புதன், 10 மே, 2023

Balasubramania Adityan T : ஜெயலலிதாவை கொன்றதன் காரணம் என்ன❓

 Vengat Joy  : ;டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியை தமிழ்நாட்டுக்குள் விடாமல் கசாயத்தின் மூலமாகவே குணப்படுத்தியது மருந்து மாஃபியாக்களுக்கு தலைவலியாக இருந்தது

நட்டாத்தி முருகேஷ் நாடார்
சொல்வதை  செய்,
அல்லது செத்துமடி.
இதுதான் பார்முலா ஐயா.

Surulivel Theni  : ஜெ கொலையை
மழுப்பவே ஜல்லிக்கட்டு போராட்டம்
கிளப்பி விடப்பட்டது. அரசின் அனுமதி இன்றி அப்போராட்டம் வாய்ப்பில்லை

Rasheed Abdul  :; முதல்வர் பதவி ஆசை காட்டி ஏமாத்திட்டானுவ.
பல காரணங்கள் இருக்கு லிஸ்ட்டு பெரிசா போகுமே.
பெரியவா, கமல் ,பெண்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்தது,கடைசி தருணத்தில்
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியது, பிஜெபி சகவாசம் தவறுன்னு பகிரங்கமாக பேசியது,
அவாள் துணையில்லாமல் செயல் பட முடியும் என்ற நிலைக்கு உயர்ந்ததும்.இப்படி நிறைய இருக்கு.
கூட்டி கழித்து பார்த்தால் அவாளுக்கு இழப்புகள் அதிகம்.

Chinnaraj Palanisamy  :  சங்கரராமன் கொலை வழக்கு, ஜெயேந்திரன் கைது. கம்மனாட்டியின் அதிகார மையத்தின் மேல் கை வைத்ததுன்னு நினைக்கரேங்க ஐயா

செவ்வாய், 9 மே, 2023

“தயங்கவே மாட்டேன்”.. சீனியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மறைமுக வார்னிங்!?

tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  அப்போ மகன்.. இப்போ அப்பா.. “தயங்கவே மாட்டேன்”.. சீனியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மறைமுக வார்னிங்!?
சென்னை : திமுக இளைஞரணியில் ஆரம்பகாலம் முதல் தனக்கு உறுதுணையாகச் செயல்பட்ட ஆவடி நாசரையே அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி அடித்திருப்பதன் மூலம் சீனியர்களுக்கு மறைமுக 'வார்னிங்' கொடுத்திருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின்.
சில திமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது வரம்பு மீறிப் பேசி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.   அது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்கட்சியினரின் கடும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது.
Is this a indirect warning of CM Stalin to dmk seniors

தூங்கவிடாமல் செய்த அமைச்சர்கள் : அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துவந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக அப்செட் ஆனாலும், சீனியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறினார். கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட இதுதொடர்பாக தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

டி ஆர் பி ராஜா பால்வளத்துறை அமைச்சராகினார் .. அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கம்

 மாலை மலர் :  அமைச்சர் துரைமுருகன், கவர்னரை சந்தித்து பேசப் போவதாக தகவல் வெளியானது. அமைச்சராக டிஆர்பி ராஜா 11ம் தேதி பதவியேற்க உள்ளார்.
சென்னை: தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன.
எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இன்று மதியம் மூத்த அமைச்சரான துரைமுருகன், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து இதுபற்றி பேசப்போவதாக தகவல் வெளியானது.

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 41 இலங்கையர்கள்

hirunews.lk  : அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட, சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த 41 பேர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் பல நாள் மீன்பிடி இழுவை படகுகளில் கடல் வழியாக பயணம் செய்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சித்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படாமல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இம்ரான் கான் கைது! நாடு முழுவதும் அதிகரிக்கும் பதற்றம்!.. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

zeenews.india.com  - Vidya Gopalakrishnan  :  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளதாக டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.
தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் வழக்கறிஞர் பைசல் சவுத்ரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிடிஐ தலைவர் ஃபவாத் சவுத்ரி ஒரு ட்வீட்டில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ரேஞ்சர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்
மற்றும் வழக்கறிஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.
அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் ஆஜரான பிறகு, PTI தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவும்,

அமைச்சரவை மாற்றமா?- அமைச்சர் துரைமுருகன் : யாமறியோம் பராபரமே!

 மாலைமலர் :  சென்னை: தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன.
இதையடுத்து இன்று மதியம் தி.மு.க. மூத்த அமைச்சரான துரைமுருகன், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை மறுத்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு 'யாமறியேன் பராபரமே' என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்றே எனக்கு தெரியாது. அமைச்சர்களை மாற்றுவது முதலமைச்சரின் விருப்பம்; அதை அவரே முடிவெடுப்பார்.

ஜப்பான் நிறுவனத்துடன் (Mistsubishi Electric ) புரிந்துணர்வு ஒப்பந்தம்.. 2,004 பேருக்கு வேலைவாய்ப்பு !

ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்.. 2,004 பேருக்கு வேலைவாய்ப்பு !
கலைஞர் செய்திகள் - Praveen : முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் 2,004 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை குறிவைக்கும் இந்திய 'டாடா' நிறுவனம்!

TATA a potential investor for SriLankan Airlines?

hirunew  :  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை குறிவைக்கும் இந்திய 'டாடா' நிறுவனம்!
ஸ்ரீலங்கன் விமான சேவையை இந்தியாவின் ‘டாடா குழுமத்துக்கு கையளிப்பது தொடர்பில், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுமமான 'டாடா நிறுவனம்' ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்களை தன்வசம் கொண்டுள்ளது.

திங்கள், 8 மே, 2023

ஓபிஎஸ்-டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு.. சசிகலாவையும் சந்திக்க முடிவு

 tamil.oneindia.com - Mani Singh S  பெரிய ட்விஸ்ட்.. இணைந்து செயல்படுவதாக ஓபிஎஸ்-டிடிவி தினகரன் அறிவிப்பு.. சசிகலாவையும் சந்திக்க முடிவு
சென்னை: அதிமுகவை காப்பாற்ற இணைந்து செயல்பட முடிவு செய்து இருப்பதாக ஓ பன்னீர் செல்வமும் டிடிவி தினகரனும் கூட்டாக தெரிவித்தனர்.
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ பன்னீர் செல்வம் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார்.
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரனும் ஓ பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது டிடிவி தினகரன் கூறியதாவது:- சிபிஐ, சிபிஎம் கட்சிகள் போல நானும் ஓபிஎஸ்சும் இணைந்து செயல்படுவோம். எனக்கும் அவருக்கும் சுயநலம் கிடையது.

பி.டி.ஆர் இலாகா பறிப்பு: நிதியமைச்சர் ஆகிறாரா தங்கம் தென்னரசு?

மின்னம்பலம்  - christopher : தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நிலையில் இதுவரை ஒரு இடைக்கால பட்ஜெட் மற்றும் இரண்டு முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுகளை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு பொருளாதார நிதி முன்னேற்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வந்த பிடிஆர் தேசிய அளவிலும் கவனிக்கப்படும் ஆளுமையாக உருவெடுத்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதியும், முதல்வர் மருமகன் சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துவிட்டதாக பிடிஆர் பேசியது போல் ஒரு ஆடியோ க்ளிப் வெளியாகி திமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பழனிவேல் தியாகராஜனுக்கு பதில் புதிய அமைச்சரை நியமிக்க வாய்ப்பு - தமிழக அமைச்சரவை புதன்கிழமை மாற்றம்?

maalaimalar :  சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
ஆட்சியின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் நாளை வரை தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அனைத்து அமைச்சர்களின் பெயர்களும் முதலில் இடம் பெற்றிருந்தன. ஆனால் மதுரை சிம்மக்கல் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீரென பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் நேற்று பொதுக்கூட்டத்தில் பேச செல்லவில்லை.

நுவரெலியா மருத்துவமனையில் கண்பார்வை இழப்பிற்கு இந்திய மருந்துகளே காரணம்! இலங்கை - மலையகம்

May be an image of 3 people, hospital and text that says 'மலையகம் NEWS UPDATE நுவரெலியா வைத்தியசாலையில் 10 பேரின் பார்வை இழப்பிற்கு விஷமான இந்திய மருந்துகளே காரணம்! Malayagam.lk www.malayagam.lk'

மலையகம் - Thana - : நுவரெலியா வைத்தியசாலையில் 10 பேரின் பார்வை இழப்பிற்கு விஷமான இந்திய மருந்துகளே காரணம்!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்படுவதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை செய்திகள் ஊடாக பரவும் தகவல்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே வைத்தியசாலையின் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேரளாவில் சொகுசு படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு-

 மாலை மலர்  : கேரளாவில் சொகுசு படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு.
கப்பலில் 40 பேர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மேலும், கடலில் 30க்கும் மேற்பட்டோர் மூழ்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையின் முதலாவது தலித் பத்திரிகை : மலையகத்தின் "ஆதி திராவிடன்" - என்.சரவணன்

நமது மலையகம்  :  இலங்கையின் முதலாவது தலித் பத்திரிகை : மலையகத்தின் "ஆதி திராவிடன்" - என்.சரவணன்
நூறாண்டுகளுக்கு முன்னர் அதாவது 1919ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து வெளியான ஆதிதிராவிடன் (Audi Diraviden) இலங்கையின் முதலாவது தலித் பத்திரிகை : மலையகத்தின் "ஆதி திராவிடன்" -   இலங்கையின் இலங்கையின் முதலாவது தலித் பத்திரிகை : மலையகத்தின் "ஆதி திராவிடன்" -  சமூகத்தினரால் தாழ்த்தப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட பத்திரிகையாகும்.
இலங்கையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முதலாவது பத்திரிகையாகும்.
இந்திய வம்சாவளியினரில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக வெளியானது.
ஆதி திராவிடர் என்போர் யார். ஆதிதிராவிடன் பத்திரிகையை வெளியிட்டவர்கள் யார்?
எந்த சங்கத்தால் வெளியிடப்பட்டது? அப்பத்திரிகையின் உள்ளடக்கம் என்ன?
இலங்கையில் திராவிட இயக்கங்களில் வருகை?
திராவிட சித்தாந்தத்தின் இலங்கை வடிவம் எப்படி இருந்தது? என்பது பற்றிய தேடலை இக்கட்டுரை ஆற்றுகிறது.  namathumalayagam

ஞாயிறு, 7 மே, 2023

பீகாரில் கால்வாயில் கட்டு கட்டாக பணம்- மக்கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்

 மாலைமலர் : பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் பெரிய மூட்டை கிடந்தது.
மேலும் சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன.
இதை பார்த்த சிலர் கால்வாய்க்குள் இறங்கி அந்த மூட்டையை பிரித்தனர். அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது.
உடனே கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து கால்வாய்க்குள் இறங்கினர்.
அவர்கள் போட்டி போட்டு கொண்டு கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர்.
கழிவுநீரையும் பொருட்படுத்தாமல் அதில் மிதந்த 2000, 500, 100 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றனர்.

புதுக்கோட்டை சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காதலன்

  file  மாலைமலர் : மணப்பாறை  புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.
இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 1-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டுச்சென்ற சிறுமி இரவு நீண்ட ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம், தோழிகள், உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் சிறுமியின் தாய் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தியாவில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ நடனம் ..கோவாவில் பரவும் வீடியோ!

மின்னம்பலம்  : பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் தொடக்க விழாவில் நடனமாடுவதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு நேற்று (மே 4) கோவாவில் தொடங்கியது.
இந்த மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அலுவல் மொழியாக ரஷ்ய மொழியும், சீனாவின் மாண்டரின் மொழியும் உள்ளன.

ஓபிஎஸ்ஸிடம் சபரீசன் என்ன கேட்டார்? உள் அறையில் நடந்த மீட்டிங்.. “மதில் மேல் பூனை” திமுக பக்கம் டைவ்?

May be an image of 2 people and text that says '06-05-2023 ஜனியர் NJ 0000 ஓபிஎஸ் சபரீசன் சந்திப்பு! என்ன பேசியிருப்பார்கள்? foc /juniorvikatan www.vikatan.com vikatan'

   tamil.oneindia.com - Vignesh Selvaraj : உள் அறையில் நடந்த மீட்டிங்.. “மதில் மேல் பூனை” திமுக பக்கம் டைவ்? ஓபிஎஸ்ஸிடம் சபரீசன் என்ன கேட்டார்?
சென்னை : திமுகவில் அதிகாரமிக்க புள்ளியாக விளங்கும் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சந்தித்துப் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
பாஜக தன்னைக் கைவிட்டு விட்டதால் திமுக பக்கம் ஓபிஎஸ் சாய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர்.

சனி, 6 மே, 2023

தந்தை பெரியாரே புதுமைப்பெண்ணை உருவாக்கினார் .. பாரதி உருவாக்கியது கண்ணம்மாவைத்தான்!

May be an image of 3 people

Loganayaki Lona :  பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக வாழ வாழ்த்தும் கம்யூனிஸ்டுகளே!
பாரதி வாழ்நாளில் புதுமைப்பெண்ணை உருவாக்கவும் இல்லை,பார்க்கவும் இல்லை.கண்ணம்மாவே வாழ்நாள் அடிமை வாழ்க்கைக்கு  ஒரு சாட்சி..
இது தமிழ்நாடு இங்கு உருவாகியிருக்கும் அனைத்து புதுமைப்பெண்ணும் திராவிடத்தின் வார்ப்புகள்.தந்தை பெரியார் களம் கண்டு போராடி தன் வாழ்நாளில் பல புதுமைப்பெண்களை உருவாக்கி பார்த்து விட்டு மறைந்த நாடு.
இங்கு கனவு கண்டவர்களையும்,கவிதை எழுதியவர்களையும் வைத்து பெண்களை வாழ்த்துவது அரசியல்படுத்தப்பட்டவர்களின் அரசியல் நேர்மையற்ற செயல்.
கோவிலுக்கு சென்று கொண்டிருந்த தன் இணையரை,தன் சகோதரியை கள்ளுக்கடை மறியல்  போராட்ட களத்திற்கு தலைமையாக்கியவர் தந்தை பெரியார்.

இந்த ஆட்சியின் முகம் சனாதனமல்ல சமூகநீதி”.. ஆளுநருக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 Kalaignar Seithigal-  Lenin  :  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.5.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள், மாணவியர்களுக்கு “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் உயர்கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகள், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களை பாராட்டி கேடயங்கள் ஆகியவற்றை வழங்கி ஆற்றிய உரை:-                                                          உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தை, நன்றியை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…” உங்களால் மறக்க முடியாத குரல் இது.     இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுடைய அன்போடு, ஆதரவோடு முதலமைச்சர் பொறுப்பில், தமிழ்நாட்டைப் முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன்.

சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?: ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கே

சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?: ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி!

Kalaignar Seithigal  - Lenin  :  தமிழ்நாடு சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?
ஆளுநர் கூறுவது போல சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறவில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மணிப்பூர் வன்முறையில் 54 பேர் பலி - கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது ராணுவம்

 மாலை மலர்  : மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையின் பிணவறையிலும், 15 பேரின் உடல்கள்
இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த மணிப்பூர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது.
 மணிப்பூரின் இம்பால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் ஓடத்துவங்கியுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம், மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது மக்கள் இன்று காலை முதலே காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரத்துவங்கினர்.

தென்னிந்தியாவில் தமிழ்நாடு தான் மிக வலிமையான மாநிலம் . ரிசர்வ் வாங்கி அறிவிப்பு

 tamil.goodreturns.in - Prasanna Venkatesh :  தமிழ்நாடு, ஆந்திரா பிரதேசம், கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஐந்து மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இந்த 5 மாநிலங்களில் எந்த மாநிலம் வலிமையான பொருளாதாரத்தை கொண்டு உள்ளது என ரிப்போர்ட்-ஐ இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.
தென்னிந்தியாவில் தமிழ்நாடு தான் கெத்து.. அப்போ கர்நாடகா..? RBI வெளியிட்ட ரிப்போர்ட்..!
இந்திய ரிசர்வ் வங்கி தென்னிந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் 2023 ஆம் நிதியாண்டில் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வுகள் அடிப்படையில் GSDP தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. GSDP என்பது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அல்லது மாநில வருமானம் - இது ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கான மிக முக்கியமான அளவுகோளாக உள்ளது.

சட்டவிரோதமான 221 கடன் செயலிகள முடக்கம் ... 'சைபர் கிரைம்' போலீசார்

மாலை மலர்  : சென்னை :சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை 'சைபர் கிரைம்' போலீசார் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரையில் 'பேஸ்புக்', 'இன்ஸ்ட்ராகிராம்', 'டுவிட்டர்', 'யூடியூப்' போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து 40 சட்டவிரோத பதிவு கள், கருத்துகள் 'சைபர் கிரைம்' போலீசார் நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் முக்கிய பிரமுகர்கள் பற்றி 386 அவதூறு 'வீடியோ' பதிவுகள் இருப்பதை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த 'வீடியோ' பதிவுகளை முடக்க வேண்டும் என்று 'யூடியூப்' நிறுவனத்துக்கு 'சைபர் கிரைம்' போலீசார் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பி உள்ளனர்.

வெள்ளி, 5 மே, 2023

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய அதிகாரி Pradeep Kurulkar கைது

 மாலை மலர்  :  புனே  புனேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) பணியாற்றி வரும் விஞ்ஞானி ஒருவர், பாகிஸ்தான் ஏஜெண்டுகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் செய்யப்பட்டுள்ளார்.
அவர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்டுடன், வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பில் இருந்திருக்கலாம் என பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தன்னிடம் உள்ள ரகசியங்கள் எதிரி நாட்டுக்கு கிடைத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிந்திருந்தும், அந்த விஞ்ஞானி, தனது பதவியை தவறாக பயன்படுத்தி, தகவல்களை எதிரி நாட்டுக்கு வழங்கி உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.