சனி, 28 மார்ச், 2015

நடிகை கங்கனா : தீண்டத்தகாதவள்போல் நடத்தப்பட்டேன்

தீண்டத்தகாதவள்போல் நடத்தப்பட்டேன் என வேதனையுடன் கூறினார் தேசிய விருது வென்ற கங்கனா ரனாவத்.‘குயின்' இந்தி படத்தில் நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றிருக்கிறார். அவர் கூறியது:கேங்ஸ்டர் இந்தி படத்தில் நடித்தபிறகு என்னிடம் நடிப்பு திறமை குவிந்திருப்பதாக கூறினார்கள். தேசிய விருது என்பது பிராந்திய படங்களின்  நடிப்புக்கான கணக்காகவும் எடுத்துக் கொள்ளப்படுவதால் அதை நான் மதிக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் நான் மதிப்பு குறைவாக நடத்தப் பட்டிருக்கிறேன். தீண்டத்தகாத பெண்போல் பாவித்ததுடன் கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர். அதற்கு எனது தரப்பிலிருந்து நான் எந்த எதிர்ப்பும் தெரிவித்ததில்லை. நான் பேசும் பாணி, உடை அணியும் தன்மை போன்றவற்றையும் கேலி செய்வார்கள். ஒரு கட்டத்தில் தீவின் நடுவே அகப்பட்டுக்கொண்ட நபர் போலவே என் நிலைமையும் ஆனது.

AirIndia விமானத்தை கடத்த முயன்ற 5 பாகிஸ்தான் சந்தேக நபர்களை கோட்டை விட்ட ஏர் இந்தியா?

Hijack attempt foiled on board Air India flight to London?
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சமீபத்தில் டெல்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் திடீரென தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து அந்த பயணிக்கு விமானப் பணிப்பெண்கள் அவசர உதவிகள் செய்தனர். அப்போது பயணிகளில் 5 பேர் எழுந்து வந்தனர். தங்களை டாக்டர்கள் என்று கூறிக்கொண்ட அவர்கள், உடல்நலக் குறைவு என்று கூறப்பட்ட பயணியை சோதித்தனர். பிறகு அவர்கள் 5 பேரும் விமான கேப்டனை வரச் சொல்லுங்கள் அல்லது கேப்டன் அறைக்குள் அனுமதியுங்கள் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள், 5 பேரையும் விமானி அறைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதற்கிடையே டாக்டர்கள் என்று கூறிக்கொண்ட 5 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பயணிக்கு கேப்டன் அறைக்குள் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறியபடி இருந்தனர். ஆனால் கேப்டன் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
விமானம் லண்டன் சென்று சேர்ந்ததும் 5 பேரும் அவசரம் அவசரமாக வெளியேறி சென்று விட்டனர். அவர்களது நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் இதுபற்றி விமான நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் என்று கூறிய 5 பேர்கள் பற்றி ஏர்–இந்தியா நிறுவனம் ஆய்வு செய்தது. அப்போது அவர்கள் 5 பேரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. அவர்கள் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டபோது அவை போலி என்று தெரிய வந்தது.
அதுபோல உடல் நலக்குறைவு என்று கூறிய பயணிக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவு ஏற்படவில்லை என்றும், அவர் விமானப் பணிப் பெண்களை ஏமாற்ற நடித்து இருப்பதும் தெரிந்தது. அவரும் போலி தொடர்பு எண் கொடுத்திருந்தார். எனவே அவர்கள் 6 பேரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காஷ்மீர் : இந்திய அணியின் தோல்வியை கொண்டாடினார்கள்!

ஸ்ரீநகர், உலக கோப்பை அரையிறுதி  ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வியை காஷ்மீர் மக்கள் கொண்டாடியதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது உலக கோப்பை அரையிறுதி போட்டியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியாத பல ரசிகர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டனர். அதேபோல், இந்தியாவிலும் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். சிலர் தங்கள் தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்தும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். 

தூத்துக்குடி:10 வகுப்பு தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமையாசிரியர் 14 மாணவர்களுக்கு கல்வி மறுப்பு?

நீண்டகாலமா தமிழகத்தில் இருக்கும் பிரச்சினை தான்..ஒரு குறிப்பிட்ட மாவட்டம் மட்டும் அதிக தேர்ச்சி விகிதம் காட்டுவது எப்படி என்ற குட்டு சமீபத்தில் உடைந்தது..அது போன்று தான் இதுவும்..பல தனியார் பள்ளிகளும் சில அரசு பள்ளிகளும் கூட மாணவர்களை தேர்வு எழுத விடாமல் அதிக தேர்ச்சி விகிதம் காட்டி வருவது ஒன்றும் புதிதல்ல....பிஹார் சம்பவம் பிட்டை மட்டும் காட்டவில்லை பல பள்ளிகளின் குட்டையும் உடைத்தது
தூத்துக்குடி அருகேயுள்ள நாசரேத் பகுதி பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தடுத்ததால், தேர்வு எழுத முடியவில்லை என , மாணவர், அவரது பெற்றோர், உறவினர்களுடன் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.இதே போல 14 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.மாணவனின் தந்தை அழகு கலெக்டரிடம் அளித்த புகார்:
நாசரேத் பகுதியில் மர்காஷியஸ் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் என் மகன் முத்துராமன் பத்தாம் வகுப்பு படித்தான். தேர்வு கட்டணம் செலுத்திவிட்டான், அவனுக்கான ஹால்டிக்கெட் வந்துவிட்டது. ஆனால் பள்ளியின் தலைமையாசிரியர் ஜோசப் ஜெயராஜ் என் மகனிடம், '' நீ பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையமாட்டாய், எனவே நீ பள்ளிக்கு வரவேண்டாம். தேர்வு எழுதவும் கூடாது'', என மிரட்டியுள்ளார்,' இதனால் மன உளைச்சல் அடைந்த எனது மகன் சென்னைக்கு ஓடி விட்டான்.

திமுக அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் மேகதாது அணை பிரச்சனைக்காக டெல்லி......

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கக் கோரும் சட்டசபை தீர்மானத்தை, பிரதமரிடம் வழங்க, தமிழகத்தைச் சேர்ந்த, எதிரெதிர் துருவங்களான தி.மு.க., - அ.தி.மு.க., ஒன்று சேர்கின்றன. அவற்றுடன், பா.ம.க., - பா.ஜ., - காங்., - கம்யூனிஸ்ட் என, எல்லா கட்சிகளின் எம்.பி.,க்களும் டில்லி செல்ல முன்வந்துள்ளனர். எலியும் பூனையுமாக இருக்கும் இக்கட்சிகள் அனைத்தும், இந்த விஷயத்தில், அ.தி.மு.க., அழைப்பை ஏற்று அணி சேர்ந்துள்ளது, அதிசய கூட்டணியாகவே கருதப்படுகிறது. 'காவிரியில் புதிய அணை கட்ட, கர்நாடகத்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்' என, சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை, டில்லியில், பிரதமர் மோடியிடம் அளிப்பதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த எல்லா கட்சிகளின், எம்.பி.,க்களும் வர வேண்டும் என, அ.தி.மு.க., தரப்பில், முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.அதை, பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., ஏற்றுக் கொண்டுள்ளதுடன், தன் கட்சி சார்பில், டில்லி செல்லும் குழுவில், திருச்சி சிவா இடம் பெறுவார் என்றும் அறிவித்துள்ளது.அதேபோல், பா.ம.க., தரப்பில், அக்கட்சியின் ஒரே எம்.பி.,யான அன்புமணியும், இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.  மாநில பிரச்சினைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நீண்ட கால கோரிக்கை. அதை அலட்சியப்படுத்தி வந்தது அதிமுக தான்.

வெள்ளி, 27 மார்ச், 2015

66ஏ சட்டப் பிரிவுக்கு யார் பொறுப்பு?: ஆ.ராசா விளக்கம்

தகவல்தொழில்நுட்பச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவான 66ஏ பிரிவுக்கு ஒட்டுமொத்த அமைச்சரவையுமே பொறுப்பு என்றும், தன்னை மட்டுமே பொறுப்பாக்கக்கூடாது என்றும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார். இணையத்தில் தெரிவிக்கும் கருத்துகள் ஆட்சேபகரமாக இருந்தால், கருத்துத் தெரிவித்தவரை கைதுசெய்ய வழிவகுக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவை ரத்துசெய்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த சட்டம் குறித்து பேசிய முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ், முன்னாள் மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தான் இந்த பிரிவை உருவாக்கியவர் என்று கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆ.ராசா, இது போன்ற சட்டங்கள் உருவாகும்போது, அதனை ஒட்டுமொத்த அமைச்சரவையின் முடிவாகத்தான் கருத வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவன் மீது பழி சொல்வது ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ளார்.

டீஸ்டா செடல்வாட்: வரலாற்று புத்தகங்களில் இருந்து அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, கான் அப்துல் கஃபார் கான், சந்தால்?

டீஸ்டா செடல்வாட். 2002 குஜராத் கலவர வழக்கைப் பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாத பெயர்களில் முக்கியமானது. ஆளும் கட்சிக்கு எதிராகவும், இந்தியாவின் பெரிய மதவாத அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவருவது அத்தனை எளிதல்ல. அந்தப் போராட்டத்தின் விளைவாக இவர் மீதும் இவரது செயல்பாடுகள் மீதும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொலை மிரட்டல்கள் குவிந்தன. இவற்றுக்கெல்லாம் கொஞ்சமும் அசராமல், பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி கேட்டுப் போராடுவதில் பின்வாங்காமல் இருப்பதொன்றே டீஸ்டாவின் மன உறுதிக்குச் சான்று. சென்னை வந்திருந்தவரிடம் பேசினோம்...
உங்கள் சமூகப் பார்வைக்கான அடித்தளம் எது?

ராமானுஜர் வரலாற்று தொடர் கலைஞர் டிவியில்! வசனம் கலைஞரேதான்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சாதி, மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த ராமானுஜரைப் பற்றிய தொடரை எடுங்கள் என்று நடிகையும் இயக்குநருமான குட்டிபத்மினியிடம் உத்தரவிட்ட கலைஞர் கருணாநிதி, அந்த தொடருக்கு அவரே வசனம் எழுதப்போகிறார். 11வது நூற்றாண்டில் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த சமய சீர்திருத்தவாதியும், வைணவ சீர்திருத்தவாதியும், விசிஷ்டாத்வைத தத்துவத்தை கற்பித்தவருமான, ராமானுஜர் குறித்த தொலைக்காட்சித் தொடருக்கு திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதுவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்மீக துறவியான ராமானுஜரின் வரலாற்றை எழுத கருணாநிதியின் பேனா தலை வணங்குமா என்பதுதான் இப்போது பலரது கேள்வியாக உள்ளது. அதற்கான பதிலை தொடரைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் கருணாநிதி.

சவுக்கு : உடன்குடி ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து ஊழலோ ஊழல்! உடன்படாதகுடி.ஜெயலலிதா ஒரு மிகப்பெரிய அழிவுசக்தி !

power_923086f2011ல் ஆட்சிக்கு வந்த உடன், திமுகவினரை கைது செய்தார்.    2011 இறுதியில் சசிகலாவை விரட்டினார்.   2012ல், சசிகலாவின் உறவினர்களை கைது செய்தார்.     2012 மத்தியில் சசிகலாவை மீண்டும் தோட்டத்துக்கு அழைத்தார்.   சிறை சென்ற மன்னார்குடி மாபியா உறுப்பினர்கள் அனைவரையும் விடுதலை செய்தார்.     2014 தொடக்கத்தில் சசிகலா வெளியேறியபோது, அவரை விமர்சனம் செய்த அமைச்சர்களையும், கட்சியினரையும் நீக்கினார்.    நான்காம் ஆண்டு முடிவில், அவரே சிறை சென்றார்.    தற்போது மேல் முறையீட்டில் உள்ள வழக்கோடு மல்லுக் கட்டிக் கொண்டு, தமிழகத்தில் எந்த திட்டமும் செயல்படுத்த விடாமல் தாமதப்படுத்துகிறார்.     தயாராக இருக்கும் மெட்ரோ ரயிலைக்கூட தொடங்க விடாமல் தாமதப்படுத்தி வரகிறார்
உடன்குடி அனல் மின் நிலையத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து, கண்டிக்காத எதிர்க்கட்சிகளே இல்லை.     அந்த அளவுக்கு பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  ஆனால், தமிழக அரசோ எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல, கவலையே இல்லாமல் இருக்கிறது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த ஆவணங்களை அழிக்கும் பணியில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வந்துள்ளது.    அந்த முயற்சியை முறியடிப்பதற்காகவே இந்த கட்டுரை.

சௌகார் பேட்டை! வெட்டேத்தி சுந்தரம் என்ற காட்டேரி படம் எடுத்தவரின் புதியபடம்



மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக ராய் லட்சுமி நடிக்கிறார்.  மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜான் பீட்டர் இசையமைக்க படத்துக்கு சீனிவாசரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வி.சி..வடிவுடையான். இவர் 'தம்பிவெட்டோத்தி சுந்தரம்’ என்ற படத்தை இயக்கியதுடன், விரைவில் வெளியாக உள்ள “ கன்னியும் காளையும் செம்ம காதல் ‘படத்தையும் இயக்கி உள்ளார்.

மேகதாது அணை கட்ட தடை விதிக்க உச்ச நீதிமன்றில் தமிழகம் கோரிக்கை

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. புதுடெல்லி, கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத் தின் சில மாவட்டங் களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் முறைப் படி வழங்குவது இல்லை. தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பினால் மட்டுமே, உபரி நீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு திறந்து விடுகிறது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இரு இடங்களில் புதிய அணைகளை கட்ட கர்நாடகம் திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி இருக்கிறது.

நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத் தடை

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியைப் பெறாமல் தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கக் கூடாது என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. பொட்டிபுரம் மலைப் பகுதியில் மத்திய அரசு ரூ. 1,000 கோடியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க உள்ளது. இதில் பூமியின் தோற்றம் குறித்த துகள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சந்திரிகா தலைமையில் இலங்கைத் தமிழர் மறுசீரமைப்புக் குழு

இலங்கைத் தமிழர் மறுசீரமைப்புக்காக அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் சிறப்பு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அண்மையில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "தமிழர்கள் நலனைப் பாதுகாப்பதையும், அவர்களுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார். "தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் இலங்கை அரசின் 13-ஆவது சட்டத் திருத்தத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யவும், அவர்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை உடனடியாக மேற்கொள்வதற்காகவும், சிறப்பு நடவடிக்கைக் குழுவை அந்நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசு அமைத்துள்ளது. அந்நாட்டின் முதல் பெண் அதிபரான சந்திரிகா குமாரதுங்க அந்தக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிகவிலையில் ஸ்பெக்ட்ரம் ஏலம் பொதுமக்கள் தலையில் வந்து விழும்! ராசா கூறியதுதான் சரி!

புதுடில்லி: ''தொலைத் தொடர்பு அலைக்கற்றைகளான, 'ஸ்பெக்ட்ரம்' ஏலத்தை, அதிக விலைக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாங்கியுள்ளதால், அவற்றின் ஒட்டுமொத்த கடன், 3.5 லட்சம் கோடியாக உயரும். ''இதனால், தொலைத் தொடர்பு கட்டணங்கள் உயர்த்துவதைத் தவிர, இந்த நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை,'' என, 'அசோசேம்' எனப்படும், இந்திய வர்த்தக சபையின் (தொலைத் தொடர்பு) தலைவர், டி.வி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் நிறைவடைந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம், 1.09 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு திரட்டியுள்ளது. அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதலாக, 68 சதவீத பிரீமியத்தில், ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளதால், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடன் பளு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, வேறு வழியின்றி, தொலைத் தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படும் என்பது, ராமச்சந்திரனின் கருத்து தினமலர்.com  ஆ.ராசா இதைதான் அடித்து கூறினார் ஸ்பெக்ட்ரம் என்பது மக்களுக்கு சேரவேண்டிய சேவை அதில் அதிக லாபம் பார்க்க கூடாது என்றார் . இதனால்தான் மன்மோகன் சிங்கும் ஆதரித்தார். பிரம்மஸ்ரீ கிரிமினல் ஊடஹங்களும் ஒட்டு மொத்த சுயநலமிகளும் சேர்ந்து இதோடு ராசாவும் திமுகவும் ஒழியவேண்டும் என்று பிரசாரம் செய்தார்கள். இனி மக்கள் படிப்பார்கள்

வியாழன், 26 மார்ச், 2015

ஜெயலலிதா விடுதலை ஆகிவிடுவோம் என்று எப்படி நம்புகிறார்? வழக்கின் வெயிட் என்ன?

sasi3கடந்த இரண்டு மாத காலத்துக்கும் மேலாக நடந்து வந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீடு புதன் கிழமையோடு முடிவுக்கு வந்துள்ளது. நீதிமன்றத்தில் வாதப் பிரதிவாதம் என்று நடந்த நாடகங்கள் குறித்து பின்னர் முழுமையாக பார்ப்போம்.
செப்டம்பர் 26 முதல், தமிழகம் இருந்து வரும் நிலைமை மிக மிக பரிதாபகரமானது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் சந்தித்திராத ஒரு அவல நிலையில் இருந்து வருகிறது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் கோமா நிலையில் இருக்கும் எதிர்க்கட்சிகள், செயலிழந்த நிர்வாகம், ஒரு தண்டிக்கப்பட்ட கைதியின் பெயரால் தடங்கலின்றி நடக்கும் கொள்ளை, மிரட்டப்படும் அதிகாரிகள், தங்கு தடையின்றி நடக்கும் வசூல், முடங்கிய தொழில் துறை, பூதாகரமாக அச்சுறுத்தும் மின்வெட்டு என்று தமிழகத்தை பீடிக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

துணை விமானி வேண்டுமென்றே மலையில் மோதியதாக குற்றச்சாட்டு


ஜெர்மன் விமானத்தை துணை விமானி ஆல்ப்ஸ் மலையில் வேண்டுமென்றே மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று விசாரணை அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டோர்ப் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட ஜெர்மன்விங்ஸ், 4யூ 9525 விமானம் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 16 பள்ளிக்குழந்தைகள் உட்பட 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் மரணமடைந்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விமானி ஒருவர் காக்பிட்டில் இருந்து வெளியேறினார். அதன்பின் கதவு மூடிக்கொண்டது. அவர் பலமுறை தட்டியும் துணை விமானி எந்த பதிலும் அளிக்க வில்லை. அதனால், அவர் மயக்கமான நிலையில் இருந்திருக்கலாம். ஆகையால் விமானம் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.

Cricket இந்திய அணிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட வேலூர் ரசிகர்! அதிமுக அடிமையாயிருப்பாரோ?

வேலூர்: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் சிட்னி நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் பலரும் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு எடுத்தனர். இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. டோணி நின்று விளையாடி அணியின் ரன்கள் கணிசமாக அதிகரிக்க பெரிதும் உதவினார். அவர் அவுட்டான பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்துவிட்டது. ஜெயலலிதாவுக்காக  மட்டுமா நாக்கை அறுப்போம்? கிரிகெட்டுக்காகவும் நாக்கை  அருப்போம்ல? தமிழனா கொக்கா?

குஷ்பூ: திமுகவை விட்டு வந்ததால் அதை விமர்சிக்கவேண்டும் என நினைக்கவில்லை

பெண்களுக்கு தட்டுப்பாடு ? பெண் சிசு கொலைகளால் ஆண்கள் நாயாக அலையவேண்டிய காலம் வந்து கொண்டு...

இயல்பான பாலின விகிதம் என்பது 1,000 ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்களும் இருப்பதுதான். ஆனால், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஆண்- பெண் விகிதம் முறையே 1,000-க்கு 943 என்ற எண்ணிக்கையிலேயே உள்ளது. ஹரியாணா மாநிலத்தில் மேலும் குறைந்து 877 பெண்களே உள்ளனர்.
இதையடுத்து, பாலின விகிதத்தை சமமாக கொண்டு வரவும், கருவிலேயே பெண் சிசு அழிக்கப் படுவதைத் தடுக்கவும், புதிய சட்டம் கொண்டு வர ஹரியாணா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பெண் கருவுற்ற 3 மாதங்களுக்குள், அந்த விவரத்தை அரசிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், கருவுற்ற பெண்ணின் பெற்றோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க அந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்படும் என்று தெரிகிறது.

இரவும் பகலும் வரும் ! அங்காடிதெரு மகேஷுக்கு ப்ரேக் கொடுக்குமா?

பால ஸ்ரீராம் இயக்கத்தில் ’அங்காடித்தெரு’ மகேஷ், அனன்யா, இயக்குனர் வெங்கடேஷ், ஜெகன் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் இரவும் பகலும் வரும். நாட்டில் அதிகமாகிவிட்ட கொள்ளை சம்பவங்களைப் பற்றி விவாதிக்கிறது இந்த திரைப்படம். எந்தவொரு மனிதனும் திருடனாக பிறப்பதில்லை, அவனைச் சுற்றியிருக்கும் சுழ்நிலையும், சந்தர்ப்பங்களுமே ஒருவனை திருடனாக்குகிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். 

மிரட்டலுக்கு பயந்து வீடு மாறிய வேளாண் அதிகாரி குடும்பம்

திருநெல்வேலி: நெல்லையில், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், அவிழாத மர்ம முடிச்சுகள் பல உள்ள நிலையில், வழக்கை, 'குளோஸ்' செய்து, அ.தி.மு.க.,வினரை காப்பாற்றும் நோக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வேளாண் துறையில், டிரைவர்கள் நியமன விவகாரத்தில், நெருக்கடி காரணமாக, நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி, முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்ட விவகாரம், தமிழகத்தில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக நியமனம் ஆன, ஏழு டிரைவர்களிடம் பணம் பெற்ற விவகாரம்தான் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க.,வினரிடம், அரசு வேலைக்காக, இரண்டு லட்சம்; மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து ஏமார்ந்தவர்கள், மொத்தம் 32 பேர்.

திருகோணமலை ஆயில் டாங்கிகள் இந்திய நிறுவனத்திற்கு குத்தகை

மஹிந்த ராஜபக்0ஷ அர­சாங்­கத்தின் காலத்தில், இந்­தி­யா­வுக்கு நெருக்­கடி கொடுக்­கப்­பட்ட, திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்கள் விவ­கா­ரத்­துக்கு இப்­போது முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கைப் பய­ணத்தின் போது, திரு­கோ­ண­ம­லையில் உள்ள எண்ணெய்க் குதங்­களை, இந்­தி­யாவின் ஐ.ஓ.சி .(இந்­தியன் ஓயில் நிறு­வனம்) நிறு­வனம் ஊடாக புனரமைப்­ப­தற்கு இரு நாடு­களும் இணைந்து உடன்­பாடு ஒன்றில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.
13 ஆண்­டு­க­ளுக்கு முன்னர், ரணில் விக்­கிர­ம­சிங்க பிர­த­ம­ராக இருந்த அர­சாங்­கத்­துடன் செய்து கொள்ளப்­பட்ட உடன்­பாட்­டுக்கு அமைய, திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்­களின் மீதான கட்டுப்பாட்டை இந்­தியா தன்­வசம் எடுத்துக் கொண்­டி­ருந்­தாலும், மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் அந்த உடன்­பாடு எந்த நேரத்­தி­லா­வது இடை­நி­றுத்­தப்­ப­டுமா என்ற கேள்வி நீடித்துக் கொண்டேயிருந்தது.
அப்­போது, திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்­களை புன­ர­மைத்து பயன்­ப­டுத்­து­வ­தற்கு 35 ஆண்டுகால குத்­தகை உடன்­பாட்டில் ஐ.ஓ.சி. நிறு­வ­னத்­துடன் இலங்கை அர­சாங்கம் கையெழுத்திட்டிருந்­தது.

தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகிறார் சதாசிவம்?

புதுடில்லி: கேரள மாநில கவர்னர் சதாசிவம்தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர் பதவி வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது முன்னதாக (என்.எச்.ஆர்.சி) இப்பதவியில் இருந்து வரும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வரும் ஜூன் மாதம் ஒய்வு பெற உள்ளார். இதனையடுத்து அப்பதவிக்கு போட்டியிட சதாசிவம் விருப்பம் தெரிவி்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1993-ம் ஆண்டு முதல் என்.எச்.ஆர்.சி பதவிக்கு ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே .தலைவர்களாக நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். ரங்கநாத்மிஸ்ரா (1993-96),எம்.வெங்கடசாலையா (1996-99),எஸ். வர்மா (1999-2003),ஏ.எஸ்., ஆனந்த் (2003-2006) ராஜேந்திரபாபு (2007-2009) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.ஆஹா சதாசிவம் நிச்சயமாக மனித உரிமை கமிசனுக்கு மட்டுமல்ல ஜனாதிபதி பதவிக்கு கூட  ரொம்ப  லாயக்கானவர்தான். அவரது ட்ராக் ரிகார்ட் அப்படி. அமித்ஷா ஜெயலலிதா போன்றவர்கள்  சட்டத்தின் பிடியில்  இருந்து தப்பிக்க இந்தமாதிரி எல்லாம் தேவைதான் .

புதன், 25 மார்ச், 2015

நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோ பறிமுதல்! கடன் சுமை ...


மறைந்த நாகேஸ்வரராவின்  மகன் நாகார்ஜுனா. இவரது குடும்பத்துக்கு சொந்தமான அன்னபூர்ணா சினிமா ஸ்டுடியோ ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. 7 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவுக்காக ஆந்திரா வங்கி, இந்தியன் வங்கி என 2 வங்கிகளில் சுமார் ரூ.62 கோடி கடன் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த தொகை திரும்ப செலுத்தாதையடுத்து ஸ்டுடியோவை வங்கி பறிமுதல் செய்திருக்கிறது என டோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.இதுபற்றி வங்கி தரப்பிலான நோட்டீஸ், நாகார்ஜுனா, வெங்கட் அக்கினேனி, சுப்ரியா உள்ளிட்ட பலருக்கு அனுப்பப்பட்டது. அதில், ‘7 ஏக்கர் பரப்பிலான இந்த ஸ்டுடியோ மீது பெறப்பட்ட கடன் மற்றும் வட்டி திருப்பி செலுத்தப்படவில்லை. எனவே ஸ்டுடியோ பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'  என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - See more at: .tamilmurasu.org

பெங்களூர் அதிகாரி மரணம்! சி சி டி வி கமெரா பதிவுகளை அழித்த போலீஸ்!


பெங்களூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், முக்கிய சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மணல் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியான டி.கே.ரவி, கடந்த வாரம் தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினரின் தொடர் போராட்டத்தையடுத்து இவ்வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான முக்கிய காட்சிகளை விசாரணை அதிகாரிகள் அழித்துவிட்டதாக அதிகாரி ரவியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.