10:23 pm
எதோ ஒரு காரணம் வேணும் அதிமுக அணியில் சேருவதற்கு , வெக்கமா இல்லை, என் பையனுக்கு கொடுக்கலை கொடுக்கலை என்று சொல்லிடு த்ரிவதர்க்கு, அதிமுக எழு + ஒன்று சொல்லித்தான் அங்க பொய் சேந்தே, அப்பறோம் இப்போ எதை வைச்சு சொல்லுறே திமுக ஏமாத்தி விட்டது என்று, வன்னியர் என்ற ஒரு பேரை வைச்சுக்கிட்டு இன்னும் எதனை நாளைக்குத்தான் ஏமாத்த போறாயோ..

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 05 Oct 2010 9:54 pm
இவன் சொல்வது உண்மை என்றால், இனத்துரோகி தன வாழ் நாளில் செய்த ஒரே நல்ல காரியம் இது தான்.

பதிவு செய்தவர்: மஹா
பதிவு செய்தது: 05 Oct 2010 8:25 pm
பல கோடி வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், பாண்டிச்சேரியின் வரலாற்று நாயகன், சமூக நீதி காத்த செம்மல் , தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஆசான், நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க.
பதிவு செய்தவர்: கருந்தேள் கண்ணாயிரம்
பதிவு செய்தது: 05 Oct 2010 9:45 pm
ஒ..ஒ..ஒ... அவன்தானா நீயி.
பதிவு செய்தவர்: புலிகேசி
பதிவு செய்தது: 05 Oct 2010 9:51 pm
ராஜ பாராக்கிரம என்பதை விட்டுவிட்டான் அமைச்சரே...
பதிவு செய்தவர்: இவன்
பதிவு செய்தது: 06 Oct 2010 9:44 am
கொடுத்த காசுக்கு மேல கூவராண்ட கொய்யால 10 ரூபாய்க்கு இம்மா எழுத்திற்க நன் ஒரு 11 ருபாய் தரேன் என்ன பத்தி ஒரு நாலு பிட்ட சேத்து போடு
பதிவு செய்தவர்: Ravi
பதிவு செய்தது: 05 Oct 2010 8:18 pm
ஆப்புடா மரம்வெட்டி ஆப்பு. போன மக்களவை தேர்தல்ல மக்கள் உன்னை ஒதுக்கி செருப்பால் அடித்தும் நீ திருந்தலை??. வரும் சட்டசபை தேர்தலுக்கு அப்புறம் நீயும் உன் கட்சியும் காணாம போய்டும். நீ எழுதி வச்சிக்க.

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 05 Oct 2010 8:02 pm
2 கோடி வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், பாண்டிச்சேரியின் வரலாற்று நாயகன், சமூக நீதி காத்த செம்மல் , தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஆசான், நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க...
பதிவு செய்தவர்: Ravi
பதிவு செய்தது: 05 Oct 2010 8:09 pm
அன்புமணிக்கு எம்பி சீட் வாங்குவதற்காக கட்சிக்கு கட்சி மாறும் மரம் வெட்டி , காமெடி மன்னன் டாக்டர் ராமதாஸ் வாழ்க...

பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 05 Oct 2010 7:58 pm
ஆகமொத்தத்தில், தனது இளவலுக்கு பதவியும், சீட்டும் கிடைப்பதும், கிடைக்காததுமே கூட்டணியையும், கட்சியின் எதிர்காலப் பாதையையும் தீர்மானிக்கிறது என்று மருத்துவர் ஐயா தீர்க்கமாகக் கூறிவிட்டுள்ளார். இதே மனிதர் முன்பொருமுறை "நானோ, எனது குடும்பத்தினரோ எந்தப் பதவியையாவது அடைந்தால், நடுத்தெருவில் நிறுத்திவைத்து சவுக்கால் அடிக்கலாம்" என்று கூறியதை நினைவுகூறுகிறேன்.

பதிவு செய்தவர்: aananda
பதிவு செய்தது: 05 Oct 2010 7:46 pm
ராம தாசின் அப்பா கவுண்டர் ஆக இருக்கும் போது இவர் எப்படி படையாச்சி ஆனார்? டாக்டர் சீட் வாங்கி படிச்சி இருக்கிறார். விசாரணை தேவை.

பதிவு செய்தவர்: PMK SETTU dharmapuri
பதிவு செய்தது: 05 Oct 2010 7:45 pm
iaaya vaalga......vaalga......nenga matutham karunanethi keka mudum .......vaalga ....P.M.K

பதிவு செய்தவர்: ஆகவே
பதிவு செய்தது: 05 Oct 2010 7:33 pm
மது விலக்கு கொள்கையை அமல்படுதாதால்தான் எங்கள் தங்க தலைவர் கூட்டணியை விட்டு //மக்களுக்காக // வெளியேறினார்

பதிவு செய்தவர்: tamilan
பதிவு செய்தது: 05 Oct 2010 7:04 pm
இவன் ஒரு பொறுக்கி பயல் ஊருக்கு மட்டும் உபதேசம் சொல்லுவான்

பதிவு செய்தவர்: nanthan
பதிவு செய்தது: 05 Oct 2010 6:51 pm
one நம்பர் jaltra party

பதிவு செய்தவர்: கிரீஸ் கரன்ட்
பதிவு செய்தது: 05 Oct 2010 6:40 pm
மக்களை எமதுவுதுதில் உனக்கும் திமுக வுகிம் போட்டி திமுக கெட்டி கற்றார்கள் உன்னையும் செத்து எமதி விட்டார்கள் அவள்வுதான்

பதிவு செய்தவர்: தொண்டைமான்
பதிவு செய்தது: 05 Oct 2010 6:26 pm
பாமக மற்ற கட்சிகளை விட பல மடங்கு நல்ல கட்சி

கருத்துகள் இல்லை: