ஞாயிறு, 26 அக்டோபர், 2025

Vijay : பவன் கல்யாண் மாதிரி ஆக சொல்றீங்களா? எந்த பவரும் இருக்காது.. புலம்பிய விஜய்? நடந்தது என்ன?

 tamil.oneindia.com  - Shyamsundar :  சென்னை: விஜயை பாஜக கூட்டணிக்குள் இழுக்க பாஜகவின் டாப் தலைகள் தீவிரமாக முயன்று வருகின்றனராம். ஆனால் பவன் கல்யாண் போல ஆக நான் விரும்பவில்லை என்று விஜய் தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறி உள்ளாராம்.
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் குறித்து பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜயை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் முயற்சிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



அரசியல் வட்டாரங்களின்படி, இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் விஜயின் தரப்பை அணுகி, தீவிரமான அரசியல் சலுகையை முன்வைத்துள்ளனர். அதாவது, கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள், விஜய்க்கு இதில் விருப்பம் இல்லை. சிபிஐ விசாரணை காரணமாக அவர் முடிவு எடுக்காமல் இருக்கிறார். அழுத்தத்தில் இருக்கிறார். மற்றபடி அவருக்கு கூட்டணிக்கு செல்ல விருப்பம் இல்லை, என்று கூறி உள்ளனர். தனது நெருங்கிய நண்பர்களிடம் பேசுகையில், துணை முதல்வர் பதவிக்கு உண்மையான அதிகாரம் இருக்குமா என்பது குறித்து விஜய் சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

"துணை முதலமைச்சர் பதவியை எனக்கு கொடுக்க பா.ஜ.க விரும்புகிறது. ஆனால் உண்மையான அதிகாரம் இல்லாமல், வெறும் பதவியாக இருந்தால் என்ன பயன்? தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, எனக்கு அந்தப் பதவி கிடைத்தாலும், அது உண்மையான அதிகாரத்துடன் வராது. அது முற்றிலும் அரசியல் சார்ந்ததாகவே இருக்கும், அது அரசியலமைப்பு பதவி இல்லை.. வெறும் அரசியல் பதவி.." என்று விஜய் தனது நம்பிக்கைக்குரியவர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அப்செட்டான விஜய்

விஜயின் இந்தக் கருத்துகள், பெயரளவிலான பதவிகளைப் பெற்று, உண்மையான முடிவெடுக்கும் அதிகாரமற்ற ஒரு அரசியல் வலையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய துணை முதலமைச்சராக இருக்கும் தெலுங்கு நடிகர்-அரசியல்வாதி பவன் கல்யாணுடன் அவர் ஒப்பிட்டுப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

"பவன் கல்யாண் துணை முதலமைச்சர் பதவியை வகித்தாலும், அவருக்கு உண்மையான அதிகாரம் இல்லை. நான் அவரைப் போல ஆக விரும்பவில்லை," என்று விஜய் குறிப்பிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழுத்தம் தரும் டெல்லி

டெல்லியில் உள்ள சில பாஜக தலைவர்கள், தமிழக வெற்றிக் கழக (TVK) நிறுவனர் விஜய்க்கு, NDA கூட்டணியில், அதாவது பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட தீவிர அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த பாஜக வியூக வகுப்பாளர்கள் விஜயிடம் அழுத்தம் திருத்தமாக ஒன்று NDA கூட்டணியில் இணையுங்கள் அல்லது அரசியலை விட்டு விலகுங்கள் என்று அழுத்தம் தருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஒன்று அவர் NDA-வுடன் கைகோர்க்க வேண்டும் அல்லது அரசியலை விட்டு விலக வேண்டும். ஏனென்றால் தமிழக வெற்றிக் கழகம் தனியாக நின்றால் எதிர்க்கட்சி வாக்குகளை பிரிக்கும். அப்படி நடக்க கூடாது. ஒன்று அவர் என்டிஏவில் இணைய வேண்டும். இல்லையென்றால் அரசியலில் இருந்தே விலக வேண்டும்.

விஜய் அரசியலை விட்டு விலகினால், ஆளும் திமுக மீது ஏற்கனவே அதிருப்தியில் உள்ள அவரது ரசிகர் பட்டாளம் இயற்கையாகவே NDA முகாமிற்கு நகர்ந்து, பாஜக மற்றும் அதிமுக இருவருக்கும் நன்மை பயக்கும்.

பல விஜய் ரசிகர்கள் திமுகவின் ஆட்சியை விரும்பவில்லை, ஆனால் அவர்களுக்கு ஆதரவளிக்க வலுவான மாற்று இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். விஜய் விலகினால், அந்த ஒட்டுமொத்த வாக்காளர் தளமும் NDA-ன் கீழ் ஒருங்கிணைக்கப்படலாம்," என்று பாஜக தலைமை நம்புகிறது. இதை மனதில் வைத்தே டெல்லியில் உள்ள சில பாஜக தலைவர்கள், தமிழக வெற்றிக் கழக (TVK) நிறுவனர் விஜய்க்கு, NDA கூட்டணியில், அதாவது பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட தீவிர அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை: