சனி, 9 அக்டோபர், 2010

அருணாச்சல் தனி நாடு? அரசு துறை பரபரப்பு

புதுடில்லி இந்தியாவின் மாநிலங்களான அருணாச்சல பிரதேசத்தையும், காஷ்மீரையும் சர்வதேச "உணவு மற்றும் விவசாய அமைப்பு' தனித்தனி நாடுகளாகக் குறிப்பிட்டுள்ளது, பரபரப்பை கிளப்பியுள்ளது.
பால் பண்ணையில் இருந்து வெளியிடப்படும் பசுமைக் குடில் வாயுக்களைப் பற்றிய 2010ம் ஆண்டிற்கான அறிக்கையை, உணவு மற்றும் விவசாய அமைப்பு (எப்.ஏ.ஓ.,) வெளியிட்டுள்ளது. அதில், கிழக்கு ஆசிய நாடுகள் பட்டியலில், இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்கள், தனி நாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. "அருணாச்சல்' என்ற பெயர் "அருணாஷல்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, காஷ்மீரின் ஒரு பகுதியும் தற்போது சீனாவின் பிடியில் இருப்பதுமாகிய "அக்சய் சின்' பகுதியும் தனி நாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள எப்.ஏ.ஓ., சர்ச்சைக்குரிய பகுதிகள் பொதுவாக தனி நாடுகளாகக் குறிப்பிடப்படுவது வழக்கம் தான் என்று கூறியுள்ளது.
வினோத் - சென்னை,இந்தியா
2010-10-09 17:23:39 IST
சர்வதேச "உணவு மற்றும் விவசாய அமைப்பு' அவர்களுக்கு தெரிந்த தகவல் கொண்டு தயாரித்த அறிக்கை இது. இது போல உள்ள அமைப்பு சர்வதேச அமைப்புக்கு பொதுவான வரைபடம் கொண்டு அறிக்கை தயாரித்தல் வேண்டும், நாம் நிச்சயம் அவர்களுக்கு அதை சொல்லி தரவேண்டும்....
krishna - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-09 15:23:09 IST
Good. Now what is the reaction from PM, Is he aware about it? Who knows he is having time to monitor the corruption rate like 2G spectrum, KWG (kalmadi wealth games)......Awake India.....Arise India.....Jai Hind........
சு. சத்திய அருணாசலம். - திருநெல்வேலி,இந்தியா
2010-10-09 15:08:17 IST
இதுக்கு நம்ம ரெண்டு மத்திய அறிவு ஜீவிகள் என்ன சொல்லுவாங்க? சொல்லுங்க பாப்போம்? அதே தான், இந்தியா இதை வன்மையாக கண்டிகிரதுன்னு ஒரு அறிக்கை அனுப்பிட்டு மறுபடியும் தூங்க போய்டுவாங்க. வோட்டு போட்ட நாம தான் வேட்டு சத்தம் கேட்ட குயில் மாதிரி பதறி போய் இருக்கோம்....
வெண்ணிலா - madurai,இந்தியா
2010-10-09 13:52:50 IST
கவலை பட வேண்டாம் அருணாச்சல பிரதேசத்தை மூன்றாக பிரித்து நமக்கு ஒரு பகுதி கொடுத்தால் போதும் அதை வாங்கி கொண்டு யாருக்கும் லாபமும் இல்லை யாருக்கும் நஷ்டமும் இல்லை என்று சொல்லி கொள்ளலாம்...
வினோத் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-09 12:32:13 IST
உண்மையில் நாட்டின் நிலவரம் என்னவென்று வேறு மாநிலத்தவர்களுக்கு தெரிவிக்க அரசும் முன்வராது, தொலைக்காட்சி, நாளேடுகளும் வராது. ஏன் என்றால் இன்று அனைத்தும் அரசியலாகிவிட்டது, தனிமனிதனின் லாபனஷ்டத்தை நோக்கதிலேயே சென்றுகொண்டிருக்கிறது. குறுகிய காலத்தில் அரசியல்வாதிகளின் தொலைகாட்சி, நாளேடு என்று துவங்க பட்டு இன்று அனைத்தும் தனிநபர்களின் சொந்த வெறுப்பு விருப்புகலையே வெளியிடுகின்றன, அதில் எவன் கூறுவது உண்மை என்று புரியாமல் ஏதோ நடக்கிறது என்று மக்களும் அவர்களின் பாதையில் செல்கின்றார்கள். இதனை முதலில் மாற்ற வேண்டும், நீதிமன்றங்களை போல் நடுநிலையாகவும், அரசுக்கு சாதகம், பாதகம் பாராமல் நாட்டின் அணைத்து நிலவரங்களையும் உண்மையில் மக்களை சென்றடைய சட்டம் வழி வகுக்கனும். நமது மக்கள் கட்சிக்காக கூட்டம் கூடாமல், நாட்டிற்கு நலனளிகும் விஷயம் இருந்தால் கூடவேண்டும், ஆலோசனை செய்ய வேண்டும் மற்ற எதற்காகவும் நேரத்தை வீனளிக்காமல் வீட்டையும் நாட்டையும் நினைத்தாள் அன்று இதற்கெல்ல தீர்வு கிடைக்கும்.........
வினோத் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-09 11:58:38 IST
நமது அரசியல் சட்டமும், அரசியல் வாதிகளும் எப்படி என்று நம்மை விட நன்கு உணர்துள்ளனர்கள் நமது அண்டை நாட்டவர்கள், ஆகையால் தான் பட்டபகலில் அவர்களது கொடியை இங்கே வந்து துணிச்சலாக நட்டுவிட்டு செல்கிறார்கள். ரானுவதினர்களுக்கு அறிந்தே நடக்கிறது என்று அம்மாநில மக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். அதை நாம் மீடியாவில் பார்த்தும் என்ன செய்கிறது நம் அரசு ஒன்றுமில்லையே. உடனடியாக அந்நாட்டுக்கு இரண்டு நாள் சுற்று பயணம் செல்வார்கள் அவ்வளவு தான். அதற்கு மக்கள் தரப்பிலும் பெரிதாக எதிர்ப்பு இருக்காது. பிறகு அரசும் மறந்து வேறு வேலைய பாக்க ஆரம்பிதுடுவார்கள். இன்னும் சொல்ல போனால் உண்மை நிலவரம் அங்கு என்ன என்பது அங்குள்ள மக்களுக்கும், நமது அரசுக்குமே தெரியும்...........
CRV கணேஷ் - மஸ்கட்,ஓமன்
2010-10-09 10:50:52 IST
காஷ்மீராகட்டும், அருனாச்சலகட்டும் இது இரண்டுமே பாகிஸ்தானுக்கம் சீனாவுக்கும் ஒரு நாள் போகபோகிறது. நமது அரசு எதற்கும் லாயக்கில்லை. ஈஸ்ட் பெங்காலுக்கும் கச்ச தீவிற்கும் என்ன கதி ஆயிற்று?...
அடுத்தவன் ஆள பக்க பிறந்தவன் - கேடுகெட்டஊர்,இந்தியா
2010-10-09 09:02:15 IST
சர்ச்சைக்குரிய பகுதியி தனி நாடாக சொல்வது வழக்கம் தான் என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆக மொத்தம் இந்திய கு எதிராக அதிக பட்ச அந்நிய வெளி சக்திகள் இய்னகுகின்றது என்பது வெளிபடியாகவே விளங்குகிறது.ஆட்சின் தரமும் விவேகமும் மிக மோசமான நிலையில் உள்ளதை உணர முடிகிறது.எங்கே போகும் இந்த பாதை...யாரோ யாரோ யார் அறிவாரோ.......
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-09 09:00:04 IST
மனதிற்கினிய மனமோஹனமே, புரிந்ததா. உடனடியாக, ஆலிவர் ரோடு, சி, ஐ. டி. நகர் கோபாலபுரம் அல்லது அறிவாலயத்துக்கு தொடர்பு கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று அறிவுரை கேளு. அந்த ஆலோசனைப்படி செயல்படு. இந்தியாவின் பகுதிகளை வெளிநாட்டவர்க்கு தாரை வார்க்க மாமியாருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த மாமியார் மெச்சிய மருமகளுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. உடனே செயல்படு....
வை சுப்பாராவ் - சிங்கப்பூர்,இந்தியா
2010-10-09 06:28:48 IST
இந்திய அரசின் திறமையோ திறமை; இதி மருத்துபேச ஆளில்லை ! F A O வுடனான எல்லா தொடர்புகளையும் வேரோடு களையும் உறுதியான முடிவு ஒன்றே நிலையை சரியாகும்; மீண்டும் இதுபோன்ற செயல்களுக்கு ஒரு முடிவு கட்டும்....
வீரமணி nk - Singapore,சிங்கப்பூர்
2010-10-09 05:12:58 IST
நீங்கள் தூங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் மட்டுமே நேரம் ஒதுக்குகிறீர்கள்....
முஹம்மத் அமின் - paris,பிரான்ஸ்
2010-10-09 03:34:30 IST
இதுப்பேர்த்தான் இந்தியாவின் காமன்வேல்த்தோ,கீழே இலங்கைக்காரன் பயம் உண்டாக்கிறான்,மேலே காஷ்மீரின் ஒரு பகுதியும் தற்போது சீனாவின் பிடியில் கொடுத்துவிட்டு பயந்துக்கொண்டு வாழ்வது ஒரு வாழ்வா சொல்லுங்கள், பயந்து வாழ்வது ஒரு வாழ்வா அருணாசலத்தில் ஒரு பகுதி போய் விட்டது,இப்பொழுது இந்த தனி நாடு வேறு, சர்ச்சைக்குரிய பகுதிகள் எப்பொழுதும் இந்தியாவின் ஒரு பகுதித்தான். ஆகையால் அதை பிரித்து பேசவேண்டாம்....
தமீம் - kuwait,இந்தியா
2010-10-09 02:08:46 IST
நம்முடைய உரிமையை எங்கேயும் விட்டு கொடுக்க கூடாது ! மத்திய அரசாங்கம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கு ! அவர்கள் எப்புடி நம்மோட இடத்தை சர்ச்சைக்குறிய பகுதி என்று குறிபிடலாம். இது எதிர்கால தலை முறைக்கு பெரிய ஆபத்தை தரக்கூடியது . இதனை இப்போதே கில்லி எரிய வேண்டும் ....
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-09 01:55:35 IST
நாட்டுப்பற்றே இல்லாத இந்த காங்கிரஸ் சர்க்கார் இருக்கும் வரை இனி ஒவ்வோர் மாநிலமும் இப்படி தனி தனியான தேசம் என்று சொன்னாலும் ஒரு மண்ணும் செய்யப்போவதில்லை..!! சீனாவின் ஆதிக்கம் இந்தியாவிற்குள் தொடர்ந்து ஊடுருவி வருவதை இன்னும் நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது "சீனாவுக்கு" பயந்து தான் என்பதும் உண்மையே..! ஆட்சிக்கு கேட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை ஆனால் :"பதவி" போய்விட்டால்..!! அதனால்தான் துணிச்சலாய் நாம் இன்னமும் சீனாவின் செயலை வன்மையாய் "கண்டிக்கவே" இல்லை.அவர்களது "படை"பலம் ஒரு காரணம் என்பதை மறுக்கவும் முடியாது.இதுதான் காங்கிரசின் நிலைப்பாடு..!! இந்த விஷயத்தில் பா ஜ க பெட்டர்..துணிச்சலாய் கண்டிப்பர்..இவர்கள் சீனா சென்று அவன் காலில் விழுந்து கெஞ்சி வருவதன் காரணமாய் இந்த நிலை நமக்கு..! துணிச்சல் மிக்க நாட்டு பற்று மிக்க பிரதமர் அமைந்தால் மட்டுமே நாம் நமது நாட்டை காப்பாற்ற முடியும்..சிந்திப்ப்போமா இனியாவது..??...
Babu - GrandRapids,யூ.எஸ்.ஏ
2010-10-09 01:25:34 IST
அப்படியா? அப்புறம் ஏன் ஈழத்தை தனி நாடக அறிவிக்கவில்லை? ஒருவேளை தமிழர்களை கொன்றால் சர்ச்சை இல்லையோ? அவர்களெல்லாம் ஈனப் பிறவிகளோ? இவுலகத்தில் தேவை இல்லாமல் பிறந்துவிட்டவர்களோ? நல்ல கொள்கையடா உங்கள் கொள்கை?...
Moorthy - USA,இந்தியா
2010-10-09 00:26:13 IST
அப்பிடின்னா இது வரைக்கும் இந்திய அரசுக்கு அந்த வழக்கம் கவனத்தில் வரவில்லையா? ஏன் இதுவரை மாற்றவோ

கருத்துகள் இல்லை: