வெள்ளி, 27 டிசம்பர், 2013

டி.ராஜேந்தர். கண்ணீர் : திமுகவின் லட்சியத்தை உயர்த்தி பிடிக்க திமுகவில் இணைந்தேன்

திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வெள்ளிக்கிழமை மாலை  சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடன் இருந்தார்,
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய டி.ராஜேந்திரர்,
தி.மு.க. தலைவரை பார்க்கலாம் என ஆற்காடு வீராசாமி கூப்பிட்டார். அந்த அன்பு கட்டளையை என்னால் மறுக்க முடியவில்லை. எல்லா துறையிலும் எனக்கு அவர் ஆசான். தமிழிலும், அரசியலிலும் எனக்கு அவர் குரு. அன்பு கட்டளையை என்னால் மீறமுடியவில்லை.
கட்சியில் இணைந்ததில் மிகவும் சந்தோஷம் என்றார். தலைவர் சொன்னாரு 'லட்சிய திமுகவாக இருக்கிற நீ, திமுகவின் லட்சியத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்' என்றார். அதனால் திமுகவில் இணைந்தேன் என்றார்.
 சினிமா கூத்தாடிக்கு தேவை பணம் புகழ் ! எதையாவது உயர்த்தி பிடித்தால்தானே பருப்பு வேகும் , நேற்றுவரை கருணாநிதி கருணாநிதி என்று ஏகவசனத்தில் வசைபாடிய இந்த கூத்தாடி இனி ஒரே கலைஞர் பஜனை செய்வார் ,இதைதான் அரசியல் ஒரு விபசாரம் என்று சொல்வது 

மோடி சொல்கிறார் வாய்மையே வெல்லும் ! குஜராத்தில் வாய்மை வென்றதா ? NO


அகமதாபாத்: ‘வாய்மையே வெல்லும்' என குஜராத் கலவர வழக்கில் தன்னை குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார் மோடி. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். குஜராத் கலவர வழக்கு: ‘வாய்மையே வெல்லும்’ தீர்ப்புக்குப் பின் டுவிட்டரில் கருத்துச் சொன்ன மோடி முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடந்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 59 பேருக்கும் தொடர்பில்லை என தெரிவித்தது. இதனால் வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார்.

மோடி தப்பி விட்டார் ! நீதி செத்துவிட்டது ?மோடியை விடுவித்த தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் வி்ட்டு அழுத ஜாகியா


அகமதாபாத்: குல்பர்க் சொசைட்டி மத வெறியாட்ட வழக்கிலிருந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விடுவித்து அகமதாபாத் பெருநகர கோர்ட் பிறப்பித்த தீர்ப்பைக் கேட்டதும், இந்த வழக்கில் நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் 74 வயதான ஜாகியா ஜாப்ரி கண்ணீர் விட்டு அழுதார். இவர் குல்பர்க் சொசைட்டி கலவரத்தின்போது உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட முன்னாள் எம்பி ஈசான் ஜாப்ரியின் மனைவி ஆவார். குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புபுலனாய்வுக் குழு கூறியதை எதிர்த்து அப்பீல் செய்து போராடி வந்தவர் ஜாகியா. மோடியை விடுவித்த தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் வி்ட்டு அழுத ஜாகியா குல்பர்க் கலவரத்தில் ஜாகியாவின் கணவர் உள்பட மொத்தம் 68 பேர் இந்து மத வெறியர்களால் உயிரோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். நேற்று தனது அப்பீல் மனுவை அகமதாபாத் கோர்ட் நிராகரித்து உத்தரவிட்டதைக்கேட்டு கதறி அழுது விட்டார்ஜாகியா. அதேசமயம், இந்தத் தீர்ப்புகுறித்து நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் சத்யமேவ ஜெயதே அதாவது வாய்மையே வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நீதி கிடைக்கும் வரை போராடப் போவதாக ஜாகியா தெரிவித்துள்ளார். கண்ணீருடன் காணப்பட்ட அவர் கூறுகையில், நாங்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்றார். ஜாகியாவின் மகன் தன்வீர் ஜாப்ரி கூறுகையில், இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றம் தருகிறது. எங்கள் முன்பு நீண்டதொரு சட்டப் போராட்டம் காத்திருக்கிறது என்று உணர்கிறோம் என்றார்.
tamil.oneindia.in

தமிழ் சினிமா 2013 : பெரிய நட்சத்திரங்களால் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை


தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் சிலரும், குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம் கவனம் பெற்று தமிழ் சினிமாவில் கால் பதித்தவர்களும் ரசிகர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் இந்த வருடம் மிகப் பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கினார்கள். நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என்று பலரின் பங்குள்ள சினிமாவில், வெற்றிக்குப் பல பங்காளிகள் சேர்ந்துகொண்டாலும் தோல்வியின் முழுப் பொறுப்பும் பல சமயம் இயக்குநர் மீதே விழுகிறது. பெரிய நட்சத்திரங்களால் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்துவிட முடியும் என்றால் தமிழில் ஆண்டுக்கு 15 படங்களாவது பெரும் வெற்றி அடைய வேண்டும். ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது. காரணம், பெரிய நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் வைத்து ஒரு படைப்பை உருவாக்க வேண்டிய இயக்குநரின் பங்களிப்பே வெற்றி, தோல்வியைப் பெரிதும் தீர்மானிக்கிறது. இந்த ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றிய சில இயக்குநர்களின் தோல்விகளை அலசுவோம்.

முசபர் நகர் நிவாரண முகாம்களில் 34 குழந்தைகள் மரணம்'


முசாபர் நகர் நிவாரண முகாம்களில் குழந்தைகள் பலி
செப்டம்பர் மாதம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த, இந்து- முஸ்லிம் கலவரங்களை அடுத்து, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களுக்காக அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் 34 குழந்தைகளாவது இறந்திருப்பார்கள் என்று அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் இறந்த குழந்தைகளில் பெரும்பாலோனோர் குளிரால் இறந்தார்கள் என்று ஊடகங்கள் கூறுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
குழந்தைகள் நிமோனியாக் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் இறந்தனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
செப்டம்பர் மாதம் நடந்த கலவரத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர்.

நித்தியானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா காவி அணிந்தார் ! இனி இருவரும் சேர்ந்து கடவுளை தேட தடை இல்லை ! New Name மா ஆனந்தமாயி

நித்யானந்தாவுக்கு இன்று 37வது பிறந்தநாள்.  பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது பிறந்த நாள். நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த நடிகை ரஞ்சிதா,  இன்று காவி உடை அணிந்து சன்னியாசி ஆனார்.  நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்றார். ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். அப்போது ரஞ்சிதாவுக்கு ‘மா ஆனந்தமாயி’ என்று பெயர் சூட்டப்பட்டது.தீட்சை பெற்ற ரஞ்சிதா,  ‘’சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டு ள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்துவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன்.  இந்த ஜென்மத்திலும் அடுத்த ஜென்மத்திலும் அவருக்கு எதிராக செயல்படமாட்டேன்’’என்று கூறியுள்ளார் நித்தியிடம் நடிகை ரஞ்சிதா காவி உடை வாங்கி அணிந்தார் இனி இருவரும் சேர்ந்து கடவுளையும் காசையும் தேட தடை இல்லை ரஞ்சிதா இனி அவர் 

காரைக்காலில் 8 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்...அடுத்தடுத்து அக்கிரமம்


காரைக்கால்: 10 பேர் கொண்ட இரண்டு கும்பல்களால் அடுத்தடுத்து ஒரு 20 வயது இளம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியை பலாத்காரம் செய்யப்பட்ட செயல் காரைக்காலை அதிரவைத்துள்ளது. முதலில் 3 பேர் கொண்ட கும்பலால் அவர் கடத்தப்பட்டார். அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் அப்பெண்ணை பலாத்காரம் செய்தான். பின்னர் அக்கும்பல் பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டது. இந்த நிலையில் 7 பேர் கொண்ட இன்னொரு கும்பல்வந்து அப்பெண்ணைக் கடத்திக் கொண்டு போனது. அந்த 7 பேரும் சேர்ந்து அப்பெண்ணை மறைவிடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுஞ்செயல் குறித்துப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விரைந்து வந்து பெண்ணை மீட்டனர். தற்போது பத்து அயோக்கியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டபெண் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தோழி ஒருவரும் டிசம்பர் 24ம் தேதி இரவு காரைக்காலுக்கு வந்துள்ளனர். தோழி தனது காதலரைப் பார்க்க வந்துள்ளார். அவருக்குத் துணையாக பாதிக்கப்பட்ட பெண் வந்துள்ளார். தோழியின் காதலனுக்கு 17 வயதுதான். இந்தப் பையன், தனது காதலி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சைட் சீயிங் போயுள்ளான். போன இடத்தில் தோழிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாம். இதையடுத்து அவரும் அவரது காதலனும் அருகில் உள்ள ஒரு நண்பரின் வீ்ட்டுக்குப் போய் வருவதாக கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதைப் பார்த்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திக் கொண்டு போனது. பின்னர் அதில் ஒருவன் மட்டும் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அப்பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டனர். அதிர்ச்சியில் உறைந்தஅப்பெண், தனது தோழியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் அவரைக் கண்டுபிடித்தார். பின்னர் 3 பேரும் பாதுகாப்பான இடத்துக்குப் போயுள்ளனர். அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல்வந்துள்ளது அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அவரது தோழி மற்றும் காதலனை மட்டும் அடித்துப் போட்டு விட்டு விட்டனராம். பின்னர் கடத்தப்பட்ட பெண்ணை 7பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். அடித்து விரட்டப்பட்ட தோழியும் அவரது காதலனும் உள்ளூர் நண்பர்களின் உதவியை நாடியுள்ளனர். அனைவரும் சேர்ந்து அக்கும்பலைத் தேடிக் கண்டுபிடித்துள்ள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்குள் பெரும் மோதல் வெடித்தது. இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீஸுக்குத்தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த பலாத்காரக் கும்பல் தப்பி ஓடியது. அவர்களில் 3 பேர் சிக்கினர். பின்னர் அவர்கள் மூலம் கிடைத்ததகவலை வைத்து மீதமிருந்த 7 பேரையும் போலீஸார் பிடித்தனர். இன்னும் சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடும் செயலில் மொத்தம் 13 பேருக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.அதில் 3 பேர் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களாம்.
tamil.oneindia.in

ஆம் ஆத்மி மீண்டும் தேர்தலை சந்திக்க தீர்மானம்?!அதுவரை காங்கிரஸ் மீது சவாரி !நன்கொடை விவகாரம்: எந்த விசாரணைக்கும் தயார்

டெல்லியில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் பாஜ 31
இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றியது. 31 இடங்களை பிடித்த பாஜ ஆட்சி அமைக்க மறுத்தது. இதனையடுத்து, 2வது இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப் அழைப்பு விடுத்தார். அக்கட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தர சம்மதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்கிறார். வரும் 28ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், ‘நாங்கள் பொறுப்பேற்றதும் காங்கிரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்துவோம்’ என்று கூறியிருந்தார். இது, காங்கிரசாரிடம்  அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு தருவோம் என்று காங்கிரஸ் இதன்பின்பும், கெஜ்ரிவால் நேற்று ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், காங்கிரசை ஊழல் கட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு


ஒரு வரலாற்றுத் தவறு, அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகப் போரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணித் திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது.
ஓரினச் சேர்க்கையாளர் என தண்டிக்கப்பட்ட டியூரிங்கிற்கு பிரிட்டன் மகாராணியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆலன் டியூரிங் (Alan Turing) கணினி யுகத்தின் முன்னோடி. கணிதப்புலி. அந்த காலத்து தாக்காளர் (ஹேக்கர்). அப்போதே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைப்பது பற்றி யோசித்தவர்.
ஆரம்ப கால கப்யூட்டர்களுக்கான நிரல்களை உருவாக்கியவர். இன்று கம்ப்யூட்டர், சூப்பர் கம்ப்யூட்டர் என்று எல்லாம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவருக்கு உலகம் நன்றி கடன் பட்டிருக்கிறது.

அரசு மருத்துவமனைகள் இனி: தனியார் துப்புரவு பராமரிப்பில்

சென்னை: அரசு மருத்துக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, 31 மருத்துவமனைகளிலும், துப்புரவு, பாதுகாப்பு பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறை, அடுத்த சில நாட்களில் அமலுக்கு வருகிறது. தூய்மையற்ற நிலை:>தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், துப்புரவு பணி சரியாக இல்லை; சுகாதாரக் குறைவும், தூய்மையற்ற நிலையும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு தீர்வு காண, மருத்துவமனைகளில் துப்புரவு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க, அரசு முடிவு செய்தது. இதற்காக, 'பத்மாவதி' என்ற நிறுவனத்துடன், அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளின் கீழ் செயல்படும், சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட, 31 அரசு மருத்துவமனைகளில், டிச., 20 முதல், இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது 48 மருத்துவமனைகளில்:
இதன்படி, 4,572 துப்புரவு ஊழியர், 1,322 பாதுகாவலர் (செக்யூரிட்டி), 345 மேற்பார்வை யாளர்கள், இந்த நிறுவனம் மூலம் பணிக்கு வந்துள்ளனர். அடுத்ததாக, மாவட்ட மருத்துவமனைகள், முக்கிய தாலுகா மருத்துவமனைகள் என, 48 மருத்துவமனைகளில், தனியார் நிறுவன பராமரிப்பு, அமலுக்கு வர உள்ளது.

கார்விற்பனை கடும் சரிவு ! இரு சக்கர வாகனங்கள் துறையில் பாதிப்பில்லை


மும்பை
விற்பனை சரிவடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோட்டார் வாகன துறையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலையுடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு காரணமாக இத்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கார் நிறுவனங்கள்
தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள், குறிப்பாக கார் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உற்பத்தி குறைப்பு, கிராமப்புறங்களில் விற்பனையை அதிகரிக்க முயற்சி போன்றவை இதில் அடங்கும். ஊரக பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் விற்பனை 2012–ஆம் ஆண்டைக் காட்டிலும் விற்பனை 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. அளவின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் கிராமங்களின் பங்கு ஏறக்குறைய 33 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் ஒரு லட்சம் கிராமங்களில் களம் இறங்குவது தற்போது இந்நிறுவனத்தின் திட்டமாக உள்ளது. கார்விற்பனை கடும் சரிவு 

சுங்கத்துறை நிபந்தனையால் சீரழியும் பொருளாதாரம்! Export கன்டெய்னர்'களில் அழுகும் வேளாண் விளைபொருட்கள்

சென்னை: சுங்கத்துறை குளறுபடியால், சென்னையில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய, ஏராளமான வேளாண் விளை பொருட்கள் முடங்கியுள்ளன. இவை, அழுகும் அபாயம் உள்ளதால், சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வேளாண் விளைபொருட்கள், சென்னையை சுற்றியுள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஏற்றுமதி கிடங்குகளுக்கு வந்து சேரும். சுங்கத் துறை மதிப்பீட்டு அதிகாரி மற்றும் பரிசோதனை அதிகாரி ஆய்வு செய்து, கன்டெய்னர்களுக்கு, 'சீல்' வைப்பர். அங்கிருந்து, மாதவரத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். முத்திரை சரிபார்க்கப்பட்ட பின், ஏற்றுமதிக்காக, சென்னை துறைமுகத்திற்கு அனுப்பப்படும்.இந்த நடைமுறையில், சுங்கத்துறை சில நாட்களுக்கு முன் திடீர் மாற்றம் செய்துள்ளது. இதன்படி, 'தனியார் கிடங்குகளில் சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்து, 'சீல்' வைத்தாலும், மத்திய சேமிப்புக் கிடங்கிற்கு வந்ததும், கன்டெய்னர், 'சீலை' அகற்றி, மீண்டும் பொருட்களை கணக்கிட வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. இந்திய நண்டு என்று சொல்வது இதுதான். ஒரு நண்டு கூட வெளியே வந்து விடாமல் மற்ற நண்டுகள் கவனமாக பார்த்துக்கொள்ளும்...

குஜராத்தில் இளம்பெண் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்! விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசு முடிவு!

கடந்த 2009ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்த பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதலமைச்சர் நரேந்திரமோடியின் பரிந்துரையின் பேரில் தான், அமித் ஷா உத்தரவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் வலதுகரமாக இருந்து வருபவர் அமித்ஷா, தற்போது உ .பி. மாநில பா.ஜ.,வின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவரது அழுத்தத்தின் பேரில் பெண் ஒருவரை மாநில போலீசார் உளவு பார்த்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்ணின் தொலைபேசி ஓட்டு கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக மாநில அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டு, அவ்வாறு நடக்கவில்லை என பிரச்சனை முடிக்கப்பட்டது.

வியாழன், 26 டிசம்பர், 2013

பார்வதி ஓமனகுட்டன்: எதிர்பார்த்தளவுக்கு எனக்கு தென்னிந்திய படங்களில் வாய்ப்பு வரவில்லை

மும்பை:தமிழ் ரீமேக் ‘பீட்சாவாவது கைகொடுக்குமா என்ற கவலையில் இருக்கிறார் பார்வதி ஓமனகுட்டன்.அஜீத்துடன் ‘பில்லா 2‘ படத்தில் நடித்தவர் பார்வதி ஓமனகுட்டன். 2008ம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் 2வது இடம் பிடித்தவர். உயரம், அழகு எல்லாம் இருந்தாலும் பட வாய்ப்புகள் குவியாததால் கவலையில் இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த ‘பீட்சா‘ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. ‘ஷைத்தான்‘, விக்ரம் நடித்த டேவிட் படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்குகிறார். விஜய் சேதுபதி வேடத்தில் அக்ஷய் ஒபராய், ரம்யா நம்பீசன் வேடத்தில் பார்வதி நடிக்கின்றனர். இயக்குனர் கூறும்போது,‘படம்பற்றி எதையும் இப்போது வெளிப்படுத்த முடியாது. பார்வதி, அக்ஷய் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தமிழில் இப்படம் எப்படி உருவானதோ அதிலிருந்து கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தேதி பற்றி முடிவு செய்யவில்லை‘ என்றார்.

மும்பை பெண்ணை தாக்கிய பஹ்ரெயின் துணை தூதர்! ராஜதந்திர பாதுகாப்பு காரணமாக கைது இல்லை!!


இந்தியாவுக்கான பஹ்ரெயின் துணை தூதர் மீது பெண் ஒருவரை தாக்கியதாக கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. பஹ்ரெயின் துணை தூதருக்கு வெளிநாட்டு ராஜதந்திரி என்ற பாதுகாப்பு (diplomatic immunity) உள்ளதால், மும்பை போலீஸ் இன்னமும் அவரை கைது செய்யவில்லை.
மும்பையில் உள்ள பஹ்ரெயின் தூதரகத்தில் துணை தூதராக பணிபுரியும் அப்துல் அசீஸ் அல்-காஜா, மல்பார்ஹில் (மும்பை) பகுதியில் உள்ள சில்வர் ஆர்ச் ஹவுஸிங் சொசைட்டி அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறார். அந்த பில்டிங்கில் புதிதாக அமைக்கப்பட்ட லிஃப்ட் சரியாக இயங்காத காரணத்தால், லிஃப்டின் கதவுகளை உதைத்துக் கொண்டிருந்தார் துணைத் தூதர் காஜா.

கெஜ்ரிவால் கட்சிக்கு வெளிநாட்டு நிதி?

வரும் சனிக்கிழமை (28 ஆம் தேதி) தில்லி முதல்வராக  ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது கட்சிக்கு வெளிநாட்டில்  வந்த நிதி தொடர்பாக புகார் எழுந்தது. இதற்கு பதிளத்த கெஜ்ரிவால் நிதி பெற்றது தொடர்பாக எங்களிடம் முறையான ஆவணங்கள் இருக்கிறது என்று கூறியிருந்தார். இதனிடையே புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்றவுடன் அவர்  விசாரணையை சந்திக்வுள்ளார்.

போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்: சீனாவில் இருந்து சிலை வருகிறது

போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்: சீனாவில் இருந்து சிலை வருகிறதுதமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர், சுமார் 1500 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பணயம் செய்து இறுதியாக சீனா சென்றார். அங்கு அவர் சீன பாரம்பரிய வரலாற்றில் புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட சான் புத்த மதத்தின் முதல் தலைவராகவும், மகாயண புத்த மதத்தின் 28வது தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். கி.பி 6-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்த சீனத் துறவியும், சுற்றுப்பயணியுமான யீ ஜங் எழுதியுள்ள குறிப்புகளில் "தாமு" தென்னிந்திய நகரமான காங்-சியிருந்து சீனாவுக்கு வந்தபோது அவர் போதி தர்மர் என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் அங்கு மகாயண புத்த மதத்தை பரப்பியதாகவும் கூறியுள்ளார்.

மோடிக்கு எதிரான ஜாகியா ஜாப்ரி மனு தள்ளுபடி! குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கு


குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கு: மோடிக்கு எதிரான ஜாகியா ஜாப்ரி மனு தள்ளுபடி! அகமதாபாத்: குஜராத் குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கை அகமதாபாத் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

குஜராத்தில்தான் அதிக அளவில் சமுக ஆர்வலர்கள் கொல்லப்படுகிறார்கள் ! மோடியின் பயங்கரவாத ஆட்சி!

அமித் ஜெத்வா
கடந்த ஐந்தாண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தாக்கப்படுவதிலும் கொல்லப்படுவதிலும் நாட்டிலேயே முன்னணியில் திகழும் மாநிலமாக பயங்கரவாத மோடி ஆளும் குஜராத் முன்னேறியிருக்கிறது. குஜராத்தின் கிர் காடுகளில் நடக்கும் சட்டவிரோத சுரங்கக் கொள்ளையை அம்பலப்படுத்திய தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) ஆர்வலரான அமித் ஜெத்வா, கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமித் ஜெத்வா
இக்கொலையின் பின்னணியில், ஜுனாகத் தொகுதியின் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான தினு சோலங்கிக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவரை மோடி அரசு பாதுகாப்பதாகவும் அமித் ஜெத்வாவின் தந்தை பிகாபா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், போலீசின் போலி விசாரணையில், சோலங்கிக்கு இதில் எவ்விதத் தொடர்புமில்லை என்ற நற்சான்றிதழ் வழங்கப்பட்டதால், இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென, குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிகாபா வழக்கு தொடர்ந்தார்.
இறுதியில், இப்படுகொலையில் சோலங்கிக்கு இருந்த நெருங்கிய உறவு அம்பலமானதால், சி.பி.ஐ, அவரைக் கடந்த மாதம் கைது செய்துள்ளது. குஜராத்தில் தான் அதிக அளவில் சமுக ஆர்வலர்கள் கொல்லப்படுகிறார்கள்

இதயமாற்று சிகிச்சைக்குப்பின் 31 ஆண்டுகளாக வாழும் மனிதர்


லண்டன் மிடில்செக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் மெக்காபர்டி. இவருக்கு இதயகோளாறு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக கடந்த 1982–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20–ந்தேதி அங்குள்ள ஹேர் பீல்டு ஆஸ்பத்திரியில் அவருக்கு இதய மாற்று ஆபரேசன் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு 51 வயது.
அதன்பிறகு அவர் தவறாமல் உரிய மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டு வந்தார். இதனால் அவர் தற்போது 71 வயதில் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். இதன்மூலம் இதய மாற்று ஆபரேசன் செய்து கொண்ட பிறகு உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்து வரும் மனிதராக கின்னஸ் சாதனைக்கு ஜான் மெக்காபர்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மனைவி,மகன் உதவியுடன் 14 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து மாணவி பலாத்காரம் :வக்கீல் கைது

Ujjain:  A 17-year-old schoolgirl who was held captive and allegedly raped repeatedly for two weeks in a house just 50 feet away from her own home in Ujjain, Madhya Pradesh, was rescued on Wednesday morning.
The girl, a class 9 student, had gone to lawyer Balkrishna Joshi on December 12, for help to get a caste certificate. The man, in his late 40s, allegedly held her captive and repeatedly raped her for 14 days. He has been arrested.
The girl has alleged that her captor's wife and son helped him
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியை சேர்ந்த 17 வயதாகும்  ஒன்பதாம் வகுப்பு மாணவியை, மனைவி- மகன் உதவியுடன் 14 நாட்கள் வீட்டிற்குள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் அழுகை குரலை கேட்டு,  அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் மாணவி மீட்கப்பட்டார். 40 வயது மதிக்கதக்க  வக்கீல் பால கிருஷ்ணா ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார். வக்கீலின் வீடு, மாணவி குடியிருக்கும் அதே பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

நய்யாண்டி பிரச்ச்னை நல்லதே செய்திருக்கிறது

நய்யாண்டி பிரச்சனைக்குப் பிறகு, நஸ்ரியாவை தமிழ்த்திரையுலகமே ஒதுக்கிவிடுமோ? என்று பதட்டப்பட்டார்கள், ராஜா ராணி படத்தின் மூலம் நஸ்ரியாவின் தீவிர ரசிகர்களகளாகிவிட்டவர்கள். ஆனால் திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகத்தை விட்டு நான் செல்லவில்லை என்று நஸ்ரியா சொல்லாமல் சொன்னாலும் நய்யாண்டி பிரச்சனை நஸ்ரியாவை விட்டுவிடாமல் பின்தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ‘சம்மந்தமில்லாத கேள்விகளை கேட்காதீர்கள்’ என்று சொல்லிவிட்டு தான் நிகழ்ச்சியையே துவங்குகிறார்கள். ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில் நய்யாண்டி திரைப்படம் குறித்த கேள்விக்கு நஸ்ரியா “நய்யாண்டி திரைப்படத்தினால் உண்டான பிரச்சனையால் நான் எப்படிப்பட்ட நடிகை என்பது திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் தெரிந்துவிட்டது. இனி என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் முன்பே நான் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று முடிவெடுத்துவிடுவார்கள். இதனால் நான் கதை கேட்டு அதன்பின்பு வேண்டாம் என்று தவிர்க்க தேவையிருக்காது.  இந்த வகையில் நய்யாண்டி பிரச்ச்னை நல்லதே செய்திருக்கிறது” என்று கூறியிருப்பதாக தெரிகிறது.

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் போலீஸ் ஸ்டேஷனில் வாலிபர் அடித்து கொலை? உறவினர்கள் போராட்டம்

திருத்துறைப்பூண்டி:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீரக்களூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (55). சித்த மருத்துவர். கடந்த செப்டம்பரில் வீட்டு முன் நிறுத்தியிருந்த இவருக்கு சொந்தமான டிராக்டர் திருட்டு போனது. இதுதொடர்பாக அவர் ஆலிவலம் போலீசில் செப்டம்பர் 14ம் தேதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து டிராக்டரை திருடிய மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில். கீரக்களூர் அடுத்த நங்காளி கிராமத்தை சேர்ந்த சுந்தர் (34) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணைக்காக நேற்று மாலை ஆலிவலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டார். இன்ஸ்பெக்டர் ராஜசேகர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே சுந்தர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து  அவரை போலீசார், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்

பதவியேற்ற 24 மணி நேரத்தில் எல்லா வீட்டுக்கும் இலவச குடிநீர் ! ஆம் ஆத்மி கட்சி

புதுடெல்லி : டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கேஜ்ரிவால், நாளை மறுநாள் பதவியேற்கிறார். முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் எல்லா வீடுகளுக்கும் இலவசமாக குடிநீர் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.டெல்லி பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களை பிடித்த பாஜ, ஆட்சி அமைக்க மறுத்தது. 2ம் இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னர் நஜீபிடம் கடந்த திங்களன்று அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் கொடுத்தார். அதை ஜனாதிபதிக்கு கவர்னர் பரிந்துரைத்தார்.

ஆம் ஆத்மிக்கு கண்மூடித்தனமாக காங்கிரஸ் ஆதரவு கொடுக்காது:

தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கண்மூடித்தனமாக காங்கிரஸ் ஆதரவு கொடுக்காது என காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் கூறும் போது இருகட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை கவனிக்க ஒரு குழு ஏற்படுத்த வேண்டும். என்றும் குறிப்பிட்டுள்ளார்.