செப்டம்பர் மாதம் இந்தியாவின்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த, இந்து- முஸ்லிம் கலவரங்களை அடுத்து,
தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களுக்காக அமைக்கப்பட்ட
நிவாரண முகாம்களில் 34 குழந்தைகளாவது இறந்திருப்பார்கள் என்று அதிகாரபூர்வ
அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் இறந்த குழந்தைகளில் பெரும்பாலோனோர் குளிரால் இறந்தார்கள் என்று ஊடகங்கள் கூறுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.செப்டம்பர் மாதம் நடந்த கலவரத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த பத்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் நடந்த மிகவும் மோசமான கலவரம் இது தான் என்று கருதப்படுகின்றது. இந்தக் கலவரங்களில் சுமார் 50,000 பேர், அதில் பெரும்பாலோனோர் முஸ்லீம்கள், வீடற்றவர்களாயினர். குறைந்தது 85 பேர் காயமடைந்தனர்.
ஒரு இளம் பெண் துன்புறுத்தப்பட்டதை எதிர்த்த 3 ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவம் தூண்டிய இந்த கலவரத்தினால் ஆயிரக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்த நிவாரண முகாம்களில் 12 வயதிற்கு உட்பட்ட 34 குழந்தைகள் இறந்துள்ளதாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைப் பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தையும், நிமோனியாவால் 4 குழந்தைகளும், வயிற்றுப்போக்கால் மற்றும் சில குழந்தைகளும் இறந்துள்ளனர் என்று உத்தரப் பிரதேசத்தின் உயர் அதிகாரி ஏ.கே.குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இறந்த குழந்தைகளில் பெரும்பாலானோர், முகாமை விட்டு வெளியே சிகிச்சைக்காக அரசாங்க மருத்துமனைகளுக்கோ அல்லது சிகிச்சைக்காக பெற்றோர்களினால் வேறு இடத்திற்கோ கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.bbc.co.uk/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக