வியாழன், 30 அக்டோபர், 2025

மும்பாய் - பணய கைதிகளாக அடைக்கப்பட்ட 17 குழந்தைகள் மீட்பு! ரோஹித் ஆர்யா சுட்டுக்கொலை!

 தினமலர் :மும்பை: மும்பையில் ஸ்டுடியோவில் 17 குழந்தைகளை பிணைக்கைதிகளாக அடைத்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா என்பவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பல்வேறு, சினிமா, தொலைக்காட்சி தொடர்களுக்கு குழந்தைகள் தேர்வும் இங்கு நடத்தப்பட்டது.
இந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்த ரோஹித் ஆர்யா என்ற நபர் பல குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதாக இன்று ( அக்.,30) மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என பசும்பொன் சந்திப்பில் முழக்கமிட்ட வைகோ!

 hindutamil.in  : மதுரை: அரசியலில் எதிரும், புதிருமாக இருந்து வந்த வைகோ, சீமான் பசும்பொன்னில் ஒன்றாக சந்தித்துக் கொண்டதோடு, சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என முழக்கமிட்டதோடு அவரை ஆரத்தழுவி கட்டி அனைத்துக் கொண்டது, நாதகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக அரசியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளில் எதிரெதிர் துருவமாக செயல்பட்டு வந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமான விவகாரத்தில் ஒருவர் மீது ஒருவர் மிகக் கடும் விமர்சனங்களை செய்துவந்த நிலையில் இன்று இருவரும் ஒரே நேரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பிஎம்ஶ்ரீ திட்டம்: கேரளா பின்வாங்கியது- தமிழகம் உறுதியாக நிற்பது ஏன்?

 மின்னம்பலம் -  Mathi  :  மத்திய அரசின் “பிஎம்ஶ்ரீ” (Prime Minister’s Schools for Rising India பிரதம மந்திரி பள்ளிகள் எழுச்சி இந்தியா) திட்டம், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதற்கான முன்மாதிரிப் பள்ளிகளை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டாலும், 
மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவ உரிமை குறித்த பெரும் விவாதத்தை நாடு முழுவதும் கிளப்பியுள்ளது. குறிப்பாக, 
கேரளா அரசு,புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில வாரங்களிலேயே அதில் இருந்து விலகி, ஆய்வுக் குழுவை அமைத்திருப்பதும், தமிழ்நாடு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து, நிதி நிறுத்தம், உச்ச நீதிமன்ற வழக்கு என சட்டப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதும் இத்திட்டத்தின் மீதான அரசியல் மற்றும் சித்தாந்த மோதல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

புதன், 29 அக்டோபர், 2025

பைசன் - கதைகளை விட உண்மை வரலாறுகள் எப்போதுமே சுவாரஸ்யமாகவே இருக்கின்றன.

No photo description available.
சுமதி விஜயகுமார்  :  பைசன் திரைப்படத்தை பலரும் பலவிதமாக சிலாகித்து எழுதிய பதிவுகளை படிக்க நேர்ந்தது. 
அவை எல்லாவற்றையும், இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக சொல்ல வேண்டுமென்றால், 
பைசன் திரைப்படத்தையும் தாண்டிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்றால்,
 அது அரண்செய் தோழர் மதன் அறிவழகன் பேரலை ஊடகத்துக்கு கொடுத்த பேட்டி தான்.
மாரி செல்வராஜ் ஜாதிய திரைப்படங்களாக எடுக்கிறார் என்ற விமர்சனத்தில் எனக்கு கருத்து மாறுபாடில்லை. 
அவர் எடுப்பது அனைத்தும் ஜாதி ஒடுக்குமுறை திரைப்படங்கள் தான். 
ஆனால் அந்த கதைகளில் ஜாதி வேறுபாடு, பகை கொண்டவர்களில் கூட தோழமையுடன் பழகவும், உதவி செய்யவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை தவறாமல் அனைத்து திரைப்படங்களிலும் சொல்லி வருவதை அழகாக தன் நேர்காணலில் தோழர் குறிப்பிட்டுள்ளார். 

ஆபரேஷன் பூமாலை - 5 அன்டோனோவ் பிளேன்கள் - 4 மிராஜ் பிளேன்கள்

May be an image of poster and text that says 'បល់ மில்லர் லர் MOVIE LAUNCH EVENT GLIMPSE'

ராதா மனோகர் : 1987 ஜூன் மாதமளவில் இலங்கை படைகள் யாழ்ப்பாணத்தில் வேகமாக முன்னேறின.
அச்சுவேலி வரை முன்னேறியது . இன்னும் சில மாதங்களில் புலிகளை முற்று முழுதாக ஒழித்து விடுவோம் என்று இலங்கை அரசு அறிவித்தது.
இந்த நிலையில், 
இந்திய வான்படை  4 June 1987 அன்று  யாழ்ப்பாணத்தில் அரிசி பருப்பு போன்ற உணவு மூட்டைகளை  போட்டது!
ஆபரேஷன் பூமாலை என்ற பெயர் கொண்ட இந்த ராணுவ நடவடிக்கையில் 
 5 Antonov An-32 military transport aircraft- 5 அன்டோனோவ் பிளேன்கள் 
4 Mirage 2000H jet fighters[1]   4 மிராஜ் பிளேன்கள் பயன்படுத்த பட்டன.
இந்தியாவின் இந்த அதிரடி ராணுவ சிக்னலை புரிந்து கொண்ட 
இலங்கை அரசு உடனே தாக்குதல்களை நிறுத்தியது!
பேச்சு வார்த்தைக்கு தயார் என்று ஜேயார் ஜெயவர்த்தனா ராஜிவ் காந்திக்கு டெலிபோனில் கூறினார்.

செவ்வாய், 28 அக்டோபர், 2025

விமான பயணிகள் மீது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியர் மீது குற்றச்சாட்டு

 தினமலர் : நியூயார்க்: விமான பயணத்தில் இரு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதியன்று சிகாகோவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்றுகொண்டிருந்த லுப்தான்சா விமானத்தில் இரண்டு இளைஞர்கள் மீது 28 வயது இந்தியர் ஒருவர் முள் கரண்டியால் குத்தியதாகவும், சக பயணியை அறைந்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.
இது குறித்து மாசசூசெட்ஸ் மாகாண வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
சிகாகோவிலிருந்து ஜெர்மனிக்குச் செல்லும் விமானத்தில், பிரணீத் குமார் உசிரிபள்ளி 28, என்ற இந்தியர் பயணித்தார்.

விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்- சீமான் ஆவேசம்!

 மின்னம்பலம் -Pandeeswari Gurusamy  : பாஜகவுடனான கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
கரூரில் செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 28) நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்திற்கு முதன்மை காரணம் விஜய்தான். தவறு இல்லை என்றால் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்? குற்றத்திற்கு காரணமானவரையே சிபிஐ விசாரிக்காது என்றால் பிறகு எப்படி நியாயம் வரும்? 

குகேஷூக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்’ – தமிழக அரசின் ஊக்கத்தொகை எவ்வாறு முடிவாகிறது?

BBC tamil :  ஆசிய இளையோர் போட்டிகளில் கபடியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் தங்கம் வென்றுள்ளன. அந்த அணிகளில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகா ரமேஷ் மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், பஹ்ரைனில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இரானை எதிர்த்து விளையாடி இந்திய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கார்த்திகா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அவர்கள் விமானத்தில் சென்னை வந்தவுடன் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

DUDE படக்கதை பிரதமர் வாஜ்பாயின் சொந்த வாழ்க்கையா?

Dude (2025 film) - Wikipedia
The Untold Vajpayee: Politician and ...

 Muralidharan Pb : அக்கால டியூடின் கதை.
அந்த இளைஞன் மிகவும் துடிதுடிப்பானவன். வசீகரமான தோற்றம் கொண்ட அவன்  குவாலியரில் படித்துக் கொண்டிருந்த போது பெண் ஒருவளிடம் காதல் வயப்பட்டான். ஆனால் இவன் வேலைக்கு ஏதும் போகிற எண்ணமெல்லாமல் இல்லை என்பதாலும்  அதோடு  அரசியலுக்காக ஜெயிலுக்கு போனவன் என்ற காரணத்தினாலும் அவனை அந்த பெண்ணின் தந்தை வெறுத்தார். தன் மகளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை தேடினார். 
காஷ்மீரிலேயே பெண்ணுக்கு மாப்பிள்ளையை தேடிபிடித்து மணமுடித்து வைத்தார். ஆகவே காதலர்கள் பிரிந்தை ஒட்டி அவன் சோகத்திலேயே கான்பூருக்கு போக அவளோ டெல்லிக்கு சென்றுவிட்டாள். பிறகு லக்னெள சென்று அரசியலில் புகழ்ச்சி அடைகிறார் காதலன்.

தமிழ்நாட்டிலும் SIR... ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிப்பு!

 மின்னம்பலம் - christopher  : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து ஆலோசிக்க வரும் நவம்பர் 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் இன்று (அக்டோபர் 27) அறிவித்தார்

திங்கள், 27 அக்டோபர், 2025

ஓ பன்னீர்செல்வம் : மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்

 மின்னம்பலம் - Kavi :  மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இன்று (அக்டோபர் 27) மருது சகோதரர்களின் 224-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 6.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசத்தினை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
கேள்வி பதில்கள்
2026 சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நீங்கள் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி விட்டீர்கள்… மீண்டும் இந்த கூட்டணியில் இணைவீர்களா? அல்லது வேறு கூட்டணியில் இணைவீர்களா? 

ஆந்திரா பேருந்து தீக்கிரை - 23 பேர் உயிரிழப்பு

dinamalar :தினமலர் : ஆந்திரா மாநிலம் கர்னூலில் பயணிகள் 39 பேருடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பஸ் தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், இரண்டு பேர் சிறுவர்கள்.இவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகின்றன.

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

Karur Killings - சிபிஐ விசாரிக்கும் போது நடிகர் விஜய்யின் மாமல்லபுரம் சந்திப்புக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு?

 மின்னம்பலம் -Mathi  : கரூரில் பலியானவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் நடிகர் விஜய் மாமல்லபுரத்துக்கு ‘வரவழைத்து’ ஆறுதல் கூறுவதற்கு எதிராக சென்ன உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ல் நடத்திய பிரசாரத்தின் போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. 
இந்த விசாரணைக்கு எதிராக தவெக தரப்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

கனடாவில் குயிபேக் மாநில தனிநாடு கோரிக்கை வலுக்கிறது

 ராதா மனோகர்  : கனடாவின் பிரெஞ்சு மொழி பேசும் கீபேக் (குயிபேக்) மாகாண சுதந்திர கோரிக்கை வலுக்கிறது.
தங்கள் மாநிலத்தின் அடையாளம் மொழி போன்றவை கனடாவின் ஆங்கில மேலாண்மையால் அழிந்து கொண்டு வருகிறது என்று பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் கருதுகிறார்கள்.
இந்த மாநிலம் பிரிந்து போவதற்கு உரிய பொதுவாக்கெடுப்பு முன்பு இருமுறை நடந்தது.
ஆனால் அந்த இரு வாக்கெடுப்பிலும்  தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவான வாக்குகள் போதிய வாக்குகள் இன்மையால் அது வெற்றி பெறவில்லை.
1980 Quebec referendum, the 1980 plebiscite to grant the Government of Quebec a mandate to negotiate sovereignty-association
1995 Quebec referendum, the 1995 referendum to allow the Government of Quebec, after offering a partnership to Canada, to declare independence
கடந்த 1995 இல்  நடந்த சுயநிர்ணய பொதுவாக்கெடுப்பு சுமார் 40 ஆயிரம் வாக்குகளால் மட்டுமே தோற்கடிக்கப்பட்டது.

Vijay : பவன் கல்யாண் மாதிரி ஆக சொல்றீங்களா? எந்த பவரும் இருக்காது.. புலம்பிய விஜய்? நடந்தது என்ன?

 tamil.oneindia.com  - Shyamsundar :  சென்னை: விஜயை பாஜக கூட்டணிக்குள் இழுக்க பாஜகவின் டாப் தலைகள் தீவிரமாக முயன்று வருகின்றனராம். ஆனால் பவன் கல்யாண் போல ஆக நான் விரும்பவில்லை என்று விஜய் தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறி உள்ளாராம்.
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் குறித்து பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜயை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் முயற்சிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாமக செயல் தலைவராக ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி நியமனம்!

 மின்னம்பலம் - Kavi  : பாமகவில் கடந்த ஓராண்டாகவே நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் இரு துருவமாக செயல்பட்டு வருகின்றனர். 
அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ராமதாஸை அன்புமணி சந்திக்கவில்லை. மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவர்களிடம் மட்டும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்துவிட்டு வந்துவிட்டார்.
இதற்கிடையே பாமகவின் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு அன்புமணி பதிலளிக்காததால் அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். 

ஆ ராசாவும் அருந்ததி ராய்களும்! திராவிட ராசாவும் ஆரிய அருந்ததியும்

May be an image of one or more people, people smiling and dais
May be an image of one or more people
Pranoy roi -  Arundhahti rai

 ராதா மனோகர் : உலக புகழ் பெற்ற மனித உரிமை பிரபலமும் எழுத்துலக பிரபலமுமான அருந்ததி ராய் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். 
மீண்டும் மீண்டும் அவரை விமர்சிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.
ஆனாலும் அவ்வளவு இலகுவாக இந்த குற்றவாளியை தப்ப விட முடியாது என்ற எண்ணமே எனக்குள் மேலோங்குகிறது.
இந்திய இடதுசாரிகள் முற்போக்குகள் பெரிதும் பார்பனிய கோட்பாட்டு பாதுகாவலர்கள்தான்!
இந்த கும்பலுக்கு ஒரு சரியான உதாரணமாக அருந்ததி ராய்தான் எனக்கு தெரிகிறார்.
நுனி நாக்கு ஆங்கிலம், அசல் ஆரிய வெள்ளை நிறம் , இலகுவாக மனதில் நிற்க கூடிய முகம் . சினிமாவுக்கு உரிய முகவெட்டு,  மிக சிறந்த கதை சொல்லும் திறமை  . போதிய அளவு எழுத்தாற்றல் நல்ல வாசிப்பு,  புகழ் பெறக்கூடிய பிரச்சனைகளை கண்டறியும் ஆற்றல் போன்றவை இவர் மீடியாக்களுக்கு எப்போதும் அசல் தீனி போடும் ஆளுமையாக தெரிகிறார்.
இதை விட மிக முக்கியமான விடயம்  ஊடகங்களுடனான இவரின்  குடும்ப தொடர்புகள் மிக மிக அதிகம்! 
இவ்வளவு திறமையும் ஆற்றலும் உள்ள இவர் மீது ஏனிந்த விமர்சனம் என்று பலரும் கருத கூடும்.

வியாழன், 23 அக்டோபர், 2025

தமிழக அமைச்சர்கள் முதலமைச்சரின் கல்வி தகுதி என்ன?

 Kandasamy Mariyappan :  படித்தவர்கள் நாட்டை ஆண்டால்தான் நாடு நன்றாக இருக்கும் என்று சினிமா மற்றும் பொதுவெளியில் பேசுவதை கேட்டிருப்போம்.!
சரி நமது தமிழ் நாட்டு அமைச்சர்கள் எல்லோரும் என்ன படித்துள்ளனர் என்று பார்த்தால்...
முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின், BA History
நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், MA BL
துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், B Com, MBA
நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, BE Machanical Engineering
தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு. PTR பழனிவேல் தியாகராஜன், B Tech Chemical Engineering, MSc Operation Research, MBA Financial Management, PhD Humen Factors Engineering
கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ், MCA PhD
உயர்கல்வி அமைச்சர் திரு. கோவி. செழியன், MA BL, M Phil, PhD in Geotechnogical Engineering
சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சுப்ரமணியம், BA LLB
சட்டத்துறை அமைச்சர் திரு. ரகுபதி, BSc Chemistry, BL.
வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. பெரியசாமி, BL.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. EV. வேலு, MA 

புதன், 22 அக்டோபர், 2025

வார்த்தை விளையாட்டில் இந்துமதம் - ஹிரோஷிமா + நாகசாகி - அன்பு பயம் பக்தி

Hiroshima and Nagasaki: 75th ...
Hiroshima - Nagasaki

ராதா மனோகர் :  ஹிரோஷிமா நாகசாகி அன்பு பயம் பக்தி 
முதல் முதலில் அணுக்குண்டு எங்கே போடப்பட்டது என்று யாரை கேட்டாலும் உடனே ஹிரோஷிமா நாகசாகி என்று கூறிவிடுவார்கள்! 
இந்த பதிலில் ஒரு பெரிய மோசடி இருக்கிறது! 
மிகவும் நரித்தனமாக திட்டமிட்டு ஹிரோஷிமா நாகசாகி என்ற இரண்டு ஊர்களையும் ஒரே ஊர் போல கருதும் அளவுக்கு ஒரு சொற்றொடராகவே இதை கட்டமைத்து விட்டார்கள்.
ஹிரோஷிமா 6  August 1945 Hiroshima   உயிரிழப்பு   90,000–166,000 killed.
நாகசாகி 9 August 1945Nagasaki  உயிரிழப்பு  60,000–80,000 killed.
அணுகுண்டின் கொடூரத்தையயும் ஹிரோஷிமா நகரின்  அழிவையும் பார்த்த பின்பு சரியாக மூன்று நாட்களுக்கு பின்பு இரண்டாவது அணுகுண்டை நாகசாகி துறைமுகத்தில் அமெரிக்கர்கள் வீசினார்கள்!

செவ்வாய், 21 அக்டோபர், 2025

போனஸ் வழங்காததால் கோபம்: கட்டணம் வசூலிக்கலாம் கேட்டை திறந்துவிட்ட ஹரியானா சுங்கச்சாவடி ஊழியர்கள்

 மாலை மலர் :  அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேட்டை மூடாமல் திறந்து விட்டனர். கேட்டை மூடினால், வாகனம் அதன்முன் வந்து நிற்கும். fastag மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பின் கேட் திறக்கப்படும்.

இயக்குனர் ஸ்ரீதரின் மனதை உடைத்த ஜெயலலிதா

31 yo Jayalalitha with Legendary Director Sridhar. It was Sridhar who  introduced her in Vennira Aadai. He is also known for Kadhalikka  Neramillai,Kalyana Parisu, Ilamai Oonjal Aadukirathu, Nenjil Ore Alayam etc  :
May be an image of text that says '500 भारत INDIA 2013 सी. वी. श्रीधर C.V. C. .V SRIDHAR 100 treme'

 “என்னை ஏமாற்றிவிட்டார் ஜெயலலிதா!” - வருந்தி பேசிய ஸ்ரீதர்
புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கிய கையோடு வழக்கம் போலவே சினிமா உலகம் டைரக்டர் ஸ்ரீதரை மறந்துவிட்டது. கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’ பட பூஜைக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் கைத்தாங்கலாகப் பிடித்து வர, டைரக்டர் ஸ்ரீதர் வந்திருந்தார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழ முயன்றபோது ஸ்ரீதரின் உடல் இடதுபக்கம் இயக்கமின்றிப் போயி ருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை பிசியோ தெரபியும் வேறுபல சிகிச்சைகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. தி.நகர் வெங்கட்ராமன் தெருவில், ஸ்ரீதரின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது, அடக்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசினார்…

திங்கள், 20 அக்டோபர், 2025

தேர்தல் ஆணையம் பா.ஜ.க. ஆணையமாக மாறிவிட்டது பீகாரில் அத்தனை தில்லுமுல்லுகளை அரங்கேற்றம்

 கலைஞர் செய்திகள் - Praveen : இந்தியாவில் ஜனநாயகத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இந்தியத் தேர்தல் ஆணையமே மாறி இருக்கிறது. பீகார் மாநிலத்தில் முறையாக, ஒழுங்காக, நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. 
ஆனால் அதைப் பற்றி எல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எந்தக் கவலையும் இல்லை.
SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மூலமாக பீகார் மக்களை பீதி அடைய வைத்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதனை உச்சநீதிமன்றம் எத்தனை முறை கேள்வி எழுப்பினாலும் தேர்தல் ஆணையம் மந்தமாக, கண்டுகொள்ளாமல், காது கேட்காதது மாதிரியே இருக்கிறது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

“COMET (Community of Metros)” சென்னை மெட்ரோ உலக அளவில் முதலிடம்! தரமான சேவை உலக ஆய்வு நிறுவனம் அறிவிப்பு

 மின்னம்பலம் -Pandeeswari Gurusamy  : உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ ரயில் நிறுவன வாடிக்கையாளகர்களிடம் நடத்திய ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளிட்டுள்ள அறிக்கையில், 
“COMET (Community of Metros)” என்பது உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ இரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை (benchmarks) நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் ஒரு புதிய உறுப்பினராகச் சேர்ந்தது.
 உலகத் தரத்திலான செயல்பாடுகளை அடைவதற்கும், முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கும் இது முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆண்டுதோறும் முக்கியச் செயல்பாட்டுக் குறிகாட்டிகள் (Key Performance Indicators) குறித்த தரவுகளைச் சேகரிக்கின்றனர்.

நீதிமன்றம் குறித்து அவதூறுப் பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

 Hindu Tamil  :  சென்னை: நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், அவர் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்

: இலங்கை வட- கிழக்கு மாகாண அரசை கருவிலேயே கொன்ற திரு அண்ணாமலை வரதராஜ பெருமாள்

May be an image of one or more people
ராதா மனோகர் : இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்க பெற்ற நன்மைகள் அனைத்தையும்  புலிகளுக்கு முன்பே ஒருவர் தோற்கடித்தார் என்பது தெரியுமா?
May be an image of text that says 'திரு. அண்ணாமலை வரதராஜ பெருமாள் imgflip. imgflip.com com'

புலிகளுக்கு முன்பே முதல் கோணல் முற்றும் கோணல் என்று கூறக்கூடிய அளவு பெரும் தீங்கிழைத்தவர் திரு.வரதராஜ பெருமாள்  ஆகும்.
வடகிழக்கு மாகாண சபையை ஒரு தனி ஈழம் என்பதாக சிங்கள இனவாதிகள் தென்னிலங்கையில் கடுமையாக பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள் 
ஜேவியும் பல இனவாத குழுக்களும் தென்னிலங்கையில் மிக பெரிய பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்! 
காலி மாத்தறை ஆகிய மாவட்டங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று கருதும் அளவுக்கு   நிலைமை மோசமாகி விட்டிருந்தது.

சராசரியாக  ஒரு நாளைக்கு 20 இல் இருந்து 50 பேர்வரை அந்த மாவட்டங்களில்   கொலை செய்யப்பட்டனர்.

மின்சார ஜெனெரேட்டர்கள், ரயில்வே பாலங்கள், வங்கிகள், பெரும் விற்பனை நிலையங்கள் பலவும் பெற்றோல் குண்டுகளால்  பற்றி எரிந்து கொண்டிருந்தன..
குடிநீர்  மின்சாரம் போக்குவரத்து போன்றவற்றிக்கும் மக்கள் அல்லாடி கொண்டிருந்தனர்.