திங்கள், 9 மார்ச், 2020

அண்ணா ,காமராஜர் இல்லை .. ஆனால் சவர்கார், பட்டேல், சுபாஸ், இந்திரா விமான நிலைய பெயர்கள் இன்னும் தொடர்கிறது !


Ksb Boobathi : · விமான அறிவிப்பும் தமிழும் சென்னையில் பேசிய பிரதமர்மோடி , இனி விமானத்தில் தமிழில் அறிவிப்பு வெளியாகும் என சொன்னதும்,  ஆஹான்னு பலர் வரவேற்று பேசியுள்ளார்கள்..
தமிழகத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கு செல்லும் பிரிட்டன், ஜெர்மன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானங்களில் உள் அறிவிப்புகள் தமிழில்தான் செய்யப்படுகின்றன..
நீங்கள் அதை கேட்டிருக்கக்கூடும்.. ஆனால் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் விமானத்தில் இது வரை ஆங்கிலம்  ஹிந்தி மட்டுமே இருந்தது..,
அது தான் தமிழில் இனி வரும் என சொல்லியிருக்கிறார்கள்..
இதைச் சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன என்பதே அபத்தம்..
அடுத்து மிக முக்கியமான செய்தி..,!
சென்னை சர்வதேச  விமான நிலையத்தில் பெயர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் என இருந்தது, உங்களுக்கு தெரியும் தானே..?
இன்று அது சென்னை பன்னாட்டு விமான நிலையம் என மாற்றப்பட்டுள்ளது.. தலைவர்கள் பெயரை எடுக்க சொல்லி பாஜக மோடி அரசு 2017ஆம் ஆண்டு விமான போக்குவரத்துத் துறை ஓர் அறிவிக்கையை வெளியிட்டது.
ஆனால், இந்தியாவில் உள்ள மற்ற சர்வதேச விமான நிலையங்களில் தலைவர்களின் பெயர் அப்படியே உள்ளது. கொல்கத்தா விமான நிலையம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரிலேயே இருக்கிறது,
அகமதாபாத் சர்வதேச விமான நிலையம் சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரிலேயே இருக்கிறது,
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் என்றே #டெல்லி விமான நிலையம் அழைக்கப்படுகிறது,
போர்ட்ப்ளையர் விமான நிலையத்திற்கு இன்றும் #வீரசாவர்கர் விமான நிலையம் என்றே பெயர்.
 ஆனால், #அண்ணா_பெயர்மட்டும்_நீக்கப்பட்டது என்பது திராவிட அரசியலின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி தானே தவிர வேறல்ல..

 இதை , அண்ணா_பெயரில்கட்சி_நடத்தும் அதிமுக புறத்தே தள்ளிவிட்டு, அண்ணாவை ஒதுக்கித்தள்ளிய பாஜகவுடன்  கூட்டணி வைத்து தூக்கிபிடிப்பது இழிவினும்இழிவான செயல்..!

இந்த நாடகங்களை அன்பிற்குரிய நண்பர்களே.., நீங்கள் உணர்ந்து இந்த #கபடநாடக_வேடதாரிகளை புறக்கணிக்க வேண்டும்..

கருத்துகள் இல்லை: