சனி, 6 மே, 2023

தென்னிந்தியாவில் தமிழ்நாடு தான் மிக வலிமையான மாநிலம் . ரிசர்வ் வாங்கி அறிவிப்பு

 tamil.goodreturns.in - Prasanna Venkatesh :  தமிழ்நாடு, ஆந்திரா பிரதேசம், கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஐந்து மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இந்த 5 மாநிலங்களில் எந்த மாநிலம் வலிமையான பொருளாதாரத்தை கொண்டு உள்ளது என ரிப்போர்ட்-ஐ இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.
தென்னிந்தியாவில் தமிழ்நாடு தான் கெத்து.. அப்போ கர்நாடகா..? RBI வெளியிட்ட ரிப்போர்ட்..!
இந்திய ரிசர்வ் வங்கி தென்னிந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் 2023 ஆம் நிதியாண்டில் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வுகள் அடிப்படையில் GSDP தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. GSDP என்பது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அல்லது மாநில வருமானம் - இது ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கான மிக முக்கியமான அளவுகோளாக உள்ளது.



இந்திய ரிசர்வ் வங்கி GSDP தரவுகள் அடிப்படையில் 2023 ஆம் நிதியாண்டின் முடிவில் 24.8 லட்சம் கோடி ரூபாய் GSDP உடன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகா 22.4 லட்சம் கோடி ரூபாயும், தெலுங்கானா ரூ13.3 லட்சம் கோடி ரூபாயும், ஆந்திரப் பிரதேசம் 13.2 லட்சம் கோடி ரூபாயும், கேரளா 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டிபியுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

பொருளாதாரத்தின் அளவைத் தவிர, தனிநபர் வருமானம், மாநிலக் கடன், வரி வருவாய், வட்டி செலுத்தும் விகிதம் மற்றும் நிதிப் பற்றாக்குறை அடிப்படையிலும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சி அளவீட்டை கணக்கிடலாம். இதன் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் எந்த மாநிலம் முன்னிலையில் உள்ளது..? ஒட்டுமொத்தமாக எந்த மாநிலம் சிறப்பான மாநிலம்..?

தென்னிந்தியாவில் தமிழ்நாடு தான் கெத்து.. அப்போ கர்நாடகா..? RBI வெளியிட்ட ரிப்போர்ட்..!

தனிநபர் வருமானம்: 2022 ஆம் ஆண்டு தரவுகள் அடிப்படையில் தனிநபர் வருமானம் கணக்கிடப்பட்டு உள்ளது.
தெலுங்கானா - 2,75,443 ரூபாய்
கர்நாடகா - 2,65,623 ரூபாய்
தமிழ்நாடு - 2,41,131 ரூபாய்
கேரளா - 2,30,601 ரூபாய்
ஆந்திர பிரதேசம் - 2,07,771 ரூபாய்.
இந்தியாவின் சராசரி தனி நபர் வருமான அளவான 1,50,007 ரூபாயுடன் ஒப்பிடுகையில், தென்னிந்திய மாநிலங்கள் செம கெத்து.

Debt to GSDP ratio: ஒரு மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தை கணக்கிட Debt to GSDP ratio மிகவும் முக்கிய காரணியாகும்.
தெலுங்கானா - 25.3 சதவீதம்
கர்நாடகா - 27.5 சதவீதம்
தமிழ்நாடு - 27.7 சதவீதம்
ஆந்திரா பிரதேசம் - 32.8 சதவீதம்
கேரளா - 37.2 சதவீதம்.
நிதி ஆரோக்கியத்தை பார்க்கும் போது தெலுங்கானா தான் டாப்பு, கேரளா கடைசியில் உள்ளது.

வரி வருவாய் : அதிக வரி வருவாய் கொண்ட மாநிலம் வளர்ச்சி திட்டத்திற்கு அதிகப்படியான தொகையை முதலீடு செய்ய முடியும். அந்த வகையில் தென்னிந்தியாவில் அதிக வரி வருமானம் கொண்ட மாநிலமாக இருப்பது தமிழ்நாடு.
தமிழ்நாடு - ரூ.1,26,644 கோடி
கர்நாடகா - ரூ.1,11,494 கோடி
தெலுங்கானா - ரூ.92,910 கோடி
ஆந்திரா - ரூ.85,265 கோடி
கேரளா - ரூ.71,833 கோடி

பெங்களூர் டெக் ஊழியர் கண்ணீர்.. வாடகை வீடு தேட போன இடத்தில்.. 1.6 லட்சம் அபேஸ்..!! பெங்களூர் டெக் ஊழியர் கண்ணீர்.. வாடகை வீடு தேட போன இடத்தில்.. 1.6 லட்சம் அபேஸ்..!!

நிகர நிதி பற்றாக்குறை : குறைந்த நிதிப்பற்றாக்குறை விகிதம் கொண்ட மாநிலம் அதன் பொருளாதார வலிமையைக் குறிக்கிறது. ஏனெனில் மாநிலத்தின் செலவினங்களுக்கு முதலீடு செய்வதற்கு மாநில அரசு குறைவான பணத்தை கடன் வாங்கினால் போதுமானது.
கர்நாடகா- 2.8 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் - 3.2 சதவீதம்
தமிழ்நாடு - 3.8 சதவீதம்
தெலுங்கானா - 3.9 சதவீதம்
கேரளா - 4.2 சதவீதம்
தென்னிந்தியாவில் தமிழ்நாடு தான் கெத்து.. அப்போ கர்நாடகா..? RBI வெளியிட்ட ரிப்போர்ட்..!

GSDP தரவுகள் அடிப்படையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்தாலும் பிற முக்கிய காரணிகளை ஒப்பிட்டு கணக்கிடும் போது தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகியவை பெரும்பாலான பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
English summary
TAMILNADU is the biggest economy in south India Says RBI report- Ch

கருத்துகள் இல்லை: