சனி, 20 டிசம்பர், 2014

Social media ஓடும் ரயிலில் தங்கையை காப்பற்றிய அண்ணனின் twitter

டெல்லி: ஓடும் ரயிலில் குடித்து விட்டு பெண்ணை கேலி செய்த நபர்கள் டிவிட்டர் உதவியால் கைது செய்யப்பட்டனர். பாட்னாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று சங்கமித்ரா ரயிலில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார். அவர் பயணித்த அதே பி3 ஏசி கோச்சில் மேலும் மூன்று வாலிபர்களும் பயணித்துள்ளனர். ரயில், பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் மதுபான பாட்டிலை எடுத்து மாற்றிமாற்றி மது குடிக்க ஆரம்பித்துள்ளனர். மது போதையில் தங்கள் பெட்டியில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணையும் அவர்கள் கிண்டல் செய்துள்ளனர இதைப்பார்த்த அன்குர்சிங் அதிர்ச்சியடைந்தார். ஓடும் ரயிலை விரட்டி பிடித்து தங்கைக்கு உதவி செய்வது இயலாத காரியம் என்பதை உணர்ந்த அன்குர்சிங், ஒரு முடிவுக்கு வந்தார். தங்கை அனுப்பிய போட்டோவையும், ரயில் விவரத்தையும் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டு அதை, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு மற்றும், ரயில்வே அமைச்சக டிவிட்
ரயில்வே அமைச்சக டிவிட்டர் தளத்தை பாலோ செய்யும் டிவிட்டர் பயனாளிகள் பலரும் இதை பார்த்து உடனடியாக அன்குர்சிங்கிற்கு டிவிட் செய்ய ஆரம்பித்தனர்.

Traffic Ramasamy:சமூகசேவகி பாத்திமாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் பாத்திமா. இவர் நேற்றுகாலை சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியுடன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் இருவரும் போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சைக்கு வந்தது குறித்து டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறும்போது, நீதிமன்ற உத்தரவுபடி எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் உயிரை பற்றி கவலைப்படவில்லை. ஆனால் இந்த பெண்ணுக்கு (பாத்திமா) பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டால் தனிப்பட்ட முறையில் எல்லோருக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறுகின்றனர்.
போலீசாரின் அணுகு முறை சரியில்லை. மணல் கொள்ளை, அனுமதியின்றி விளம்பரபலகை வைப்பது உள்பட பல்வேறு முறை கேடுகளை எதிர்த்து பாத்திமா நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடர்ந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பாத்திமாவை கொலை செய்ய 3 முறை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அரவிந்தர் ஆஸ்ரமத்தை இழுத்து மூட வலியுறுத்தி முழு அளவு கடையடைப்பு

Agitation against Aurobindo Ashram அரவிந்தர் ஆசிரம பெண்கள் மூவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அந்த ஆசிரமத்தை இழுத்து மூட வலியுறுத்தி 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் விடுத்த முழு அடைப்பு அழைப்பை ஏற்று புதுவையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் புதுவையில் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.
ஆசிரமத்தினை மத்திய, மாநில அரசுகள் கையகப்படுத்தி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிர்வகிக்க வேண்டுமென்றும், அதுவரை ஆசிரமத்திற்கு சீல் வைக்க வேண்டுமெனவும்,சகோதரிகளின் தற்கொலை குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென்றும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல், சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுவதாக மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
/tamil.oneindia.com

நடிகர் நெப்போலியன் பா.ஜனதாவில் சேருகிறார் !நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும் சேருகிறார் !

பா.ஜனதா தலைவர் அமித்ஷா முன்னிலையில் நடிகர் நெப்போலியன் பா.ஜனதா கட்சியில் இணைகிறார். நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தவர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மந்திரியாகவும் பணியாற்றினார். > தி.மு.க.வில் செல்வாக்குடன் இருந்த நெப்போலியன் அழகிரி ஆதரவாளராக செயல்பட்டதால் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். இதனால் கட்சிப்பணிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்த நிலையில் பா.ஜனதாவில் சேரும் முடிவை அவர் எடுத்துள்ளார். பா.ஜனதா தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். நாளை அவரை நேரில் சந்தித்து நெப்போலியன் பா.ஜனதா கட்சியில் சேருகிறார். நெப்போலியனுடன் அவரது ரசிகர் மன்ற மாநில தலைவர் கவுரிசங்கர், செயலாளர் மாந்துறை ஜெயராமன், பொருளாளர் சீதாராமன், துணை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பா.ஜனதாவில் சேருகிறார்கள்.  இரண்டு பெரும் இருந்த கொஞ்ச நஞ்சம் பெயரையும் தொலைச்சு புட்டாய்ங்க

ராபர்ட் வத்ரா ஊழல் முக்கிய ஆவணங்களை காணல்லியாம்?

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கும், முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான, டி.எல்.எப்.,க்கும் இடையே, அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நில பேரம் தொடர்பான, முக்கிய ஆவணங்கள், திடீரென காணாமல் போயுள்ளன. இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அரியானாவில், இப்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசு பதவியில் உள்ளது. இதற்கு முன், காங்கிரசை சேர்ந்த, பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான அரசின் ஆட்சியின் போது, சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா, ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்தார்.அவரின் மோசடிகளை அம்பலப்படுத்திய அசோக் கெம்கா என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஆளும் காங்., அரசின் தொந்தரவுகளுக்கு ஆளானார்.   கெம்கா இன்று ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் இந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.. முதலில் ஆவணங்களைக் காணோம் என்று அரசு குற்றப்பதிவு செய்யட்டும்.. பின்னால் பாருங்கள்.. என்னாமே தானாக வந்து கையில் விழும்.. என்கிறார்.. இவரிடம் காணாமல்போன ஆவணங்களின் நகல் இருக்கிறது... எனவே யாராவது விளையாட நினைத்தாலும் நடக்காது.. ஆனால் ராபர்ட் வத்ரா ஒரு மோசமான பேர்வழி... சமாளிக்க முடியாது போனால் சமாதி கட்டவும் தயங்காத மனம் ..... கெம்கா ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும்... இங்கே ஒரு சகாயம் கல்லுளிமங்கன்களிடம் சிக்கியிருக்கிறார்.. அங்கே ஒரு கெம்கா பகல் கொள்ளையனிடம் சிக்கியிருக்கிறார்.. என்னாகுமோ......

Policeஅதிகாரிகள் வீடுகளில் அடிமைவேலை செய்யும் போலீசாருக்கு விடுதலை எப்போது?


உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், எடுபிடி வேலை செய்யும், 'ஆர்டர்லி' போலீசார், அடிமை வாழ்வில் இருந்து, விடுதலை கிடைக்காதா என, ஏக்கத்துடன் உள்ளனர்.தமிழக காவல் துறையில், டி.ஜி.பி., - கூடுதல் டி.ஜி.பி., முதல், காவலர் வரை, 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், 5,000 போலீசார், உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், எடுபிடி வேலை செய்யும், 'ஆர்டர்லி'யாக உள்ளனர்.உயர் போலீஸ் அதிகாரிகளின் வாரிசுகளை, பள்ளி, கல்லூரிக்கு அழைத்து செல்லுதல், காய்கறி வாங்கி வருதல், தோட்டம் மற்றும் நாய் பராமரிப்பாளர், குடும்பத் தலைவியை அழகு நிலையம் அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், 'ஆர்டர்லி' போலீசார் பலர், மனம் வெதும்பிய நிலையில் உள்ளனர்.  A parliamentary panel wants the government to completely abolish the 'orderly system' — posting of low-ranking cops (mainly constables) as orderlies at residences of senior police officers from police forces.
Maintaining that the orderly system affected the morale of police personnel who are trained to do regular policing jobs, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மக்களின் முதல்வருக்கும் கூட வெட்கமில்லாமல் நூற்றுக்கணக்கில் அடிமைகள் இருக்கும் பொழுது இதெல்லாம் என்ன விசயம்... அடிமை தேசம்....

பூமணி எழுதிய 'அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது! பூ.மாணிக்கவாசகம்

சென்னை: இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளார் பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின் 'அஞ்ஞாடி'  என்ற நாவல் இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். பூமணி பல்வேறு இலக்கியப் பங்களிப்பை தமிழில் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின்  வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை. அஞ்ஞாடி  நாவல் 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம்,  பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி,  நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற உள்நாட்டு மோதல்கள்,  ஜமீன்கள் அமைப்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.

விகடன் குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் மறைவு !

 விகடன் குழும நிறுவனங்களின் சேர்மன் திரு எஸ்.பாலசுப்ரமணியன் (79), இன்று 19.12.2014 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு காலமானார். சிறிதுகாலமாக உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், மாரடைப்பால் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகையுலகிலும் முடிசூடா சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த திரு எஸ்.எஸ். வாசன் அவர்களின் தவப்புதல்வனான திரு எஸ்.பாலசுப்ரமணியன், தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் வகித்து வந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். ஆனந்த விகடனை தமது சீரிய சிந்தனையாலும் நுட்பமான செயல்திறனாலும் இன்னும் இன்னும் வளர்த்து, மேலே உயரே உயர்த்தி தமிழ்ப் பத்திரிகையுலகில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக உச்சம் தொடவைத்தவர் ’எம்.டி.’ என்றும் ‘சேர்மன்’ என்றும் அன்புடன் அழைக்கப்படும் திரு எஸ்.பாலசுப்ரமணியன், தன் அப்பாவைப் போன்று சினிமா உலகிலும் நுழைந்து, வெற்றிப் படங்களை இயக்கியவர். பிறகு, இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்பாமல், ஆனந்த விகடன் மீது மட்டுமே தன் அத்தனை கவனத்தையும் செலுத்தியவர்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

மணிரத்தினத்தை காய்ச்ச்சிய கீது மோகன்தாஸ்


நள தமயந்தி, பொய், என் பொம்முகுட்டி அம்மாவுக்கு படங்களில் நடித்திருப்பவர் கீது மோகன்தாஸ். மல்லுவுட் கேமராமேன் மற்றும் இயக்குனருமான ராஜீவ் ரவியை மணந்தார். சமீபத்தில் ராஜீவ் ரவி இயக்குனர்கள் மணிரத்னம், மல்லுவுட் நடிகர் சீனிவாசன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ' மணிரத்னம் தனது படங்கள் மூலம் நிறைய இளைஞர்களை (இளம் ஹீரோக்கள், டெக்னீஷியன்களை சரிவர பயன்படுத்தாமல்) வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அதுபோல் மல்லுவுட் நடிகர், இயக்குனர் சீனிவாசன் தனது படங்கள் மூலம் சமுதாயத்துக்கு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ததில்லை'  என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

K.Balachandar ரின் உடல் நிலை மிகவும் ஆபத்தான நிலையில்?

கமல் சீக்கிரம் உத்தமவில்லன் படத்தை போட்டுக்காட்டு பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று இரட்டை அர்த்தங்கள் எதுவுமில்லாமல் ஒரே அர்த்தத்தில் சொன்னார் திரு கே.பி. அவர் உத்தமவில்லன் படத்தை பார்க்கத் துடித்த வேகத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உத்தம வில்லனின் முக்கிய இறுதிகட்ட வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது கே.பி க்ரிட்டிகல் என்ற செய்தி வந்தடைந்தது. அவர் உதவியாளர் மோகனிடம் விசாரிக்கத்தான் கூப்பிட்டேன்ஆமா சார் க்ரிடிகல்னு தான் சொல்றாங்க. நினைவு இருக்கு. ஆனா மூணு நாளா யார்கிட்டயும் பேசல. நீங்க வேணும்னா பேசிபாக்குறீங்களா’ என்று முன்னெச்சரிக்கை எதுவுமின்றி கைபேசியை கே.பி-யிடமே கொடுத்துவிட்டார் திரு.மோகன். ’ஹலோ கமல்’ என்று குரல் மெல்லிதாக வந்தது. கிட்டத்தட்ட 43 வருடங்களாக கேட்டுப் பழகிய குரல். எத்தனை பழுதுபட்டாலும் அடையாளம் தெரிந்தது எனக்கு. 

வெற்றி பெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் விபரம்

திமுக நிர்வாகிகள் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.  அண்ணா அறிவாலயம் ராயபுரம் அறிவகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.   மாவட்ட அவைத்தலைவர், செயலாளர் , 3 துணை செயலாளர்கள்( 1 பொது தொகுதி, 1 ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பு, 1 மகளிர்) பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள்.முதற்கட்டமாக இன்று காலை 10 மணிக்கு தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய மாவட்டங்களுக்கு  அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் நடைபெற்றது.   தொடர்ந்து மாலை 3 மணிக்கு  நாகை வடக்கு, நாகை தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கன்னியாகுமரி மேற்கு, திருச்சி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்தும், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, மதுரை தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு ராயபுரம் அறிவகத்திலும் தேர்தல் நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் துரை சந்திரசேகர் 34 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.  இவர், டி.ஆர்.பாலு ஆதரவாளர்.   இவரை எதிர்த்து போட்டியிட்டு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தம்பி ராஜ்குமார் 32வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.  

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ரூ.50,000 கோடி சொத்து?: லோக் ஆயுக்தாவுக்கு வந்த புகாரால் பரபரப்பு!!

பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ரூ50 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக லோக் ஆயுக்தாவில் சமாஜ் பரிவர்தன் சமிதி என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் ரத்னகுமார் கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லோக் ஆயுக்தாவுக்கு ரத்னகுமார் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது: 1980 ஆம் ஆண்டு கர்நாடகா வருவாய்த் துறை அமைச்சராக பதவி ஏற்றது முதல் தமது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ரூ50 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளார் மல்லிகார்ஜூன கார்கே. எஸ்.சி. பிரிவில் பின்னடைவு காலியிடங்களை நிரப்புவதற்காக 1427 அஸிஸ்டென்ட் என்ஜினியர்கள், ஜூனியர் என்ஜினியர்களை முறைகேடாக நியமித்தார் மல்லிகார்ஜூன கார்கே. அவருக்கு பன்னார்கட்டாவில் ரூ500 கோடி காம்ப்ளக்ஸ், சிக்மகளூரில் ரூ300 ஏக்கர் பரப்பளவிலான ரூ1000 கோடி மதிப்பிலான காபி தோட்டம், கெங்கேரியில் 40 ஏக்கர் பரப்பளவிலான ரூ50 கோடி மதிப்பிலான வீடு, பெங்களூரில் எம்.எஸ். ராமையா கல்லூரி அருகே ரூ25 கோடி மதிப்பிலான கட்டிடம், ஆர்.டி. நகர் வீடு, பெல்லாரி சாலையில் 17 ஏக்கர் நிலம், இந்திரா நகரில் மூன்று மாடி கட்டிடம், சதாசிவ நகரில் 2 வீடுகள் உள்ளன.

ஜெயந்தி நடராஜன் பாஜகவில் சேருகிறார்? மறைந்த முதல்வர் பக்தவத்சலத்தின் பணக்கார பேத்தி இவர்!

Jeyanthi Natarajan running to BJP ?காங்கிரஸ் கட்சியில் 'தலைகாட்டாமல்' ஒதுங்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சென்னையில் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணையக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மன்மோகன் சிங் அரசில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பின. இதனால் அமைச்சர் பதவியில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் தலைகாட்டுவதே இல்லை. லோக்சபா தேர்தலிலும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கிய போதும் கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனிடையே பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்காக டெல்லியில் முகாமிட்டும் இருந்தார். ஆனால் பாஜகவிலும் ஜெயந்தி நடராஜனை சேர்க்க எதிர்ப்பு இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நாளை பாஜக தலைவர் அமித்ஷா வரும்போது அவரது முன்னிலையில் அக்கட்சியில் ஜெயந்தி நடராஜன் இணையத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமித்ஷா முன்னிலையில் இசை அமைப்பாளர் கங்கை அமரனும் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது  ரொம்ப நல்ல மூவ்! குப்பைகள் இருக்கவேண்டிய குடோன் அதுதாய்ன் tamil.oneindia.com/

ராமதாஸ்:சட்டம் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் சலுகைகளை அள்ளி வீசுகிறது?

பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அவர் கோரியவாரே விரைந்து முடிக்க வாய்ப்பளிக்கப்படுவது "சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானா?" என்ற கேள்வியை எழுப்புவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருவாய்க்கு மீறி ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிணையை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்துள்ள உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்; இதற்காக சிறப்பு அமர்வு ஒன்றை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்திற்கு ஆணையிட்டிருக்கிறது.  அய்யா அவா அவாதாய்ன்

கொள்ளையர்கள் கூடாரமாக மாறிவிட்ட அரவிந்தர் ஆசிரமம் இழுத்து மூடப்படவேண்டும்?

தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்ட சகோதரிகளின் தந்தை பிரசாத், ஜெய ஸ்ரீ (இடது படம்), ஹேமலதா மற்றும் நிவேதிதா.
தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்ட சகோதரிகளின் தந்தை பிரசாத், ஜெய ஸ்ரீ (இடது படம்), ஹேமலதா மற்றும் நிவேதிதா.
புதுச்சேரியில் தற்கொலைக்கு முயன்ற சகோதரிகள் 5 பேரும் அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்துடன் கடந்த 12 ஆண்டு காலமாக நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிஹார் மாநிலம் பொகாரா (தற்போது ஜார்கண்ட்டில் உள்ளது) பகுதியைச் சேர்ந்த பிரசாத்- சாந்தி தேவி தம்பதி கடந்த 1970-ம் ஆண்டு தொடக்கத்தில் புதுச்சேரி வந்துள்ளனர். அரவிந்தர், ஸ்ரீ அன்னை பக்தரான பிரசாத், தனது மகள்களான ஹேமலதா, ஜெயஸ்ரீ, அருணஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நிவேதிதா ஆகியோரை ஆசிரமப் பள்ளியில் படிக்க வைத்துள்ளார். பிறகு, சகோதரிகள் 5 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆசிரம உறுப்பினராக மாறி, அங்கேயே தங்கி சேவை செய்ய தொடங்கினர். குருசுகுப்பத்தில் உள்ள ஆசிரம விடுதியில் அவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.

ரஜினியின் லிங்கா தோல்வி ? 30 கோடி நஷ்டம்! விநியோகஸ்தர்கள் போர்க்கொடி! ஊரை ஏமாத்த பில்டப்?

சென்னை: லிங்கா படத்தால் தங்களுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இந்த இழப்பை நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக யூடியூப்பில் ஒரு வீடியோ உலா வந்தது. ஆனால் அந்த வீடியோவை இப்போது காணவில்லை. தூக்கி விட்டனர். எதற்காகன தூக்கினர் என்று தெரியவில்லை. இருப்பினும் அந்த வீடியோவில் நாம் கண்டது, கேட்டது இதுதான்.. அது: முதல் விநியோகஸ்தர் : நான் திருச்சி தஞ்சாவூர் ஏரியா விநியோக உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்து வாங்கினேன். லிங்கா பட இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய இயக்குநர்கள், ரஜினி சார் உள்ளிட்டோர் இந்தப் படம் படையப்பா படத்தை விட நன்றாக போகும், 10 மடங்கு படையப்பாவை விட சிறப்பாக இருக்கும் என்றனர். பெரும் வசூலை கொடுக்கும் என்றனர். மேலும் அவர்களே வாலன்டியராக சிலரை விட்டு கேஸ் போடச் சொல்லி பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்கள்.

திருமாவளவன் : கத்தோலிக்க திருச்சபையில் ஜாதிக்கொடுமை!


சென்னை,டிச.18 (டி.என்.எஸ்) இந்து மதத்தில் ஜாதிக்கொடுமை இருப்பது போல கத்தோலிக்க திருச்சபையிலும் ஜாதிக்கொடுமை இருக்கிறது, என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து தொல்.திருமாவளவன் மற்றும் தலித் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், மேத்யூ ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கத்தோலிக்க திருச்சபையில் தலித் தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது. தமிழகத்தில் 36 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உள்ளனர். இதில் 22 லட்சம் பேர் தலித் கிறிஸ்தவர்கள். கத்தோலிக்க மறை மாவட்ட நிர்வாகம், திருச்சபை நிர்வாகம், தலித் இல்லாதவர் கையில் உள்ளது.அதனால் தேவாலயங்களில் தலித்துகளுக்கு வழிபாடு மறுக்கப்படுகிறது. தலித் குடியிருப்பு வழியாக தேர் இழுத்து செல்லவும் மறுக்கிறார்கள். தலித்துகளுக்கு தனி சுடுகாடு உள்ளது.சிவகங்கை மறை மாவட்டத்தை சேர்ந்த மைக்கேல் ராஜாவுக்கு 13 ஆண்டு காலமாக போதகர் பட்டம் வழங்க படாமல் இழுத்தடிக்கப்படுகிறார்கள். கத்தோலிக்க திருச்சபையில் தீ வைக்கப்படுகிற தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு மாநாடு மார்ச் மாதம் சிவகங்கையில் நடக்கிறது. இதில் மைக்கேல் ராஜாவுக்கு போதகர் பட்டம் வழங்க வலியுறுத்துவோம்.

படிக்காத தற்குறிகள் நேர்மையற்றவர்களாக மாறியது ஏன் ?

அம்பேத்கர்சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததும் என்ன நடந்தது என நாடே பார்த்தது. ஒரு கிரிமினலைத் தண்டித்தால், தண்டிக்கப்பட்ட கிரிமினலுக்காக தமிழ்ச் ‘சமூகமே’ அழுதது ஏன்?
இந்திய சமூகத்தில் சிவில் உரிமைகள்
“நாம் அரசியலில் ஜனநாயகமும், சமூகத்தில் ஜனநாயக மறுப்பும் கொண்டிருக்கிறோம்”
இந்தியாவில் சிவில் உரிமை பற்றிய கோரிக்கை அவசர நிலைக்குப் பிறகு எழுந்தது; அரசு மனித உரிமைகளை மீறும் போது அதைக் காப்பதற்காகத் தோன்றியது.
அம்பேத்கர் “நாம் அரசியலில் ஜனநாயகமும், சமூகத்தில் ஜனநாயக மறுப்பும் கொண்டிருக்கிறோம்” என்று நமது இந்திய சமூதாயத்தின் முரண்பட்ட நிலையைச் சொன்னார். நமது ஜனநாயகம் வெள்ளைக்காரன் கொடுத்த ஜனநாயகம்; சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக நமது மக்கள் போராடியதால் நம்முடைய ஜனநாயகம் வரவில்லை; ஆங்கிலேய ஆட்சியாளர்கள் காங்கிரசுகாரர்கள் முதல் ஜஸ்டிஸ் கட்சியினர் வரை பதவிகளை உருவாக்கிக் கொடுத்து உருவானது.
நமது சமூகம் சாதி ஆதிக்கமும், நிலவுடமை ஆதிக்கமும் கொண்டது. சாதி அமைப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. நமது நாட்டில் தீண்டாமைச் சட்டங்கள் இருந்தாலும், அரசு தீண்டாமையைப் பாதுகாக்கும் அரசாக இருக்கிறது. அதனால்தான் நாம் ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டியதிருக்கிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடியில் ரூ.10,000 கோடி: கொழிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகள்!


உண்மையை சொல்ல போனால்...டாக்டர் படிப்பை அனைவரையும் படிக்க வைத்து விட்டு, ஒரு நல்ல முறையில் தேசிய தேர்வு வைத்து யாரெல்லாம் விஷயம் தெரிந்தவர்களாக இருக்காங்களோ அவர்களை மட்டும் டாக்டர் என அறிவிக்க வேண்டும். இதை அனைத்து துறைகளுக்கும் அறிவிக்கலாம். இப்பொழுது எல்லாரும் டாக்டர் பொறியாளர் என படிக்கிறார்கள் உண்மையிலேயே விருப்பத்துடனும், தெளிவாக புரிந்து கொண்டும் படிப்பவர்கள் மிக சிலரே. புதுடில்லி: 'நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில், ஒவ்வொரு ஆண்டும், 10 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் புழங்குகிறது' என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில், பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கும், தங்கள் வாரிசுகளை மருத்துவர்களாக ஆக்க வேண்டும் என, ஆசைப்படும் தனிநபர்களுக்கும் பங்கிருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 27 ஆயிரம் இடங்கள் உள்ளன. அவற்றில், 30 சதவீத இடங்களை, அந்தந்த தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் நிரப்பிக் கொள்ளலாம். அந்த வகையில், 8,100 எம்.பி.பி.எஸ்., மாணவர் இடங்கள், ஆண்டுதோறும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினரால், பணம் பெற்றுக்கொண்டு நிரப்பப்படுகின்றன.

சமூக வலைதளங்களில் இ - மெயிலில் கருத்து பதிவு செய்தால் கைது இல்லை!

புதுடில்லி: 'தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 - ஏ பிரிவு, உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி, இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது.பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், தகவல் தொழில்நுட்ப ஊடகங்களான, மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயில் போன்றவற்றில், ஒருவர் தெரிவிக்கும் கருத்து, பதிவு செய்யும் விஷயங்கள், ஒரே நேரத்தில் பலரையும் சென்றடைகின்றன. அத்தகைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள், அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும், தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66ஏ -யின்படி, கருத்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர். 'இவ்வாறு கைது செய்யப்படுவது, அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது' என, சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில், மத்திய அரசு, நேற்று முன்தினம் தன் கருத்தை பதிவு செய்தது.  
கருத்து சுதந்திரத்தை பேணும் தினமலருக்கு நன்றி.....

Pakistan 48 மணி நேரத்தி்ல் தீவிரவாதிகளுக்கு தூக்கு: ராணுவ தளபதி கோரிக்கை

புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள மூவாயிரம் தீவிரவாதிகளை 48 மணி நேரத்தில் தூக்கில் போட வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் நவாஸ்ஷெரீப்புக்கு ராணுவ தளபதி ரஹீல்ஷரீப் கோரி்க்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் செயல்பட்டு வரும் ராணுவ பள்ளியில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 126க்கும்மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியாயினர் இச்சம்பவம் உலகையே உலுக்கி எடுத்தது. இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்களின் பகுதியில் ராணுவம் எடுத்த நடவடிக்கைக்கு பழிக்கு பழியாக தான் இந்த நடவடிக்கை என கூறியுள்ளது. இதற்கு பதிலடியாக பிரதமர் நவாஸ்ஷெரிப் கூறுகையில் பாகிஸ்தானில் தற்காலி்கமாக நிறுத்தி வைக்கப் பட்ட தூக்குதண்டனை சட்டம் மீண்டும் நிறைவேற்றப்படும் என கூறினார்.

வியாழன், 18 டிசம்பர், 2014

ஒரு Ex பார்ப்பனனின் பார்வையில் தமிழ்நாட்டில் பார்பன ஆதிக்கம்?

மாதிரிப் படம்வினவு தோழர்களுக்கு வணக்கம்,
ஜெயமோகனின் ஒடுக்கப்படுகிறார்களா பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) எனும் கட்டுரையை படிக்க நேர்ந்ததின் விளைவே இம்மடல். இருப்பினும் இதற்கு மூலமான பத்ரியின் கட்டுரைக்கு குருஜீயே விளக்கமளித்த பின் சிஷ்யரின் வார்த்தையை படித்து துன்புறவேண்டுமா என நினைத்து படிக்கவில்லை.
ஜெயமோகனின் அகஒளி தரிசனத்திற்க்கும் சமூக எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளி பாரியது. பல்வேறு விசயங்களில் அபத்தமாக எதையாவது உளறி கொட்டி விட்டு தனது மொழிநடையின் மூலம் அதை பூசிச்செல்வது அவரது தந்திரம். பிறகு அழுத்தி கேட்டால் நான் ஆய்வாளன் இல்லை, அது எனது பணியும் கிடையாது என ஒரே போடாக போட்டுவிடுவார்.
இந்த விசயத்தை பொறுத்தவரை பூர்வாசிரமத்தில் பார்ப்பனனாக இருந்த எனக்கு இதைப்பற்றி பேச அதிகம் தகுதி உள்ளதாகவே நினைக்கிறேன்.

எகிப்தில் 10 லட்சம் மம்மிக்கள்: நெக்லஸ்-வளையல் அணிந்திருந்த குழந்தை மம்மி

எகிப்தின் மத்தியில் உள்ள 'பாயும்' நகரில் 300 ஏக்கர் மயானத்தில் 10 லட்சம் மம்மிக்கள் உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் உடாஹ் நகரில் உள்ள ப்ரிகாம் யங் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு குழு பாக்-இல்-கேமஸ் என்ற மயானத்தை கடந்த 30 வருடங்களுக்கு முன் கண்டுபிடித்தது. கடந்த முப்பது வருடங்களாக அக்குழுவினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த 300 ஏக்கர் மயானத்திலிருந்து இதுவரை 1700 மம்மிக்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். 75 அடி ஆழம் வரை பூமிக்குள் பள்ளம் தோண்டி இந்த மம்மிக்கள் புதைக்கப்பட்டுள்ளன. ரோமாபுரி அரசர்களின் கட்டுப்பாட்டில் எகிப்து இருந்தபோது இவர்கள் அனைவரும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெகு சமீபத்தில் 18 மாத குழந்தை மம்மியை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். அப்பெண் குழந்தையின் இரு கைகளில் அணிந்துள்ள வளையல் மற்றும் கழுத்தில் அணிந்துள்ள நெக்லஸ் இன்றும் அப்படியே உள்ளது. இது மட்டுமல்லாமல் ஏழு அடி உயர ஆண் மம்மியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக இவ்வளவு பேர் ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்டனர்? என்பது தான் மிகப்பெரிய மர்மமாக உள்ளது.

Aurobindo Ashram, 2 Sisters & Mother end life புதுவையில் நாளை மறுநாள் பந்த்

அரவிந்தர் ஆசிரமம் ஹேமலதா : தற்கொலைக்கு முயன்றபோது 4 பேர் என்னை கற்பழித்தனர்

எங்கு செல்வதென்று தெரியாமல் அனைவரும் காலாப்பட்டு கடற்கரைக்கு சென்றோம். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் என்னை வலுக்கட்டாயமாக கற்பழித்தது.
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளும் தாய், தந்தை ஆகியோரும் காலாப்பட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு 7 பேரும் கைகோர்த்தபடி கடலுக்குள் இறங்கினார்கள்.மீனவர்கள் நீந்தி சென்று 4 பேரை மீட்டனர். 3 பேரை அலை இழுத்து சென்று விட்டது. அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுடைய உடல் கரையில் ஒதுங்கியது.கடலில் மூழ்கி இறந்தவர்கள் தாயார் சாந்திதேவி, சகோதரிகள் அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ என்று தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்து கோட்டக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மீட்கப்பட்ட தந்தை பிரசாத், நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கள் சொத்துக்களை ஆச்ரமதிடம் கொடுத்துவிட்டு ஆன்மீகத்தை தேடி தொண்டு செய்தவர்களுக்கு அரவிந்தர் ஆஸ்ரமம் செய்த கைம்மாறு கற்பழிப்பு கொலை! ஆஸ்ரமத்தின் ஏஜெண்டுகள் போல செயல்பட்ட காவல்துறை அந்த பெண்களுக்கு உரிய அடைக்கலம் ஏற்பாடு செய்து கொடுக்காமல் ஆஸ்ரமத்துக்கு நல்ல பிள்ளையாக .... ? ஏன் ? லஞ்சம் ?