மின்னம்பலம் :
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.“திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு ஜூலை 10 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். திமுக தலைவர் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கடிதத்தை எழுதுவதாக தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு, சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை தேசப் பாதுகாப்பு ரீதியாக வலியுறுத்தியுள்ளார். அந்தக் கடிதத்தை, ’தமிழர்களின் 150 ஆண்டு கால சேது சமுத்திரத் திட்டத்தை 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு முன்னதாக நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை இந்திய பிரதமர் மோடி அவர்கள் பிடிக்க வேண்டுமென திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்’ என்று முடித்திருந்தார் டி.ஆர்.பாலு. இந்தக் கடிதத்தில் பாஜக மீதான திமுகவின் அணுகுமுறையிலும் பார்வையிலும் ஏதோ ஒரு புதிய மாற்றம் இருப்பதை பலரும் உணர்ந்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.


















