சனி, 18 பிப்ரவரி, 2012

பிரபுதேவாவின் பச்சையை அழிக்க நயன்தார கடும் முயற்சி

பிரபு தேவாவை முற்றிலுமாக பிரிந்து வந்துவிட்ட நயன்தாரா, தன்னிடமிருக்கும் அவரது நினைவுகளின் அடையாளங்களையும் அழித்துவிட விரும்புகிறாராம்.
அதன் விளைவு கையில் பச்சையாகக் குத்தியுள்ள பிரபு தேவாவின் பெயரை அழிக்க மருத்துவர்களை நாடியுள்ளார்.
வில்லு படம் முடிந்த உடனேயே இந்தப் பச்சையை குத்திக் கொண்டாராம் நயன். பிரபு தேவா மீதுள்ள காதலின் அடையாளமாக, எந்த நடிகையும் செய்யத் துணியாத இந்த செயலை நயன்தாரா செய்தார்.
ஆனால் பிரபு தேவாவோ, அடுத்த படம் எங்கேயும் காதலை இயக்கியபோது, அதன் ஹீரோயின் ஹன்ஸிகா மீது மோகமாகிவிட்டார் என்கிறார்கள்.

பிள்ளை வளர்ப்பு: ஒரு குடும்ப வன்முறை!

பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா, அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா
“பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா. அவர் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர். அவரது மனைவியும் ஒரு அரசு ஊழியர்.
இப்படிப்பட்ட பின்னணியில் இருப்பவர்கள் ஒரே செல்ல மகனை சாதாரண லெவலுக்கு வளர்க்க விரும்புவார்களா? பையனுக்கு காலையில் கராத்தே வகுப்பு, பிறகு கான்வென்ட் பள்ளிக்கூடம். மாலை ஸ்பெசல் டியூசன், பிறகு கம்யூட்டர் கிளாஸ் இப்படி 24 மணிநேரமும் பையனை கடிகார முன்னாய் நகர்த்திக் கொண்டிருப்பவர் அந்த அரசு ஊழியர். ஒரு நாள் மாலை நேரம் பையன் தெருவில் இறங்கி விளையாடப் போய்விட்டான்.
பையனைத் தேடிப்பார்த்த தந்தைக்கு தலைக்கேறியது கோபம். “வீட்லதான் விளையாட கம்யூட்டர் கேம்ஸ் வாங்கித் தந்துருக்கேன்ல. டியூசன் போய்விட்டு வந்து அதுல விளையாடறது. காச கொட்டி சேர்த்துவிட்டா கம்யூட்டர் கிளாஸ் போகாம, கண்ட கண்ட பசங்களோட சேர்ந்துகிட்டு தட்டான் புடிக்கவா போற? போடா கிளாசுக்கு” என்று அவர் கைய ஓங்கி அதட்டியதுதான் தாமதம் இறுகிய முகத்துடன் வீடு திரும்பிய பையன் ஓங்கி ஒரு அறைவிட்டான் அப்பாவை.

மார்ட்டின் கைது விமானத்தில் லாட்டரி சீட்டு கடத்தல்


Martin
கோவை: விமானத்தில் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியதாக படத்தயாரிப்பாளரும் லாட்டரி அதிபருமான மார்ட்டின் கைது செய்யப்பட்டார்.
கோவையில் கடந்த மாதம் 13ம் தேதி பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஜீவானந்தத்திற்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஒரு கண்டெனரில் கோவை விமான நிலையத்திற்கு 30 லட்சம் மதிப்பிலான தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வருவதாக தெரியவந்தது.

அழகிரி: சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்.. வெற்றி திமுகவுக்கே!


Azhagiri
சென்னை: சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் திமுக ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்போம் என்றும், திமுக வேட்பாளர் வெற்றி நிச்சயம் என்றும் மத்திய அமைச்சர் முக அழகிரி கூறினார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நேர்காணல் நடத்தினார். அன்பழகன், மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, ஆற்காடு வீராசாமி, துரை முருகன், சற்குணபாண்டியன், வி.பி. துரைசாமி, கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 பெண்கள் உள்பட 41 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

கல்லூரி மாணவி கொலை: ஒருதலைக்காதல் விபரீதம்!

சென்னையில் ஒருதலைக்காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வசித்து வந்தவர் சங்கீதா (19). இவர் காயிதே மில்லத் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் சங்கீதாவை ஒருதலையாக காதலித்து வந்தார்.
ஆனால் மணிகண்டனின் காதலை சங்கீதா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டு அருகே சங்கீதா சென்று கொண்டிருந்த போது மணிகண்டன் அவரை வழிமறித்து பேசினார். என்னை தவிர வேறு யாரும் உன்னை திருமணம் செய்தால் நான் சும்மாவிட மாட்டேன் என மிரட்டினார். ஆனால் சங்கீதா இதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் நடந்து சென்று கொண்டே இருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் கைது

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நடராஜனை அழைத்துச்சென்றது போலீஸ்."நில அபகரிப்பு தொடர்பாக  சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக சென்னையில் இருந்து தஞ்சைக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்.

தஞ்சாவூரைச்சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் காவல்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது

நீதிபதி முன் கதறியழுத சசிகலா ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது


Sasikala
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று சசிகலா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதைச் சொல்லிவிட்டு நீதிபதி முன்பு கதறி அழுதாராம் சசிகலா.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது நண்பர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்கில் இருமுறை நேரில் ஆஜராகி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வந்தார் ஜெயலலிதா. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை நிச்சயம் என்று கூறப்பட்ட நிலையில், அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆருயிர் தோழி  என்ற அந்தஸ்தில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மின்தடையால் டிவி ரேட்டிங் அதல பாதாளத்தில் சீரியல்'களிலிருந்து விடுதலை

மின் தடையால் பெரும்பாலான நேரங்களில், "டிவி' பார்க்க முடியாத காரணத்தால், "டிவி' நிகழ்ச்சிகளின் "ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்திலும் தினமும் 8 மணி நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது; கிராமப்புறங்களில் இந்த நேரம், இன்னும் அதிகமாகவுள்ளது. மின்சாரம் போகும் நேரத்தை மின் பகிர்மானக்கழகம் அறிவிப்பதை விட, மின்சாரம் இருக்கும் நேரத்தை அறிவித்தால் பரவாயில்லை, என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கல்வி, வேலை, தொழில், சிகிச்சை, அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி, வினியோகம் என எல்லாமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

கூடங்குளம் போராட்டக்காரர்களால் மத்திய அரசுக்கு ரூ.2,225 கோடி நஷ்டம்'

சென்னை: ""கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களால், இதுவரை மத்திய அரசுக்கு, 2,225 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது'' என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, விமான நிலையத்தில் அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து, ரஷ்ய விஞ்ஞானிகள் வெளியேற இருந்த சூழ்நிலையில், ரஷ்ய அரசிடமும், ரஷ்ய தூதரக அதிகாரிகளிடமும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, ரஷ்ய விஞ்ஞானிகள் நாடு திரும்புவது தவிர்க்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விஷயத்தில், தமிழக அரசு ஒரு நிபுணர்குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு, அடுத்த சில வாரங்களில் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இதைத் தொடர்ந்து, தமிழக அரசுடன் இணைந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி மிக விரைவில் துவங்கும்.

காந்தியின் எளிமை என்பது மக்களுக்கு துளியும் நன்மை பெயர்க்கவில்லை.

உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

விஞர் அ.ப.சிவா
தோழர்.வே.மதிமாறன் அவர்களின் காந்தி நண்பரா? துரோகியா? என்ற நூலின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.
  மனித குல இருப்பின் மிக முக்கியமான 3 காரணிகள்  உணவு உடை இருப்பிடம், இவற்றின் வழி இந்திய சமுகத்தின் 3 தலைவர்கள் அதிலும் நேர்கோட்டில் பயனித்த இருவரும் எதிர் திசையில் பயனித்த ஒருவருமாக மூவர் வழியே இம்முன்று காரணிகளை இவர்கள் கையாண்ட விதம் அதற்காண எதிர் வினை இவைகளை ஆராய்வோம்.
     உணவு பழக்க வழக்கம் என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றை பொறுத்தே அமையும்.
கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் உணவுகளை தம் உடல்நிலைக்கேற்ப உண்பதே எளிமை.இவ்விடயத்தில் காந்தி இங்கிலாந்து சென்றாலும் ஆட்டுப்பால் தான் குடிப்பாராம்.விமான பயணத்தில் இவருடன் ஆடும் பயணிக்கும். ‘பாய்‘ விட்டு திருமணத்திற்கு போனாலும் தயிர் சாதம் கேட்பாராம்.

தலிபானை உடனடியாகக் கொண்டு வா Karzai பாகிஸ்தானிடம் ஆவேசம்

இஸ்லாமாபாத் : ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, பாகிஸ்தான் தனது நாட்டில் பதுங்கியுள்ள தலிபானையும் கொண்டு வர வேண்டும் என, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், ஆவேசமாக பாக்., தரப்பிடம் தெரிவித்ததாகவும், அவரது ஆவேசம் கண்டு, பாக்., தரப்பு அதிர்ந்து போய் இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கனில், தலிபானுக்கு எதிரான அமெரிக்கக் கூட்டு நாடுகளின் போர், பெரிய அளவில் பலனைத் தராத நிலையில், தலிபானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தான் சிறந்தது என, ஆப்கன், அமெரிக்க நாடுகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு, பாக்., ஒத்துழைப்பும் அவசியம் என, அவை கூறி வருகின்றன. ஆப்கனின் முன்னேற்றம் குறித்து, நேற்று முன்தினம், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஆப்கன், பாக்., மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் முத்தரப்பு சந்திப்பு துவங்கியது.

அழகிரியே பெட்டர்’ என கலைஞரே நினைத்துவிட்டாராம்

நான் சொன்ன ‘ஆகாயத்தில் போட்ட அச்சாரம்’ கதையின் மிச்சத்தையும் முடித்துவிடுகிறேன். வீரபாண்டியார் - ஸ்டாலின் மோதல் சிக்கல் ஒருபக்கம் நடக்கும் நிலையில், ராசாத்தி அம்மாளும் கடும் கோபத்தில் இருக்கிறாராம். கட்சியின் மாநில மகளிர் அணிக்கு கனிமொழியைத் தலைவியாக்க சமீபத்தில் நடந்து முடிந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எந்த மாற்றுக் கருத்தும் வரவில்லையாம்.
இருந்தும் ராசாத்தி அம்மாள் ஒற்றைக் காலில் நின்று வேண்டாம் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்...’’
‘‘ஏனாம்?’’
‘‘குஷ்புவை எப்படியும் அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என ஸ்டாலின் தரப்பு கச்சை கட்டி நிற்கிறதாம். இதுதான் ராசாத்தி அம்மாளின் பயங்கர கோபத்துக்குக் காரணம். மேலும், கனிமொழியும் அழகிரியின் மகள் கயல்விழியும்கூட, ‘குஷ்புவுக்கு ஏன் தளபதி தரப்பு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?’ என சீறினார்கள ம்.

Chennai புதிதாக வளர்ந்து வரும் மெடிக்கல் டூரிஸம்

ம்மில் பலரும் உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது மட்டுமே மருத்துவமனைகளைத் தேடுகிறோம், அப்படித் தேடும்போது சில நேரங்களில் நேரப்பற்றாக்குறை, எமர்ஜெ ன்சி போன்ற காரணங்களால் ஒரே வளாகத்தில் அனைத்துவிதமான உடல்நலக் குறைபாடுகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளைப் பற்றிய விவரங்கள் அறிந்தும் கூட அங்கே போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அவகாசம் நமக்கு இருப்பதில்லை .
இதனால் என்ன ஆகிறது? நாம் விரும்பும் மருத்து வமனைக்குச் செல்ல முடியாத பட்சத்தில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் என்ற ரீதியில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள நேர்கிறது.இப்படியான சூழலைத் தவிர்க்க, சென்னையின் பிரபலமான மருத்துவமனைகள் பற்றியும் அங்கே கிடைக்கக் கூடிய அனைத்துவகையான சிகிச்சை முறைகளுக்கான பட் டியல் குறித்தும், அங்கே வந்து செல்லும் வெளிமாநில, வெளிநாட்டு நோயாளிகளோடு தற்போது புதிதாக வளர்ந்து வரும் துறையான மெடிக்கல் டூரிஸம் பற்றியும் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உதவலாம்.நீங்கள் இப்போது சென்னையில் வசிப்பவரா ?சென்னை உங்கள் சொந்த ஊரா? அல்லது வேலைக்காக நீங்கள் வந்த ஊரா?

பாம்பன் சுவாமி கோவிலில் சசிகலா

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில், சசிகலா நேற்று இரவு உருக்கமாக வழிபட்டார்.
சென்னை, திருவான்மியூர் கலாஷேத்ரா காலனி அருகில் பாம்பன் சுவாமி கோவில் உள்ளது. மயூரபுரம் என அழைக்கப்படும் அந்த இடத்தில் பாம்பன் சுவாமியின் ஜீவ சமாதி உள்ளது.
இந்த கோவிலில் பக்தர்கள் கேட்டது கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது. வி.ஐ.பி.,க்கள் பலர் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.
அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவும் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த கோவிலுக்கு வந்தார். அவருடன் ஒரு பெண் உதவியாளர் வந்திருந்தார்.
சாமி கும்பிட்டு விட்டு இரவு 9 மணியளவில் கோவிலிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், சீருடை அணியாமல் மப்டியில் அவரது காரில் வந்து சென்றார்.

கட்சி நிதி??? பெரும்பகுதி ராவணனின் பாக்கெட் டுக்குப் போய்விட்டதாம்

ராவணன் மீது ஒவ்வொரு நாளும் ஒரு புது கேஸ் போட்டுத் தாளிக்கிறது காவல்துறை. இதுவரை நடந்த விசாரணையில் தான் சேர்த்த சொத்துக்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் ஒரு வரிகூட விடாமல் கக்கிவிட்டாராம் ராவணன். இருந்தும் தொடர்கின்றன வழக்கு அம்புகள்.
கடந்த ஏழு மாதங்களில் சசிகலா உறவுகள் அத்துமீறி ஆடிவிட்டார்களாம். குறிப்பாக, தான் ரொம்பவும் நம்பிய ராவணன் சந்துபொந்துகள் எல்லாவற்றையும் வளைத்துப் போட்டிருக்கிறார் என்பதை அறிந்து முகம் சிவந்துவிட்டாராம் முதல்வர். ஆகவேதான் வழக்குச் சாட்டை சொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறதாம். ‘ராவணனின் பினாமிகள் குறித்த எல்லா விவரங்களையும் தோண்டியெடுங்கள்’ என உளவுத் துறைக்கு உத்தரவு போட்டிருக்கிறதாம் தலைமை..’’

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமார்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மார்ச் மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது.
 இதையடுத்து சங்கரன்கோவில் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் ஜவஹர் சூர்யகுமார் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார்.
 சென்னையில் இன்று நடந்த நேர்காணலுக்குப்பின் ஜவஹர் சூர்யகுமார் பெயர் அறிவித்தார்

தமிழக மின்வெட்டு 5 மணி நேரமாக குறைகிறது-சென்னைக்கு 2 மணி நேரமாக உயர்கிறது!


சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் 8 மணி நேர அதிகாரப்பூர்வ மின்வெட்டு அளவு 5 மணி நேரமாக குறைக்கப்படவுள்ளது. அதேசமயம், சென்னையில் தற்போது அமலில் உள்ள ஒரு மணி நேர மின்வெட்டானது, 2 மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதும் 8 மணி நேர மின்வெட்டை அதிகாரப்பூர்வமாக மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது. ஆனால் இது பெரும்பாலான மாவட்டங்களில் 9 முதல் 12 மணி நேரம் வரை இருப்பதாக மக்கள் குமுறுகிறார்கள்.
அதேசமயம், தலைநகர் சென்னையில் மட்டும் ஒரு மணி நேர மின்வெட்டு மட்டுமே அமலாகி வருகிறது. இது தமிழகத்தின் இதர பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தற்போது மின்வெட்டு பாகுபாட்டை சரி செய்யும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வாதன், மின்வாரிய அதிகாரிகள், தலைமைச் செயலாளர், மின்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சென்னைக்கான மின்வெட்டு அளவை 2 மணி நேரமாக உயர்த்தியும், தமிழகத்தின் இதர பகுதிகளுக்கான மின்வெட்டு அளவை 5 மணி நேரமாக குறைத்தும் அமல்படுத்துவது என்று முடிவாகியுள்ளதாக தெரிகிறது.

T.Nagar ரங்கநாதன் தெரு மேலும் 8 வாரம் திறந்து வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை தியாகராயர் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளைத் திறந்து வைப்பதற்கான அனுமதியை மேலும் 8 வார காலத்துக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து என்று 2007-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

கடையநல்லூரில் இஸ்லாமிய மதவாதிகளின் வெறியாட்டம்!

 இஸ்லாத்தை எதிர்த்து எழுதினால் குண்டாந்தடியை எடுப்போம் என்பது பச்சையான ரவுடித்தனம். இதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த நினைக்கும் எவருக்கும்  தகுதி இல்லை.
கடந்த 27/01/2012 வெள்ளிக் கிழமை மதியம் கடையநல்லூர் கடைவீதியில் (மெயின் பஜார்) இருக்கும் மஸ்ஜிதுன் முபாரக் பள்ளிவாசலின் ஜும்மா பேருரையில் ஓர் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ”மக்கட்டி துராப்ஷா என்பவர் வைத்திருக்கும் கறிக்கோழி கடையில் யாரும் கோழி வாங்கி சமைக்க வேண்டாம். அவர் இஸ்லாத்துக்கு விரோதமானவர் என்பதால் அவரிடம் கோழி வாங்கி உண்பது ஹராமாகும்( இஸ்லாமிய முறைப்படி விலக்கப்பட்ட உணவு)” என்று போகிறது அந்த அறிவிப்பு. அறிவித்தவர் மஸ்ஜிதுன் முபாரக் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சைபுல்லா ஹாஜா என்பவர்.
இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுவதற்கான காரணமாக கூறப்படுவது என்ன? “இறையில்லா இஸ்லாம்” எனும் தளத்தில் தஜ்ஜால் என்பவர் எழுதி வெளியிட்ட “லூத் என்றொரு லூஸ்” என்ற கட்டுரையை தோழர் துராப்ஷா தன்னுடைய முகநூல் (ஃபேஸ்புக்) சமூக தளத்தில் இணைப்பு கொடுத்திருந்தார், அவ்வளவு தான். இதற்குத்தான் மேற்படி நடவடிக்கை. முகநூல் போன்ற சமூக தளங்களில் யாராரெல்லாம், என்னென்ன விதமான விசயங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இணையம் பாவிக்கும் யாரும் அறிந்தது தான். ஃபேஸ்புக் நட்பு வட்டத்தின் மூலம் தனக்கு பிடித்த, பிடிக்காத, ஒத்த கருத்துள்ள, எதிர் கருத்துள்ள அனைவரது இணைப்புகளையும் ஒருவர் வைத்திருக்கலாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம், உரிமை சார்ந்தது.

Autistic குழந்தைகளுக்கு விசேஷ கவனிப்பு



Kolkotta 5 நபர்களால் காரில் வைத்து பாலியல் பலாத்காரம்

கொல்கத்தாவில் 30 வயதுடையை பெண் 5 நபர்களால் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 3வது நபரை அப்பெண் பேஸ்புக் மூலம் அடையாளம் காட்டியுள்ளாராம்.
பிப்ரவரி 4ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பாக தற்போது 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பெண் போலீஸாரிடம் கூறுகையில், பார்க் தெருவில் உள்ள ஒரு நைட் கிளப்புக்கு வெளியே டாக்சிக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தனது காரில் அந்தப் பக்கமாக வந்தார். எனக்கு லிப்ட் கொடுப்பதாக அவர் கூறினார். அவரை நைட் கிளப்பில் வைத்து நான் பார்த்து பரிச்சயமாகியிருந்ததால் தயக்கம் காட்டாமல் ஏறிக் கொண்டேன்.

நவீன மெருகேற்றலுடன் கர்ணன் படம் மீண்டும் ரிலீஸாகிறது!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1964களில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட்டான படம் “கர்ணன்”. கர்ணன் என்ற பெயரை கேட்டதும் சிவாஜியின் உருவம் மனதில் தானாகத் தோன்றும். 
சிவாஜி கர்ணனாகவே மாறி படத்தில் நடித்திருந்தார்.   “கொடுத்த வாக்கை காபாற்ற உயிரையும் துச்சமென மதித்தல்”, ”தானம் என்று வந்துவிட்டால் குருதியையும் இன்முகத்துடன் வழங்குதல்” போன்ற பற்பல கருத்துக்களை சாதரணமாக மனதில் பதித்து விடும் படம் கர்ணன்.
கர்ணன் படத்தில் கூறப்பட்டுள்ள இத்தகைய கருத்துக்களை இன்றைய சமுதாயத்தினரின் மனதில் பதிக்க விரும்பிய திவ்யா பிலிம்ஸின் சாந்தி சொக்கலிங்கம் இந்த படத்தை மறுவெளியீடு செய்கிறார்.
 பழைய கர்ணன் திரைப்படத்தின் தரத்தை சற்றும் பாதிக்காத வகையில் புதிய படம் அமைய வேண்டும் என்பதில் கவனமாக செயல்பட்டுள்ளனர்.

Encounter ரவுடிகள் பட்டியல் தயாராகிறது சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி

 ஜெயலலிதா எச்சரிக்கை எதிரொலியாக, தமிழகம் முழுவதும் என்கவுன்டர் செய்யப்பட வேண்டிய ரவுடிகள், கொடூர குற்றவாளிகளின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மாணவன் கடத்தல், வங்கிகளில் கொள்ளை, நகைக் கடைகளில் துளைபோட்டு கொள்ளை முயற்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள் கொலை, அதிகாரிகளின் வீடுகளில் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், சென்னை போலீஸ் எஸ்.ஐ.க்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ‘‘கொலையாளிகள், வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்’’ என்று அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். முதல்வரே பச்சைக் கொடி காட்டி விட்டதால், மாநிலம் முழுவதும் ஏற்கனவே 10 ஆயிரம் ரவுடி களை போலீசார் பட்டியிலிட்டு வைத்துள்ளனர்.

கல்வி கொள்ளையர்களுக்கு சாட்டையடி கொடுக்க வருகிறது உடும்பன்!!

Udumban director speaks about movie
சினிமாவில் சில படங்கள் சமூக அக்கறையோடும், பொறுப்போடும் படங்களை படங்களாக காட்டாமல், பாடங்களாக காட்டும் பட வரிசையில் சேரவுள்ள புதியபடம் உடும்பன். 17ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படம் குறித்து, அப்படத்தின் டைரக்டர் பாலன் என்ன சொல்கிறார் என்று நீங்களே கேளுங்கள். நான் இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை எடுத்துள்ளேன். 2006-ல் நாகரீக மோமாளி என்ற படத்தை எடுத்தேன். அதன் பிறகு இப்போது உடும்பன் படத்தை எடுத்துள்ளேன். கதையின் களம், மதுரை கருவேலங்காட்டு பகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தன் மகனை திருடனாகவே தயார் படுத்துகிறார். கன்னக்‌கோல் போட்டு திருடுவது, உடும்பை வைத்து திருடுவது தான் அவன் வேலை. அப்படி ஒருநாள் திருட போன வீட்டில் அவனுக்கு ஒன்றும் சிக்கவில்லை. வீட்டில் பணம் ஏதும் இல்லையா என்று அந்த வீட்டு உரிமையாளரிடம் கேட்க, அதற்கு அவர் இப்போது தான் பிள்ளைகளின் படிப்புக்கு கட்டணம் என்ற பெயரில் பள்ளிக்கூடம் கொள்ளையடித்தது என்று கூறுகிறார்.

ராஜா குறுக்கு விசாரணை "2ஜி' வழக்கு: "டிராய்' துணை ஆலோசகரிட

ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயக் கொள்கையை உருவாக்கும் போது, ஸ்பெக்ட்ரத்தின் சந்தை மதிப்பு, திறன், முதலீட்டில் லாபம் மற்றும் கிராமப் புறங்களில் தொலைத் தொடர்பு சேவையை அதிகரிப்பது ஆகியவற்றை எல்லாம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) கருத்தில் எடுத்துக் கொண்டதா என்று தெரியவில்லை' என, "டிராய்' அமைப்பின் துணை ஆலோசகர் சாட்சியம் அளித்தார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) துணை ஆலோசகர் வீரேந்திர கோயலை, முன்னாள் அமைச்சர் ராஜா நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.