சனி, 12 பிப்ரவரி, 2022

வவுனியாவில் புதிய பல்கலைக்கழகம்! திறந்து வைத்தார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச!

 எழுக்கதிர் : வவுனியா பல்கலைக்கழகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நேற்று (11) திறந்து வைக்கப்பட்டது.
இது, இலங்கையின் 17வது பல்கலைக்கழகமாகும். வவுனியா பல்கலைக்கழகமூடாக தொழில்நுட்ப சவால்களை முறியடிப்போம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்‌ஷ, “இது ஒரு விசேஷமான நாள் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த பல்கலை கழகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த பிரதேசத்தை கல்வி, பொருளாதார ரீதியில் உயர்வடைய இந்த வவுனியா பல்கலைக்கழகம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.

பாஜகவில் இருந்து மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம்.. பாஜக மீது பரபரப்பு புகார்

நக்கீரன் செய்திப்பிரிவு  : திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இருந்து வந்த ஆயிரம் விளக்கு முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் தற்போது மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த வருடம், திமுகவின் ஆயிரம் விளக்கு எம்எல்ஏவாக இருந்து வந்த கு.க.செல்வத்தை கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் எனக்கூறி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கு.க.செல்வம் தன்னை பாஜகவில் இணைந்துகொண்டார்.

பிப்ரவரி 16 முதல் திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 மாலைமலர் : தமிழ்நாட்டில் தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட, குறைத்திட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சீரான வேகத்தில் குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதால்  கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி வருகிறது.
இதற்கிடையே, கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 16-ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களிலும் 100 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அபார்ஷன்.. பாத்ரூமில் நடந்த பகீர்.. பெண் டாக்டர் வாயில் கோமியத்தை ஊற்றி டார்ச்சர்.. 7 வருஷம் ஜெயில்

கர்ப்பம்

Hemavandhana -  Oneindia Tamil  :  சென்னை: மனைவி என்றும் பாராமல், ஒரு பெண் என்றும் பாராமல், ஒரு டாக்டர் என்றும் பாராமல், மனிதாபிமானமும் இல்லாமல், கோமியத்தை குடிக்க வைத்து டார்ச்சர் செய்தே கொன்றுள்ளார் கொடூர கணவர்.. அவருக்குதான் 7 வருஷம் தண்டனையை ஹைகோர்ட் தந்துள்ளது..!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்தவர் மரியானோ ஆன்டோ புருனோ.. 36 வயதாகிறது..
இவரது மனைவி பெயர் அமலி விக்டாரியா.. 32 வயதாகிறது.. இவரும் ஒரு டாக்டர்.. கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

ஹிஜாப் தடை நாடுகள் பிரான்ஸ் பெல்ஜியம் நெதர்லாந்து இத்தாலி ஜெர்மனி ஆஸ்திரியா நார்வே ஸ்பெயின் பிரிட்டன் டென்மார்க் ரஷ்யா ......

BBC : உலகளவில் ஹிஜாப் குறித்த சர்ச்சைகளும் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளும்
கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உடனடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிலர் இது தங்கள் சட்டப்பூர்வமான உரிமை என்றும் சிலர், கல்வி நிறுவனங்களில் மதச் சின்னங்களை அணிவது முறையன்று என்றும் கருதுகின்றனர்.

பாகிஸ்தான் மனித உரிமை போராளி அஸ்மா ஜஹாங்கீர்

Saadiq Samad Saadiq Samad  : அஸ்மா ஜஹாங்கீர்  ! பாகிஸ்தானின் மனித உரிமைப் போராளி.
பாகிஸ்தானில் ஆணின் சாட்சியத்துக்கு என்ன மதிப்போ, அதில் பாதி மதிப்புதான் பெண்ணின் சாட்சியத்துக்கு என்று கூறுகிற வகையில் (இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில்) சட்டம் ஒன்று வர இருந்தது. அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்.
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண், தான் குற்றமற்றவர் என்று அவரேதான் நிரூபிக்க வேண்டும், இல்லையேல் தண்டனை உண்டு என்ற அவசரச் சட்டத்தை எதிர்த்துப் போராடினார்.
சஃபியா என்றொரு சிறுமிக்கு 13 வயது. பார்வையற்றவர். அந்தச் சிறுமியின் எஜமானரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்.
அதில் கருவுற்றார். குற்றவாளியைத்தானே சட்டம் தண்டிக்கும்?
ஆனால் இங்கே பாதிக்கப்பட்டவரைத்தான் தண்டித்தது. ‘ஜினாஹ்’ என்னும் முறைபிறழ்ந்த உடலுறவுச் சட்டத்தின்கீழ் அந்தச் சிறுமிக்கு சாட்டையடியும் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து முறையீடு செய்து, போராட்டத்தையும் நடத்தினார்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

பாமர முஸ்லிம்களை உசுப்பி விடும் ஊடகவியலாளர்கள் .. சமூகவலையில் ஜீவாசகாப்தன் மீது கடும் விமர்சனம்

Saadiq Samad Saadiq Samad  :  ஓசி பிரியாணிக்காக இப்படியே உசுப்பி, உசுப்பி விட்டுட்டு போயிடு எங்கேயாவது எதாவது மத கலவரம் வந்தால் பாதிக்கப்படுவது அந்த பாமர முஸ்லிம்கள் தாண்டா கிருக்கனுங்களா
நான்கு இஸ்லாமிய அடைப்படைவாதியால் நாலாயிரம் முஸ்லிம்களும் அவர்களின் சொத்துக்களும் பாதிக்கப்படும் .உசுப்பிவிட்ட நீ ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு போயிடுவே  
இழப்புகளை யாருடா சுமப்பது ?
உன்னுடைய யூடிபிற்கு லைக் கிடைக்க எவனோ ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி எழுதி கொடுத்த ஸ்க்ரீப்ட்டை படித்து  அப்பாவி மக்களை உசுப்பி விடுவது  தவறு மிஸ்டர் ஜீவ சகாப்தன்  
அப்புறம் என்ன கலாச்சாரமா? ...
உனக்கு  கலிமா சொல்லிக்கொடுத்து , கத்னா பண்ணிவிட்டால் உன் முந்தைய கலாச்சாரம் அனைத்தும் க்ளோஸ்   
அப்புறம்  சாப்பிட ஆரம்பிக்கும்போது பிஸ்மி சொல்லனும் Men தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் சொல்லனும் 

10வது மாடியில் மகனை தொங்கவிட்ட தாய் - சாரியை எடுக்கவாம் ..பதறவைக்கும் காட்சி. ஹரியானா

கலைஞர் செய்திகள் : ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள 10-வது மாடியின் பால்கனியில் ஒரு தாய் தனது மகனை அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டிய 9வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் சிக்கிய தனது புடவையை எடுக்க பெண் ஒருவர் தனது மகனை 10-வது மாடி பால்கனியில் இருந்து பெட்ஷீட்டில் கட்டி இறக்கி அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டார் 82-ல் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் பூட்டிய வீட்டின் பால்கனியில் விழுந்த புடவையை எடுக்க, தாய் ஒருவர் தனது மகனை பெட்ஷீட்டில் கட்டி 9வது மாடியின் பால்கனிக்கு அனுப்பியுள்ளார்.
10வது மாடியில் மகனை தொங்கவிட்ட தாய் - பதறவைக்கும் காட்சி - நடந்தது என்ன?

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம்

 மின்னம்பலம் : தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில்... அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ‌. பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 11) திருச்சி மாவட்ட அதிமுகவின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது உள்ளாட்சி மன்ற தேர்தல்தான்‌.
இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு மரண அடி கொடுக்க வேண்டும்.

அறுவை சிகிச்சையின்போது “கற்பூர பொம்மை ஒன்று..” பாடிய சீதாலட்சுமி - இளையராஜா சந்தித்திப்பு இன்ப அதிர்ச்சி கொடுத்த மருத்துவமனை!

அறுவை சிகிச்சையின்போது “கற்பூர பொம்மை ஒன்று..” பாடிய சீதாலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மருத்துவமனை!

கலைஞர் செய்திகள் -Vignesh Selvaraj  : அறுவை சிகிச்சையின்போது இசைஞானி இளையராஜாவின் பாடலை பாடிய சீதாலட்சுமியை இளையராஜாவுடன் சந்திக்கச் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
சென்னைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. நல்ல குரல்வளம் கொண்ட பாடகரான இவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.

ஆளுநருக்கு துரைமுருகன் எச்சரிக்கை!

 மின்னம்பலம் :   நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த விவகாரம் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திலும் எதிரொலித்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தும் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டமும் பிப்ரவரி 10ஆம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சரும் சட்டமன்ற அவை முன்னவருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய துரைமுருகன்,
"இதுவரையில் எந்த கவர்னருமே நடந்து கொள்ளாத வகையில் இந்த கவர்னர் நடந்து கொண்டிருக்கிறார்.

எனக்குள்ளிருந்த இளையராஜாவை நான் கண்டுபிடிக்கவில்லை பஞ்சு அருணசலம்தான் கண்டுபிடித்தார்.

 Kalaichelvan Rexy Amirthan  :  இராசையாவுக்குள் இருந்த இளையராஜாவைக் கண்டுபிடித்தது எப்படி ?
இசைஞானியை இசையமைப்பாளர் விஜய் அன்ரனி எடுத்த பேட்டியை 3 பகுதியாக யூடியூப்பில் பார்க்க முடிகிறது முடிந்தவர்கள் பாருங்கள்
ஏனென்றால் இசை ஜாம்பவான் ஒருவரை அவரின் பாதையில் பயணிக்கும் அவரின் ரசிகர் பேட்டி எடுக்கும்போது அந்தப்பேட்டியில் பல சுவராஸ்யமான விஷயங்கள் வெளிவரும்
அப்படிப்பட்டதொரு உரையாடல் இது. இந்தப்பேட்டியில் "உங்களை நீங்கள் அடையாளம் கண்டது எப்போது"  என்ற கேள்விக்கு ராஜாவின் பதில் :
சினிமாவில் வாய்ப்புப் பெறுவதற்காக 10 பாடல்கள் மட்டில் உருவாக்கி முழு Orchestration உடன் மண்டபம் ஒன்றில் அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்களை அழைத்து இசைத்துக் காட்டினேன்

“கிரிப்டோகரன்சி வாங்குங்க.. கோடி கோடியா சம்பாதிக்கலாம்” : ‘சதுரங்க வேட்டை’ பாணியில் மோசடி செய்த கும்பல்!

“கிரிப்டோகரன்சி வாங்குங்க.. கோடி கோடியா சம்பாதிக்கலாம்” : ‘சதுரங்க வேட்டை’ பாணியில் மோசடி செய்த கும்பல்!

கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj  : கிரிப்டோகரன்சி என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த பாண்டிக்கருப்பன் என்ற ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியின் மனைவியான கோமதி என்பவர் சேலை விற்பனை சுயதொழில் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் மதுரை அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை என்ற குடும்ப நண்பர் கோமதியிடம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறியதோடு கோவையைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரெஜினாகுமாரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

வியாழன், 10 பிப்ரவரி, 2022

ரூ.1500 கோடி சம்பளமா.. சன் டிவி கலாநிதி மாறன், காவேரி கலாநிதி சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு..

 1,470 கோடி ரூபாய்
kaveri - kalanidhi maran
 காவ்யா கலாநிதி மாறன்
kaaviya maran

Prasanna Venkatesh -   GoodReturns Tamil : தென் இந்தியாவில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி குழுமத்தின் ப்ரோமோட்டர்களாக இருக்கும் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவியான காவேரி கலாநிதி ஆகியோர் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் தற்போது கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோரை மீண்டும் சம்பள உயர்வுடன், உயர் நிர்வாகப் பதவியில் உட்கார வைக்க முடியாது என்று சன் டிவி பங்கு முதலீட்டாளர்கள் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக முஸ்லீம் மஜ்லிஸ் காடையர்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட யாழ் பல்கலைக் கழக மாணவியின் கதை இது

May be an image of 8 people, people standing and outdoors

Rishvin Ismath : ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பல்கலைக் கழக மாணவியின் கதை இது. HijabIsMyRight  -  HijabIsChoice என்று பகிர்ந்து திரிபவர்களும், ஆதரவுக் குரல் கொடுப்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய கதை இது.
யாழ் பல்கலைக் கழகத்தில் ஹிஜாப் அணியாத மாணவியாக இருந்ததற்காக அந்தப் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸின் காடைய இஸ்லாமியவாதிகளின் ஆபாச வார்த்தைத் தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், தீண்டாமைப் புறக்கணிப்பிற்கும் உள்ளன மாணவியின் குமுறல் இது.

பாஜகவினரை ஓட ஓட விரட்டிய தெலுங்கானா TRS !. மோடியை எதிர்த்து ஹைதராபாத் ...

 Shyamsundar -   Oneindia Tamil  :  ஹைதராபாத்: தெலுங்கானாவில் பிரதமர் மோடியை எதிர்த்து பல இடங்களில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகிறார். பிரதமர் மோடியை தொலைநோக்கு பார்வை இல்லாதவர் என்றும், பாஜகவை கடலில் தூக்கி வீச வேண்டும் என்றும் சந்திசேகர ராவ் சமீபத்தில் குறிப்பிட்டார்.
அதேபோல் பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். மேலும் தெலுங்கானாவிற்கு சமீபத்தில் ராமானுஜர் சிலையையே திறக்க வந்த பிரதமர் மோடியை சந்திசேகர ராவ் விமான நிலையத்தில் வரவேற்காமல் தவிர்த்தார்.

சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

 நக்கீரன் செய்திப்பிரிவு   : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. மற்றும் சுயேட்சை  வேட்பாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் யாருக்கும் காயமில்லை.

ஒரு துணிக்காக அவர்கள் எம் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்.. “They are ruining our future for a piece of cloth” ஷர்மிளா செய்யத்

May be an image of 4 people, beard and text that says 'BREAKING NEWS SUN NEWS வீரமங்கை முஸ்கானுக்கு பாத்திமா ஷேக் விருது! கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவி முஸ்கானுக்கு தமுமுகவின் பாத்திமா ஷேக் விருது வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு! 09FEB2022 UNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in'

Sharmila Seyyid :   “They are ruining our future for a piece of cloth”
"ஒரு துணிக்காக அவர்கள் எம் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்”
முஸ்கான் சொல்லும் இந்த கூற்றில் 'அவர்களை' நாமே சுதந்திரமாக தீர்மானிக்கும்படி அவள் விட்டது தற்செயல்.
ஆனால், அந்த 'அவர்கள்' காவி சங்கிகள் மட்டுமேயல்ல. பச்சை சங்கிகளும் என்பதையும் நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்..
Premraj Thangavel  :  எல்லோரும் சிறுபிள்ளைத்தனமாக நடக்கிறார்கள் இந்தப் பெண் உட்பட. இப்பொழுது அவள் அடிப்படைவாதிகளின் கையாளாக.
Sharmila Seyyid  :  Premraj Thangavel முஸ்கான் என்ன செய்தாள்? அவள் சிறுபிள்ளைதான் ஆனால் எதை எப்படி எதிர்கொள்ளவேண்டுமோ அதை அப்படியாக எதிர்கொண்டாள். மாமனிதர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடக்கிறார்கள் என்பதை ஏற்கலாம்.

புதன், 9 பிப்ரவரி, 2022

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் - ஈரானில் வைரலான வீடியோ

 மாலைமலர் : டெஹ்ரான்  : இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஈரான் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது இளம் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் குறித்த வீடியோ ஈரான் நாட்டின் சமூக வலைதளங்களில் பரவியது. இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார், மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணின் தலை அது என்பதை கண்டறிந்தனர். ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில்  அந்த பெண் வாழ்ந்து வந்த இடத்தில் சோதனை நடத்தினர்.

ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

 tamil.indianexpress.com : கர்நாடகாவில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி புதன்கிழமை உத்தரவிட்டது.
ஹிஜாப் வழக்கு, ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்,
கர்நாடகாவில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி புதன்கிழமை உத்தரவிட்டது.
பெங்களூருவில் உள்ள பள்ளிகள், புதுமுக கல்லூரிகள் (பியூசி), கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களின் வாயில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டம் நடத்துவதற்கு, கூட்டம் கூடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு கர்நாடகா மாநில காவல்துறை தடை விதித்துள்ளது. ஹிஜாப் சர்ச்சை தொடர்பான மனுக்களை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களும் பொதுமக்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபர்

 மாலைமலர் : இஸ்லாமாபாத்:.ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபரை பெஷாவர் போலீசார் தேடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி பெண்களுக்கு நேரும் கொடுமைகள் உறவுகள் மூலமும் அரங்கேறும் கொடூரமும் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
பாகிஸ்தானில் வசிக்கும் பெண் ஒருவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதையடுத்து, அடுத்து பிறக்கப் போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கூறியுள்ளார். அவரும் கர்ப்பிணியின் தலையில் ஆணி அடித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் நோய் தீவிரம் ஆவதில்லை, இறப்பும் நேர்வதில்லை! ஆராய்ச்சியில் தகவல்

 தினத்தந்தி :  கொரோனா தடுப்பூசி, அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பற்றி சுவீடன் நாட்டில் ஆராய்ச்சி  : லண்டன்,  கொரோனா தடுப்பூசி, அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பற்றி சுவீடன் நாட்டில் ஆராய்ச்சி நடத்தி உள்ளனர்.இந்த ஆராய்ச்சியில் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தி 7 மாதங்களில், தொற்று நோய்க்கு எதிராக கிடைத்த பாதுகாப்பு குறையத்தொடங்கி விடுகிறது என தெரிய வந்துள்ளது.
மேலும், தடுப்பூசிகளினால் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடிய அளவுக்கு நோய் தீவிரம் ஆவதில்லை, இறப்பும் நேர்வதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஆராய்ச்சியாளரான சுவீடன் உமியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் நார்ட்ஸ்ரோம் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி நோய் தீவிரம் ஆவதில் இருந்தும், மரணம் நேரிடுவதில் இருந்தும் பாதுகாப்பை சிறப்பாக பராமரிக்கிறது. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது புத்திசாலித்தனமானது, முக்கியமானது” என தெரிவித்தார்.

ரோஜா ஆந்திரா போய் சேரும் முன் பறந்த ஆர்டர்.. முதல்வர் ஸ்டாலின் வேகம் வியப்பின் எல்லையில் ரோஜா!

கோரிக்கை என்ன ?

Shyamsundar -   Oneindia Tamil : சென்னை: ஆந்திர எம்எல்ஏ நடிகை ரோஜா முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தான் வைத்த கோரிக்கை ஒன்று துரிதமாக நிறைவேற்றி உள்ளதாக ரோஜா நன்றி தெரிவித்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா நேற்று முதல்நாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் ஸ்டாலினை ரோஜா சந்தித்தார்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றம்!

 நக்கீரன் செய்திப்பிரிவு :  சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று (08/02/2022) காலை 10.00 மணிக்கு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. அப்போது, நீட் விலக்கு மசோதாவைத் திருப்பியனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்து உரையாற்றினார்.

Hijab Issue : தேசியக் கொடியின் இடத்தில் காவிக்கொடி... ஜெய் ஸ்ரீராம் கோஷம்... போர்க்களமான ஷிமோகா கல்லூரி!!

 tamil.asianetnews.com -Narendran S : கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் சிவமோகாவில் ஒரு கல்லூரியில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டு காவி கொடியை மாணவர் ஒருவர் ஏற்றியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முஸ்லீம் மாணவிகள் தலையில் ஹிஜாப்பை அணிய கர்நாடகாவில் ப்ரீ யூனிவர்சிட்டி கல்லூரிகளில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவே இப்போது அந்த மாநிலத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. குந்தாப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.