செவ்வாய், 10 மார்ச், 2020

பண்ணையார் வாசனும்.. மகராஜா ஸிந்தியாவும் .. ஆண்ட பரம்பராஸ்

Devi Somasundaram : ஜோதிராவ் ஸிந்தியாவும் ..ஜீ கே.
வாஸனும்.
மத்திய பிரதேச குவாலியர் மகாராஜ வம்சத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் காரர், கேபினட் அமைச்சரா இருந்தவர் ..இவர் அப்பா மாதவராவ் ஸிந்தியா ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததால் அவர் வாரிசா அரசியலுக்கு வந்தவர் .
தன் முதல் தேர்தலிலேயே குணா கான்ஸ்டியன்ஸில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தி பி ஜே பியின் தேஷ் ராஜ் சிங் யாதவை வென்றவர் .
முன்னேறிய உயர் வகுப்பை சேர்ந்தவர் .இன்றும் மிக செல்வாக்கான நபர் .இந்தியாவின் பணக்கார பார்லிமெண்டேரியன் .
இப்ப ஏன் இது? .
நேற்று ஸிந்தியா பி ஜே பி ல சேர்ந்து விட்டார் ...
இவரை மாதிரியே அப்பாவால வாரிசா தலைமைக்கு வந்தவர் தான் வாசன் ..இவரும் பணக்கார பண்ணையார் வம்சம் தான்...
அவரும் பி ஜே பி ல சேருகிறார் .
ஆனா ஸிந்தியா இன்னும் செல்வாக்கான ஆதிக்கம் நிறைந்தவர் ... காரணம் வடக்க இன்னும் ராஜ குடும்ப அரசியல் அப்படியே தான் இருக்கு ..
ராஜஸ்தான், மகராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் மன்னர் ஆட்சி ஒழிந்தாலும் மன்னர் குடும்ப அதிகாரம் ஒழிய வில்லை ...
அவர்கள் கைகாட்டும் ஆள் தான் ஜெயிப்பார் .
ஆனா தமிழ் நாட்ல பண்ணையார் ஆதிக்கம் ஒழிந்து விட்டது .. வாசன கும்பகோணம் இந்த பக்கம் , தஞ்சைக்கு அந்த பக்கம் ஒருவருக்கும் தெரியாது..அவர் தேர்தல்ல நின்னு மண்ணை கவ்வினார் .

இத்தாலியில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரிக்கிறது ... Italy Coronavirus Cases: 9,172 Deaths: 463 Recovered: 724

 
Jeevan Prasad : வடக்கு இத்தாலிய பிராந்தியமான லோம்பார்டியில், கொரோனா வைரஸலால் ஒரு நாளுக்குள் 100 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பிராந்திய அதிகாரிகள் மிலனில் ஞாயிற்றுக்கிழமை மாலை இதை அறிவித்தனர். அதன்படி, லோம்பார்டியில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை முதல் 154 முதல் 257 ஆக உயர்ந்துள்ளது.இரபியில், மக்கள் தொகையில் கால் பகுதியினர் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் மொத்த கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 366 ஐ எட்டியது,
இது சனிக்கிழமை முதல் 133 இறப்புகளின் அதிகரிப்பு ஆகும். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,326 அதிகரித்து 6,387 ஆக உயர்ந்துள்ளது என்று இத்தாலிய சிவில் பாதுகாப்புத் தலைவர் ஏஞ்சலோ பொரெல்லி ஞாயிற்றுக்கிழமை மாலை ரோமில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதற்கிடையில் 622 பேர் மீண்டுள்ளனர்.

திங்கள், 9 மார்ச், 2020

வங்கியில் கடன்பெற்று நாட்டை விட்டு ஓடிய 28 பேர்.லிஸ்ட் ... பார்ப்பன , பனியாக்கள் .ஆரிய ஆதிக்க ஜாதி திருடர்கள்

பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு இந்த நாட்டை விட்டு ஓடிய,,28 நபர்கள்,,,These are names of 28 Nationalist Business men who looted money of Indian Tax Payers
1) Vijay Mallaya
2) Mehul Choksi
3) Nirav Modi
4) Nishan Modi
5) Pushpesh Baidya

அதிமுகவையும் திமுகவையும் மூட்டை கட்டிவிட்டால் தமிழகம் தானாக வளம் பெறுமாம் : தமிழருவி மணியன் ஆலோசனை

tamilaruvi-manian-slams-aiadmk-dmk
.hindutamil.in : அதிமுகவையும் திமுகவையும் மூட்டை கட்டிவிட்டால் தமிழகம் தானாக வளம் பெறும் என, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று (மார்ச் 8) மாலை காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 'ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன?' என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி  மணியன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
"காந்திய காலத்தில் ஒருவன் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் அவன் தன்னிடம் இருப்பதை இழக்கத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் உன்னத நிலை. அந்த நிலை திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் ரஜினியின் பின்னால் தமிழகம் வர வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். காந்தி காலத்திற்குப் பிறகு, கொஞ்சம் பணத்தைப் போட்டு நிறைய எடுக்கும் இடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இப்போது, நம்மிடம் இருக்கும் எதையும் கொடுக்காமல், சுற்றியிருக்கும் அனைத்தையும் தனதாக்கிக்கொள்ளும் பேராசை பிடித்தவர்கள் அரசியலில் உள்ளனர்.
ரஜினிகாந்த் தன் மார்க்கெட்டை இழந்து விடவில்லை. இன்றைக்கும் ரஜினிக்கு ஒரு படத்திற்கு ரூ.300 கோடிக்கும் மேல் வியாபாரம் இருக்கிறது. 70 வயதிலும் அவர் நடிக்க வேண்டும் என, படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் போயஸ்கார்டனில் அணிவகுத்து நிற்கின்றனர்.

எம் எஸ் சி எஞ்சினியர் துப்பரவு பணிக்கு ... பார்ப்பன ஜாதி வெறி கருத்துக்கள் .. "குலத்தொழிலாம்" ..

ஸ்ரீநிவாச அய்யர் : இவர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவராக தோற்றம்
அளிக்கிறார் .
இது (துப்பரவு பணியாளர்) இவர்களின் குலத்தொழில் . அந்த தொழிலை இவர் செய்வதில் என்ன தவறு? இவர்களுக்கு கையுறை போன்ற பாதுகாப்பு கவசங்களை அரசாங்கம் கொடுத்திருப்பதால் இவர்கள் உண்மையில் இதையிட்டு மகிழ்ச்சி அடையவேண்டும் ..
இந்த ஸ்ரீநிவாச அய்யன் என்பவன் எவ்வளவு மோசமான ஒரு பார்ப்பன ஜாதி வெறியர் என்று தெரிகிறதா?
பார்ப்பனீயம் என்பது ஹிட்லரின் ஆரிய நிறவெறிக்கு கொஞ்சம் கூட சளைக்காத ஆதிக்க வெறியாகும் ..
Kalai Selvi :
She is MSc appointed in Scavenger Job.
See the Iyer Brahmin fellows statement
Kick him in his ass
These Brahmin Scoundrels instead of Begging in the Non Brahmins Temples , Why they are going to US, will they answer ? who gave them this right to abuse other fellow Citizens ?
வெப்துனியா : கோவையில் சமீபத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான ஆணை வழங்கப்பட்டது. இந்த பணிக்கு எம்.எஸ்.சி. படித்த மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி கூறியதாவது: ”எம்.எஸ்சி. படித்து வரும் நான், மாநகராட்சியில் வேலைக்கு ஆள் எடுப்பதை அறிந்து அதற்கான நேர்காணலில் பங்கேற்றேன்.

பிட் காயின் பகுதி -2.. நீங்களும் வாங்கலாம் கிரிப்டோ கரன்சி. ..வாங்கலாமா? வேண்டாமா ?

Muralidharan Pb : பிட் காயின் பகுதி -2
2009ல் இதை முதன்முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்திய போது இதன் விலையாக நிர்ணயிக்கப்பட்டது எவ்வளவு தெரியுமா ?
ரூபாய் மதிப்பின் படி வெறும் ரூபாய் 1.90 மட்டுமே. அதன் உச்சகட்ட விலை 2017ல் அது ஒரு காயின் விலை 15 லட்சங்கள் வரை சென்றது.
கேட்கவே பிரமிப்பாக இருக்கா ?
இதன் வளர்ச்சி என்ன ? அன்று நான் ஒரு 2 ரூபாய் கொடுத்து 100 பிட் காயின் வைத்திருந்தால் 2017ல் இதன் உச்சம் தொட்ட போது 15 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கும்.
உலகில் எங்காவது எந்த தொழிலிலாவது 200 ரூபாய் முதலீடு போட்ட 8 ஆண்டுகளில் 15 கோடி வரை உயர்ந்தது உண்டா ? இது புதுமை இல்லையா ? புரட்சி இல்லையா ?
ஆனால் நம் போன்ற இந்தியர்களுக்கு இது தெரிய வரும் போதே, பாதிக்கும் மேல் காயின்கள் வெளியாகி,வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கிவிட்டனர். பெருமளவில் உலகம் முழுவதும் 2016ல் இது தெரிய வர, 2017ல் இன்னும் நிறைய பேர் இதை அறிந்திருந்தார்கள். ஆனால் கூடவே தவறான தகவல்களோடு.
2018 ஆரம்பத்தில் இதன் விலை வீழ்ச்சி அடைந்து, படிப்படியாக குறைந்து, ரூபாய் 3 லட்சங்கள் வரை போனது. இன்று இதன் இன்றைய விலை 6.71 லட்ச ரூபாய். சில மாதங்களாகவே இதன் விலை மெதுவாக ஏற்றம் காண்கிறது.
நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், பிட் காயின் விலை ஏற்றம் இதுவரை அதை எதிர்பார்க்கப்பட்ட 5% கூட இன்னும் எட்டவில்லை. எனவே இது இன்னும் சில ஆண்டுகளில் பல கோடி வரை கூட போகலாம் என்கிறார்கள். யூகம் தான். இன்னைக்கு தேதியில் இவர் தான் முடிசூடா மன்னன்.
உலகத்தில் பிட் காயின் மட்டும் மெய் நிகர் நாணயம் (Virtual Currency) என்று கேட்டால் அது தான் இல்லை. இதைப் போல சுமார் 3000 காயின்கள் வந்து போய் கொண்டிருக்கின்றது.

க.அன்பழகன்: ஒரு யுகத்தின் இறுதி அத்தியாயம்!


செல்வ புவியரசன்  - .hindutamil.in:  ,:அரசியலின் சில விழுமியங்களைக் கடைசிவரையிலும் கட்டிக்காத்துவந்த ஒரு பெரும் வரலாற்றுக்குச் சாட்சியமாக இருந்தவர் க.அன்பழகன். ஒரு கட்சியின் நெடுநாள் பொதுச்செயலாளர் என்பதைத் தாண்டி, மக்கள் நல அரசின் முக்கியப் பொறுப்புகளான மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி ஆகிய துறைகளில் அமைச்சராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்ட அனுபவங்களின் திரட்சியாக இருந்தவர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் என்பதைத் தாண்டி, ஜனநாயக அரசியலில் அமைச்சரவையிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் அவர் ஆற்றியிருக்கும் பணிகளையும் சேர்த்து நினைவுகூர்வதே அவருக்கான அஞ்சலியாக இருக்க முடியும்.
நீதிக் கட்சி தொடங்கி சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகப் பெயர் மாற்றம், திமுகவின் தோற்றம் என்று தமிழக அரசியலில் முக்கிய வரலாற்றுத் திருப்பங்களிலெல்லாம் பங்கெடுத்துக்கொண்டவர் அவர். 1940 தொடங்கி சுயமரியாதை இயக்க உறுப்பினர். நாற்பதுகளின் தொடக்கத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் கூட்டங்களெல்லாம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களைச் சேர்ந்த விவாத அரங்குகளாக விளங்கிய வேளையில், அங்கு தன்னந்தனியராக சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பேசியவர். தனது சகமாணவர்கள் மத்தியில் அவர் தொடங்கி வைத்த பிரச்சாரம்தான், அடுத்த சில ஆண்டுகளில் அந்தப் பல்கலைக்கழகத்தையே திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத மையங்களில் ஒன்றாக மாற்றியமைத்தது.

அண்ணா ,காமராஜர் இல்லை .. ஆனால் சவர்கார், பட்டேல், சுபாஸ், இந்திரா விமான நிலைய பெயர்கள் இன்னும் தொடர்கிறது !


Ksb Boobathi : · விமான அறிவிப்பும் தமிழும் சென்னையில் பேசிய பிரதமர்மோடி , இனி விமானத்தில் தமிழில் அறிவிப்பு வெளியாகும் என சொன்னதும்,  ஆஹான்னு பலர் வரவேற்று பேசியுள்ளார்கள்..
தமிழகத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கு செல்லும் பிரிட்டன், ஜெர்மன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானங்களில் உள் அறிவிப்புகள் தமிழில்தான் செய்யப்படுகின்றன..
நீங்கள் அதை கேட்டிருக்கக்கூடும்.. ஆனால் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் விமானத்தில் இது வரை ஆங்கிலம்  ஹிந்தி மட்டுமே இருந்தது..,
அது தான் தமிழில் இனி வரும் என சொல்லியிருக்கிறார்கள்..
இதைச் சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன என்பதே அபத்தம்..
அடுத்து மிக முக்கியமான செய்தி..,!
சென்னை சர்வதேச  விமான நிலையத்தில் பெயர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் என இருந்தது, உங்களுக்கு தெரியும் தானே..?
இன்று அது சென்னை பன்னாட்டு விமான நிலையம் என மாற்றப்பட்டுள்ளது.. தலைவர்கள் பெயரை எடுக்க சொல்லி பாஜக மோடி அரசு 2017ஆம் ஆண்டு விமான போக்குவரத்துத் துறை ஓர் அறிவிக்கையை வெளியிட்டது.

கொரோனா..1.6 கோடி பேரை தனிமைப்படுத்த இத்தாலி அதிரடி முடிவு.. தப்பியோடும் மக்கள்.. பரபரப்பு

  veerakumar -  tamil.oneindia.com : லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால், இத்தாலியில் இறப்பு விகிதம் அதிகரித்ததை தொடர்ந்து, 16 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தனிமைப்படுத்தும் திட்டத்தை அந்த அரசு கையில் எடுத்தது. இந்த தகவல் ஊடகங்களில் கசிந்ததால், பீதியடைந்த மக்கள் தப்பியோட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிலன் நகரம் உட்பட இத்தாலியின் வட கிழக்கிலுள்ள லோம்பார்டி மண்டலம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறது. இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை, 366 ஆக உயர்ந்துள்ளன. 24 மணி நேரத்தில் 50% க்கும் அதிகமான பாதிப்பு விகிதம் அங்கே நிலவுகிறது. மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 7,375 ஆக உள்ளது
1 கோடியே 60 லட்சம் இந்த நிலையில்தான், வூஹான் மாகாணத்தை சீனா லாக் செய்ததை போல, இத்தாலியின் வட கிழக்கு பிராந்தியத்தை முற்றிலும் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்க இத்தாலி முடிவு செய்தது. சுமார் 1 கோடியே 60 லட்சம் மக்கள், இதுபோன்ற தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

இலங்கை – குவைத் விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடை நிறுத்தியது!

இலங்கை – குவைத் விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடை நிறுத்தியது! வீரகேசரி : இலங்கை மற்றும் குவைத்துக்கு இடையிலான அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 6 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இவ்வாறு இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. குவைத் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தீர்மானத்துக்கமைய இந்த விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளதாகவும்,13 ஆம் திகதியின் பின்னர் வழமைபோல சேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

திமுக: அடுத்த பொதுச் செயலாளர், பொருளாளர் .. டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, எ.வ.வேலு என பலத்த போட்டி

மின்னம்பலம் : திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மார்ச் 7ஆம் தேதி காலமானதை அடுத்து அக்கட்சி ஏழு நாட்கள் துக்கம் அனுசரித்து வருகிறது. இந்த நிலையில் நிர்வாக ரீதியாகப் பொதுச் செயலாளர் பதவி வெற்றிடமாகியுள்ளது பற்றி கட்சியில் விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.
வெளிப்படையாக இந்த விவாதங்கள் நடக்கவில்லை என்றாலும், அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி திமுகவின் அனைத்து மாசெக்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.
பேராசிரியர் அன்பழகனை அடுத்து இப்போதைய சீனியர்களில் முதன்மையானவர் பொருளாளராக இருக்கும் துரைமுருகன்தான். எனவே அவரையே பொதுச் செயலாளர் ஆக்கலாம் என்பதே ஸ்டாலினின் மனத்தில் ஓடும் எண்ணம்.
அப்படியே பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டால் அவர் இப்போது வகிக்கும் பொருளாளர் பதவி யாருக்கு என்பதில் பலத்த போட்டி இருக்கிறது. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, எ.வ.வேலு என பலத்த போட்டி நிலவுகிறது.

தமிழக பாஜக தலைவராகிறார் ஜி.கே.வாசன்... திமுக எம்.பி செந்தில் குமார் ட்வீட் ..

Dr.Senthilkumar.S @DrSenthil_MDRD GKவாசன்க்கு பிஜேபி பரிந்துரையில் ராஜ்ய சபா சீட் விரைவில் பிஜேபியில் இணைய இருக்கிறார். எனது புரிதலில் தமிழக தலைவராக வாசன் நியமிக்கப்படவுள்ளார் அப்போ இவ்வளவு நாட்கள் தொண்டை கிழிய கத்துன ஓயாமல் பலன் எதிர்பார்த்து ஆதரவு குடுத்த எங்க தமிழக பாஜக தலைவர்கள் கதி என்ன கொடுமை Sir இது
நக்கீரன் :மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகும் ஆறு
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான  கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல்வர் பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து மாநிலங்களவை சீட் வழங்க தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் கோரியிருந்த நிலையில், அதிமுக தலைமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு சீட் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ராஜ்ய சபாவுக்கு .. ஜி கே வாசன் ,தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர்

ஜி.கே.வாசன்மாநிலங்களவை தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்புமாலைமலர் : மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, கே.பி.முனுசாமி
பாராளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.), மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.), முத்துக்கருப்பன் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

hindutamil.in/news :  தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை சபாநாயகர்& தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் >ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு பிப்.16-ம் தேதி முதல்வராக பதவியேற்ற பழனிசாமி, அடுத்த சில தினங்களில் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி உள்ளிட்ட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஆனாலும் 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. அடுத்த 6 மாதங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தனர்.
இதனையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகt; சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆர் எஸ் எஸ் ஆதரவும் .. மீம்ஸ் நடிகர்களும்

நல்ல கருத்துள்ள மீம்ஸ் இயற்றுபவர்கள் பல பேர் சினிமா நடிகர்களின் பொருத்தமான படங்களை தேடும் போது அந்த நடிகர்கள் அந்த மீம்சுக்கு எதிரான கருத்துக்களை உடையவர்கள்  ஆக இருப்பது அந்த மீம்சின் கருத்தையே கேலி செய்வது போல அமைந்து விடுகிறது .அதிலும் குறிப்பாக ஆர் எஸ் எஸ் இன் ஆதரவாளர்கள் போன்று செயல்படும்  கமலஹாசன் ரஜினிகாந்த் போன்றோரின் படத்தை போட்டு அவர்ககளுக்கு தொடர்பே இல்லாத கருத்துக்களை  மீம்ஸ்களாக போடுகிறார்கள் .
அதில் ஒரு சந்தேகமும் வருகிறது . ஒரு வேளை இந்த மாதிரி மீம்ஸ் தயாரிப்பவர்கள் வேண்டுமென்றே மக்களிடம் கமலஹாசனையும் ரஜனிகாந்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக காசு வாங்கி கொண்டுதான் இவற்றை தயாரிக்கிறார்களோ தெரியவில்லை .
 ஆர் எஸ் எஸ் இன் பணம் எங்கும் செல்லும் வல்லமை நிறைந்தது . இந்த மாதிரி மீம்ஸ் தயாரிப்போர்கள் இனியும் ஆர் எஸ் எஸ் சார்பு நடிகர்களின் படத்தை போட்டால் , அதில் கூறப்படும் கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டவை என்றே கருத வேண்டும் .

சென்னையில் 10 விமானங்கள் ரத்து .. கொரோனா அச்சம்


தினத்தந்தி : சென்னை . சீனாவின் உகான் மாகாணத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 39 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசுபிக் ஆகிய நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன.

20 போலி நிறுவனங்கள்.. 2 ஆயிரம் கோடி முதலீடு.. யெஸ் வங்கி நிறுவனர் ராணா

Yes Bank, யெஸ் பேங்க், நிறுவனர், ராணா கபூர், கைது, சோதனை, 600 கோடிtamil.oneindia.com  : மும்பை: யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரும் அவரது குடும்பத்தினரும் 20 க்கும் மேற்பட்ட ஷெல் (போலியான0 நிறுவனங்களை அமைத்து சொத்துக்களை சட்டவிரோதமாக முதலீடு செய்வதற்கு பயன்படுத்தியதாக, அமலாக்க இயக்குநரகம் (ED) கண்டறிந்துள்ளது.
இந்நிலையில் ரானாவை வரும் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரக்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. யெஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. கடனை திருப்பி செலுத்த திறன் இல்லாதவர்கள் மற்ற வங்கிகள் கடன்தர முன்வராத பல நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கியிருக்கிறது.
இதன் காரணமாக வாரா கடன் அதிகரித்துள்ளது. எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல். ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் கடனை இன்னமும் திருப்பி செலுத்தவில்லை. இதனால் யெஸ் வங்கியின் வாராக்கடன் கடுமையாக அதிகரித்துள்ளது

இத்தாலியில் ஒரே நாளில் 50 பேர் பலி.. .ஈரானில் ஒரே நாளில் 49 பேர் பலி.. மிரட்டும் கொரோனா

Coronavirus: death toll jump in Iran and Italy By Velmurugan P - /tamil.oneindia.com:
தெஹ்ரான்: சீனாவைத் தொடர்ந்து ஈரானில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இன்று ஒரே நாளில் 49 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி விட்டது . குறிப்பாக கோவிட்-19 வைரஸ் எனப்படும் கொரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி ஆகிய அதிவேகமாகப் பரவி பலரை காவு வாங்கி வருகிறது.
இதேபோல் தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

"இனமானம் " என்றால் கசக்கிறது சிலருக்கு .. என்னதான் காரணமோ?

Sugan Paris 2 hrs · இன மா நம் இ ந மா னம் இந இந நம நம மா நம் நம் தந் த நம் நம் தந்த நம் நம் தந் த நம் நம் தந்தனம் தம்

 Radha Manohar இந்த பதிவில் தாங்கள் கூறுவது என்ன? இனமான பேராசிரியர் அன்பழகன்  அவர்களை சிறுமை படுத்துவதா? பதில் கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..
Sugan Paris :  தமிழக அரசியலுக்கு சீமானும் எச். ராஜாவுமே அதிகம் என்கிறேன் நான் .நீங்களாச்சு உங்க மானமாச்சு மனோ !

 Rubasangary Veerasingam Gnanasangary வாயால வடை சுடுவதைவிட சாதித்துக் காட்டுவதுதான் உண்மையான வெற்றி. மக்களை திசைத்திருப்புவதைத் தவிர சீமானும் எச். ராஜாவும் என்ன புடுங்க முடியும்? அவர்கள் இருவருமே ஒரேதளத்தில் நின்று இயங்குபவர்கள். பெரியார் எதிர்ப்பு மட்டுமே. பெரியாரின் கருத்துக்களை இன்னொரு படிமேல் கொண்டுசெல்லக் கூடிவர்கள் இன்றைக்கு எவருமே இல்லை. தமிழ் நாடு பேசும் இனமானம் பார்ப்பனியத்துக்கு எதிரானது மாத்திரமே.

 Radha Manohar :  இதுதான் அச்சு பிசகாத அசல் யாழ்மையவாதம் என்பது .. நாங்கள் மட்டுமே புத்திஜீவி அறிவாளி ..தமழ்நாட்டுக்காரன் என்றால் ஏதோ தங்களை விட தரம் குறைந்த மனித பிறவி என்ற தற்குறி மனோபாவம் .. ஆழமாக எதுவும் தங்களுக்கு தெரியாது என்பதை மிக தெளிவாக் உரைத்துள்ளீர்கள் . தமிழ்நாட்டை பற்றி இவ்வளவு தரம் தாழ்ந்த அபிப்பிராயம் இருக்கும் தங்களை போன்றவர்கள் இனி தமிழ்நாடு சினிமாவோ பாடல்களோ ரசிக்கவே கூடாது ..மேலும் தாங்கள் தமிழ் நாட்டு அரசியல் பற்றியும் கூறி உள்ளீர்கள் ..நிச்சயமாக உங்கள் அரசியலை விட அது ஆயிரம் மடங்கு சிறந்தது ..

 Giritharan Navaratnam : இனமானம் என்பது ""ப்ளடி பாசிஸ்ட் திங்க்கிங்'கா?
பாசிசம் என்றால் என்ன? ஒரு தனி மனிதனின் தலைமையில் கட்டுப்பாட்டில் நாடு, ஆட்சி, கட்சி போன்றவை அமையும் நிலையினை அவ்வாறு கூறலாம். இச்சொல் இத்தாலிய சர்வாதிகாரியான முசோலியின் அமைப்பினைச் சுட்டிக்காட்டும் வகையில் பூலோக அரசியலுலகில் அறிமுகமான சொல்.

நடிகை விஜலட்சுமி - சீமான் கடும் மோதல் ... கடும் தாக்குதல் ... வீடியோக்கள்

ஞாயிறு, 8 மார்ச், 2020

இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை- நாடாளுமன்ற குழு சிபாரிசு

இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை- நாடாளுமன்ற குழு சிபாரிசு
மாலைமலர் :இலங்கையில் ‘பர்தா’ அணிய உடனடி தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது.
கொழும்பு: இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி, ஈஸ்டர் தினத்தன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் ஆகியவற்றை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அவற்றில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இலங்கை முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து, பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு தேச பாதுகாப்பு தொடர்பான இலங்கை நாடாளுமன்ற குழு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக்குழு, தனது ஆய்வை முடித்துள்ளது.
 இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில், அக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குழுவின் தலைவர் மாலித் ஜெயதிலகா இதை தாக்கல் செய்தார். அதில், முக்கியமான சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன. அவை வருமாறு:- இலங்கையில் ‘பர்தா’ உடை அணிய உடனடியாக தடை விதிக்க வேண்டும். முகத்தை மறைக்கும்வகையில் யார் உடை அணிந்து இருந்தாலும், அவரது அடையாளம் தெரிவதற்காக, முக மறைப்பை நீக்குமாறு கேட்க போலீசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
 முக மறைப்பை நீக்க சம்மதிக்காவிட்டால், அந்த நபரை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

BBC: யெஸ் பேங்கின் நிறுவனர் ரானா கபூர் கைது - விசாரணை... அமலாக்கத்துறை


நிதி நெருக்கடியில் சிக்கி இந்திய ரிசர்வ் வங்கியால் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட யெஸ் பேங்கின் நிறுவனர் ரானா கபூர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைது செய்யப்பட்டார்.
நேற்றைய தினம் (சனிக்கிழமை) மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதற்குமுன், மும்பையில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு ஒன்றையும் பதிந்தனர்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகையை யெஸ் பேங்க், ஏற்கனவே பல நிதி சிக்கலில் மாட்டியிருந்த திவான் ஹவுசிங் நிதி நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கியதன் பின்னணியில் ரானா கபூர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ரவுண்டான இடிந்து விழுந்தது நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர் செல்லூர் ராஜூ: ... வீடியோ


வெப்துனியா : மதுரையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே அழகுபடுத்தபட்டு வரும் நிலையில் மதுரை செல்லூரில் ரவுண்டானா ஒன்று அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டார்
இந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ரவுண்டானா சரிந்து விழுந்தது. இதனால் அதில் வைக்கப்பட்டிருந்த கபடி வீரர்களின் சிலைகளும் கீழே விழுந்தன. இதனால் இந்த விழாவில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட அதிமுகவினர் பலர் கீழே விழுந்தனர்
இருப்பினும் அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் நூலிழையில் உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தால் மதுரை செல்லூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரவுண்டானா திறப்புவிழாவின்போதே இடிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பேராசிரியர்: மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தாதது ஏன்?

பேராசிரியர்: மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தாதது ஏன்?  மின்ன்னம்பலம்:  வயது முதிர்வின் காரணமாக திமுகவின் பொதுச் செயலாளரும், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருமான க.அன்பழகன் நேற்று (மார்ச் 7) இரவு 1 மணிக்கு காலமானார். கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி ராமதாஸ் உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை அன்பழகன் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு கலைஞரின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அஞ்சலி செலுத்துவார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அஞ்சலி செலுத்தச் செல்லாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு பேருந்து ஓட்டையில் தவறிவிழ இருந்த குழந்தை! பேருந்தை இயக்க விடாமல் நிறுத்தி போராடிய பெண் .

incident in dindigul incident in dindigul incident in dindigul .nakkheeran.in - சக்தி : திண்டுக்கல் நந்தவனம்பட்டியைச் சேர்ந்தவர் உஷா. பொறியியல் பட்டதாரி பெண்ணான இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியில் தங்களது தோட்டத்தில் விவசாயப் பணியை மேற்கொண்டு வருகிறார்.
உஷா வழக்கம்போல் திண்டுக்கல்லில் இருந்து எழுவனம்பட்டி செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குமுளி செல்லும் ஒரு அரசு பேருந்தில் தனது குழந்தையுடன் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளார். பேருந்து சிறிது தூரம் கடந்தவுடன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற தனது குழந்தை திடீரென தடுமாறி விழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தனது குழந்தையின் இருக்கையின் அடியில் பெரிய ஓட்டையை மறைத்து ஒட்டுப் போட்டு வைத்திருந்த தகரம் கிழிந்து குழந்தையின் கால் உள்ளே சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.