வியாழன், 10 பிப்ரவரி, 2022

ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக முஸ்லீம் மஜ்லிஸ் காடையர்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட யாழ் பல்கலைக் கழக மாணவியின் கதை இது

May be an image of 8 people, people standing and outdoors

Rishvin Ismath : ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பல்கலைக் கழக மாணவியின் கதை இது. HijabIsMyRight  -  HijabIsChoice என்று பகிர்ந்து திரிபவர்களும், ஆதரவுக் குரல் கொடுப்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய கதை இது.
யாழ் பல்கலைக் கழகத்தில் ஹிஜாப் அணியாத மாணவியாக இருந்ததற்காக அந்தப் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸின் காடைய இஸ்லாமியவாதிகளின் ஆபாச வார்த்தைத் தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், தீண்டாமைப் புறக்கணிப்பிற்கும் உள்ளன மாணவியின் குமுறல் இது.


அவள் ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்திற்காக யாழ் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸ் அவளை குறிவைத்துத் தாக்கியது.
அவளை நோக்கி “வேXX” கோசங்கள் எழுப்பப் பட்டன, அவள் பெயரில் அவள் புகைப்படங்களுடன் “வேXX” அடைமொழிகளுடன் போலி பேஸ்புக் கணக்குகள் உதயமாகின,
பல்கலைக் கழகத்தின் ஏனைய முஸ்லிம் மாணவிகளுக்கு அவளுடன் பேசுவதற்கு தடை விதிக்கப் பட்டது, அவளை நோக்கி வன்மமான வார்த்தைகள் திறந்து விடப்பட்டன.
அத்தனை துயரங்களையும் தாங்கிக்கொண்டு அவள் அமைதியாக இருந்தாள்.
அவள் கொண்டாடப் படவில்லை, அவளது துயரம் பேசு பொருளாக்கப் படவில்லை,
அவளுக்காக குரல் கொடுக்க எந்த முற்போக்கு சக்திகளும் முன்வரவில்லை,

அவள் துன்பக் கதைகள் ஷேர் செய்யப் படவில்லை,
அவளுக்கு நீதி கேட்டு ஹாஷ்டாக் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஏன்? ஏன்??
ஏன் அவளது துன்பம் புறக்கணிக்கப் பட்டது?
அவள் ஒருத்தி மட்டுமல்ல,இன்னும் பலர் இன்றும் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.
ஹபாயாவை, புர்காவை, ஹிஜாபை விருப்பமின்றி அச்சத்தில் அணிந்து கொண்டு இருக்கின்றார்கள்,
தம் விருப்பை வெளியிட்டால் அவளுக்கு நடந்ததோ அல்லது அதை விட மோசமானதோ தமக்கும் நடந்து விடலாம் என்ற அச்சத்தில் தமது விருப்புக்களையும், தெரிவுகளையும், குரல்களையும் ஹிஜாபுக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸ்கள் ஆடைச் சுதந்திரத்தை பறித்த அளவுக்கு இலங்கையில் வேறு யாரும் செய்ததைக் காண முடியாது.

இன்றைக்கு இதனை வாசித்த பின்னரும் இதனைக் கண்டும் காணாமல் போவதுடன் “ஹிஜாப் ஒரு தெரிவு” (Hijab is a choice) என்று தொடர்ந்தும் சொல்லிக்கொண்டு இருப்பீர்களாக இருந்தால் உங்கள் நோக்கம் நேர்மையாக இல்லை என்பது தெளிவு.
.
அவள் துன்பக் கதையை அவள் வார்த்தைகளில் இன்று கொண்டாடப்படும் காட்சியுடன் ஒப்பிட்டுச் சுருக்கமாக சொல்கின்றாள், வாசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். :


காட்சி ஒன்றுதான் களங்களும் பாத்திரங்களும் வேறு

கர்நாடகப் பல்கலை வளாகத்துக்குப் பதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம். ஹிஜாபி முஸ்கானுக்குப் பதில் ஹிஜாப் அணிய மறுத்த நான். காவிச் சங்கிகளுக்குப் பதில் அடிப்படைவாத மஜிலிசின் பச்சைச் சங்கிகள். எண்ணிக்கையும் பரபரப்பும் இந்தளவிற்கல்ல ஆயினும் தந்த பயம் சற்றும் சளைத்ததல்ல. ஹிஜாபைக் கழற்றுக்குப் பதில் ஹிஜாபை போடுடி. சுற்றி வளைத்து ‘வேசைக்’ கோசங்கள். எனக்கும் கீச்சுக்குரல்தான் ஆனால் எதிர் முழங்கத்தான் வார்த்தை வரவில்லை. வாயிலில் இருந்து வகுப்பறை வங்கக் கடல் ஆழம். கரை தாண்டினால் போதும்.

இந்த Trauma எப்பவுமே ஹிஜாப் என்ற அடக்குமுறை ஆயுதத்தை ஒரு ஆடையாகக் கூடக் கருத எனக்கு இடமளிக்குதில்லை. எனக்கு மட்டுமல்ல இஸ்லாமுக்குள் இருந்து முட்டி மோதி வெளியில் வந்த எவருக்குமே இந்த மாதிரி ‘ Hijab is my right’, 'Hijab is my shield ', 'Hijab is my identity' போராட்டங்களுடன் ஒன்ற முடிவதில்லை.
ஆனால், ஹிஜாப் முஸ்கானினதும் ஷண்முகா ஆசிரியையினதும் உரிமை. அந்த உரிமையைப்  பாதுகாக்க அவர்களோடு  துணைநிற்கும் முற்போக்குச் சமூகத்தின் ஆதரவுக் குரல் நம்பிக்கையளிக்கிறது.
உண்மையைச் சொன்னால் சற்றுப் பொறாமை  கொள்ள வைக்கிறது.
-Bora Bora Maya

கருத்துகள் இல்லை: