நக்கீரன் செய்திப்பிரிவு : கந்துவட்டி கொடுமைத் தொடர்பாக, வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், 'ஆப்ரேஷன் கந்துவட்டி' நடவடிக்கை மூலம் சட்ட அறிவுரைப் பெற்று வழக்குகளை பதியுமாறு மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு எழுதியுள்ள கடிதத்தில், "கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதன், 8 ஜூன், 2022
'ஆப்ரேஷன் கந்துவட்டி'- தமிழக டி.ஜி.பி. உத்தரவு!
dostarlimab 100 சதவீதம் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து- விஞ்ஞானிகள் சாதனை.. வாஷிங்டனில்
மாலைமலர் : டோஸ்டர்லிமாப் சிகிச்சை முறை அப்படி பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சைக்கு பின், எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் ( dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பாஜக தலைவர்கள் முதிர்ச்சியற்ற பேச்சு: இந்தியா-வளைகுடா நாடுகள் வர்த்தகம் பாதிக்குமா?
tamil.asianetnews.co - Pothy Raj : இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்களின் முதிர்ச்சியற்ற, சர்ச்சைக்குரிய கருத்தால் வளைகுடா நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் வர்த்தக உறவு பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவதூறு
இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபுல் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் இருவரையும் சஸ்பெண்ட் செய்து பாஜக தலைமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தால் அதிருப்தியும், வேதனையும் அடைந்த முஸ்லிம் நாடுகள் இந்தியத் தூதர்களை அழைத்து கண்டனத்தையும், அதிருப்தியையும் பதிவு செய்தன. கத்தார், ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் நாடுகள் இந்தியத் தூதர்களுக்கு கண்டனம் தெரிவித்தன.
பெட்ரோல் டீசலுக்கு அந்நிய செலாவணி இல்லாத இலங்கையில் 80 இலட்சம் வாகனங்கள்
வீரகேசரி : இலங்கை தற்போது ஒரு நெருக்கடியான பொருளாதார நிலையை எதிர்கொண்டு இருக்கின்றது. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மிகவும் நெருக்கடியான ஒரு பொருளாதார நிலைமை நாட்டில் நீடித்திருக்கிறது. மக்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் எரிபொருளை பெற முடியாமல் எரிவாயுவை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மின்வெட்டு அமுலில் இருக்கிறது. மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு பெற்றுக்கொள்வதற்கு நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருக்கின்றனர். வரிசைகளிலேயே உணவு உட்கொண்டு அங்கேயே உறங்கும் நிலையில் மக்கள் இருக்கின்றனர். மிகவும் ஒரு இக்கட்டான கசப்பான அனுபவங்களை பெறக்கூடிய ஒரு பொருளாதார நெருக்கடி நிலைமை நாட்டில் காணப்படுகிறது.
இந்த நெருக்கடி நிலைமை நாட்டில் அரசியலிலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி அமைச்சரவையிலும் பாரிய மாற்றங்கள் பல தடவைகள் இடம்பெற்றிருக்கின்றன. இறுதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுப்பணி துறை அலுவலகத்தில் கோலோச்சிய தீண்டாமை! ஒரே டம்ளரா ஒரே டாய்லட்டா ....
![]() |
-1963 மே 21-ஆம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த மகாலிங்கத்தின் மனைவி முனியம்மாவுக்கு அவுரங்காபாத்திலிருந்து ‘கர்னல்’ பிராவல் அனுப்பிய தந்தியில் இடம்பெற்ற வாசகம் இது!
மேலே குறிப்பிட்டுள்ள மகாலிங்கம் – முனியம்மா தம்பதியரின் மகனான மாரியப்பனும், ஒரு ராணுவ வீரராக இருந்து தேசப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்தான்.
ராணுவத்திலிருந்து விலகியபிறகு, TNPSC IV தேர்வில் தேர்ச்சிபெற்று, விருதுநகர் - தமிழ்நாடு அரசுப் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
செவ்வாய், 7 ஜூன், 2022
இந்த அநியாயத்தை பேசாத எந்த ஈழத்து இலக்கியவாதியும் வெறும் விளம்பர வியாபாரியே!
Radha Manohar : ஈழத்து இலக்கிய உலகில் நீண்ட காலமாக ஒரு பொய் ஒழிந்துகொண்டிருக்கிறது. ஈழத்து கவிஞர்கள் அல்லது புனை கதைகளை படைக்கும் இலக்கியவாதிகள் பெரும்பாலும் யுத்தம் அது தந்த வலி பற்றி எழுதுவதே ஒரே நோக்கமாக கொண்டிருப்பது போல தெரிகிறது அது தவறு என்று கூறவில்லை . ஆனால் அதில் உண்மை இருக்கவேண்டும்.
இராணுவ தாக்குதல்கள் காரணமாக மக்கள் அடைந்த துன்பத்தை இலக்கிய தளத்தில் முன்வைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு போராட்டத்தின் மறுபக்கத்து விளைவுகளையும் பாரபட்சமின்றி இலக்கிய தளத்தில் முன்வைக்கவேண்டும்.
ஏறக்குறைய எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு காவியம் படைக்கும் ஒரு வெறுமை அல்லது பொய் கண்முன்னே தெரிகிறதே?
எனக்கு தெரிந்தவரையில் தமிழ் மக்களால் ஜீரணிக்கவே முடியாத ஒரு அதிர்ச்சியையும் துன்பத்தையும் தந்தது எந்த நாட்டு இராணுவமும் அல்ல.
சவுதி அரேபிய பெண் விமானிகள் ஒட்டிய எயர்பஸ் A320 விமானம்
ஒரு விமானம் பறந்த செய்தி முக்கியத்துவம் பெறக் காரணம், குறித்த விமானம் முழுமையாக (முஸ்லிம்) பெண்களால் இயக்கப் பட்டமையே ஆகும்.
'பெண்களுக்கு அறிவில் குறைபாடு இருக்கின்றது, நெருங்கிய உறவினரான ஆண் துணை இல்லாமல் பெண் வெளியே செல்லக் கூடாது,
நறுமணம் பூசிக் கொண்டு வெளியே செல்லும் பெண் விபச்சாரி, பெண்ணின் சாட்சி ஆணின் சாட்சியின் பாதிக்குத்தான் பெறுமதி, ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு சொத்துத்தான் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும்,
1000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மீட்சி பயிற்சி : 14 கடலோர மாவட்டங்கள்
கலைஞர் செய்திகள் : 1000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தைமுதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
14 கடலோர மாவட்டங்கள்.. 1000 மீனவ இளைஞர்கள்: தமிழ்நாடு அரச திட்டம் தொடக்கம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.6.2022) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக காணொலிக் காட்சி வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் 25 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இலங்கையில் யூரியா உரம் ரூ.1,500 விலையில் இருந்து ரூ 42,500 ஆக எகிறியது! : நெல் விளைச்சல் என்ன ஆகும்?
BBC Tamil : இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அதனை வழிமொழிந்துள்ளதோடு, அந்த நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களை உஷார்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வருடம் சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த நெல் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவானதே - தற்போதைய சிறுபோகத்தில் கிடைக்கும் என, விவசாய திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதனால் மக்களின் பிரதான உணவுப் பொருளான அரிசிக்கு - அடுத்து வரும் மாதங்களில் பாரிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, நெற் செய்கைக்கான செலவுகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன. முன்னர் சாதாரணமாக ஒரு ஏக்கரில் - நெற் செய்கை மேற்கொள்வதற்கு 40 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையில் செலவானதாகவும், தற்போது அந்தத் தொகை 01 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகவும் - ஓய்வுபெற்ற ஆசிரியரும் நெற் காணி உரிமையாளருமான எஸ்.ஏ. றமீஸ் தெரிவிக்கின்றார்.
மதுரை ஆதீனதின் “அம்பாள் என்றைக்கடா பேசினாள்.. விவகாரம்
Dhinakaran Chelliah : தற்போதுள்ள மதுரை ஆதீனம் அவர்கள் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ ஒன்றில் கலைஞர் எழுதிய “அம்பாள் என்றைக்கடா பேசினாள்?!” என்ற திரை வசனத்துக்கு குறிப்பிட்டு இப்படியெல்லாம் கிண்டல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
‘சமயபுரம் மாரியம்மன் துஷ்ட தேவதை என்று சொன்னார்கள்’ என்றெல்லாம் ஆதீனம் கூட்டத்தில் பேசியுள்ளார்.
இவ்வளவு ஏன்,சைவப் பெருமகனார் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் “சமய தீக்ஷிதா அநுட்டான விதி” நூலில் நாட்டார் தெய்வங்கள் தாய்தெய்வ வழிபாட்டினை விமர்ச்சித்திருப்பதை ஆதீனகர்த்தா அறியவில்லையா?!
“உயிர்ப்பலியேற்குந் துட்ட தேவதைகளையும் வீரன் மாடன் கறுப்பன் முதலிய பிசாசுகளையும் வணங்கலாகாது.
வணங்குவீர்களானால், சிவபெருமானுடைய சாபம் உங்களுக்கு தப்பாது கிடைக்கும்”
பேருந்துகளில் இ-டிக்கெட்.. பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு” : அமைச்சர் அதிரடி
கலைஞர் செய்திகள் : அரசு பேருந்துகளில் இ - டிக்கெட் திட்டம் இந்த ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகளில் பயண டிக்கெட்டுகளுக்கு பதில் இ - டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
சேலை உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
மின்னம்பலம் : விருதுநகர் ராஜபாளையம் நூல் விலை உயர்வை கண்டித்து கலர் ரக சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கடந்த மாதம் மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வும் வழங்கப்படும் என வட்டாட்சியர் முன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து மருத்துவத்துணி வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் நூல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என சேலை உற்பத்தியாளர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தின் முதல் அனிமல் பாஸ் ஓவர் பாலம்; மதுரை அருகே அமைகிறது
puthiyamugam.com : தமிழகத்திலேயே முதல் முறையாக, மதுரை – திண்டுக்கல் எல்லை அருகே வாடிப்பட்டி வகுத்து மலைப்பகுதியில், வன விலங்குகள் வாகனங்களின் இடையூறின்றி கடந்து செல்வதற்காக ‘அனிமல் பாஸ் ஓவர்’ மேம்பாலம் அமைய உள்ளது.’பாரத்மாலா பரியோஜனா’ எனப்படும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மதுரை வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை, 555 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி, 2018ல் துவங்கி 80 சதவீதம் முடிந்துள்ளது.
இந்த நெடுஞ்சாலை, பாலமேடு அருகே, வகுத்து மலை வனப்பகுதி வழியாக அமைக்கப்படுகிறது. எனவே, அந்த வனப்பகுதியில் வசிக்கும் காட்டு மாடுகள், முயல்கள், குரங்குகள், பாம்புகள் உள்ளிட்ட அரிய வன விலங்குகளை பாதுகாக்க, விலங்குகளுக்கு பாதிப்பில்லாத வகையில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்திய ஒன்றியத்துக்கு வழி காட்டும் திராவிடம் . திமுக வெறும் கட்சியல்ல ஒரு Trend Setter
ராதா மனோகர் : இந்தியா முழுமைக்கும் அரசியல் போக்கை
தீர்மானிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் (TREND SETTER)
திராவிட முன்னேற்ற கழகம், ஏனைய அரசியல் கட்சிகளை போல வெறும் ஒரு அரசியல் கட்சி கிடையாது.
அது ஒரு வெறும் மாநில கட்சி போல் தோன்றினாலும்,
அதையும் தாண்டிய ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அது உருவாகி உள்ளது..
சுயமரியாதை, சமுக நீதி, பகுத்தறிவு, மாநில சுயாட்சி என்ற நான்கு
தூண்களும் கொண்டு நிமிர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம்!
இந்த நான்கு அடிப்படை கோட்பாடுகளும் ஆரிய பார்ப்பனீய காலனி தத்துவத்துக்குநேர் எதிரான கோட்பாடுகளாகும் .
அதன் ஒவ்வொரு படிநிலையிலும் அந்த கருத்தியலில் மிகவும் உறுதியாக முன்னேறி கொண்டே வந்திருக்கிறது.
இதன் அடிப்படை கொள்கைகள் சராசரி மக்களின் புரிந்துணர்வை தாண்டிய வீச்சு கொண்டதாகும்.
இந்த உண்மையை இன்றைய தலைமுறையினர் பெரிதாக அறிந்திருக்கவில்லை.
இதை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம்.
திறந்த மனதோடு அணுகினால் மட்டுமே இந்த கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளமுடியும்.
திங்கள், 6 ஜூன், 2022
ஹிந்து/திய .. வல்லரசு கனவில் இருந்து வழுக்கி விழுந்த தேசம் ..
![]() |
![]() |
![]() |
LR Jagadheesan : “ஹிந்து/திய வல்லரசுக்கனவு”
“தெய்வபக்தியும் தேசபக்தியும்” இந்துத்துவத்தின் இரு கண்கள். வரலாறு நெடுகிலும் எல்லாவகையான வல்லரசுகளின் வலிமையான அரசியல் கருத்தியல் ஆயுதங்களும் அவையே. உலக வல்லரசுகளின் ஆயுதங்களில் வில்லும் வாளும் ஈட்டியும் துப்பாக்கியும் பீரங்கியும் அணுகுண்டுகளும் மட்டும் இருக்கவில்லை. அவற்றின் அம்பராத்தூணிகளில் இருந்த/இருக்கும் வலிமைவாய்ந்த அம்புககள் கலை, இலக்கிய படைப்புகள்.
இந்திய புராண இதிகாசங்களில் இருந்து தமிழ் சங்கப்பாடல்கள்; பரணிகளில் இருந்து சோழசாம்ராஜ்ஜியங்களில் இருந்து நவீன அமெரிக்க வல்லரசின் வல்லமையை பறைசாற்றும் ஹாலிவுட் படங்கள் வரை வரலாறு நெடுக கலை இலக்கிய படைப்புகள் அந்தந்தகாலகட்டத்தின் வல்லரசுகளுக்கான ஏக்கத்தையும் ஏற்பையும் வெகுமக்களிடம் ஏற்படுத்தும் “கரசேவையை” செய்தே வந்திருக்கின்றன.
பயில்வான் ரங்கநாதனை எக்ஸ்போஸ் செய்த பாடகி சுசீத்திரா! "ரொம்ப எல்லை மீறி போறீங்க
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக அறியப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன்.
ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார்.
நடிகர்கள் பற்றிய இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி பலரும் புகார் கூறி வருகின்றனர். இதையடுத்து பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், பாடகி சுசித்ரா குறித்து தவறாக பேசியுள்ளார்.
வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு தீர்ப்பு
மாலைமலர் : உத்தரப் பிரதேசம் வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு
உத்தர
பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு
நடந்தது. விசாரணையில் இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான்
காரணம் என தெரிய வந்தது. லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த
2006-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்தனர்.
100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வாரணாசியில் இந்துப் பல்கலைக்கழகம் அருகில் உள்ள அனுமன் கோவில், கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன.
பாஜக பேச்சாளரின் நபி பற்றி பேச்சு . அரபு நாடுகளில் இந்திய பொருட்களுக்கு தடை?
Trending against in Arab world : Muhammad Ibrahim Qazi @miqazi : The Arab world is angered at the derogatory remarks passed against Prophet Muhammadﷺ by Nupur Sharma، Spokesperson of ruling party BJP @timesnow. The Arabs are campaigning to boycott Hindustan products.
BBC News, தமிழ் : பாஜக-வின் மத நல்லிணக்க அறிக்கை, நபிகள் பற்றி பேசிய நிர்வாகிகள் நீக்கம்: என்ன நடக்கிறது?
முகமது நபி பற்றி சர்ச்சைக்கிடமாகப் பேசி, கான்பூரில் ஒரு கலவரத்துக்கு வழி வகுத்ததாக குற்றம்சாட்டப்படும் ஒரு பாஜக செய்தித் தொடர்பாளர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசியதாக மற்றொரு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அது மட்டுமல்ல, எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் சித்தாந்தத்தையோ, ஆட்களையோ பாஜக முன்னிறுத்தவில்லை என்று ஓர் அறிக்கையையும் பாஜக வெளியிட்டுள்ளது.
பொதுவாகவே இந்து பெரும்பான்மைவாதத்தை முன்னிறுத்தும், சமீப காலமாக பெரும்பான்மைவாதத்தை தீவிரமாக முன்னெடுப்பதாக குற்றம்சாட்டப்படும் பாஜக முகாமில் இருந்து இத்தகைய சமிக்ஞைகள் வெளியாவது அரசியல் வட்டாரத்தில் வியப்பை அளித்துள்ளது.
ஞாயிறு, 5 ஜூன், 2022
பாஜக அண்ணாமலைக்கு அமைச்சர் மா சுப்பிரமணியம் விரிவான பதிலடி
மின்னம்பலம் : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை மதுரையில் ஜூன் 5ஆம் தேதி வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, மா.சுப்பிரமணியன் மற்றும் முத்துசாமி ஆகிய இரு அமைச்சர்களின் துறை மீது குற்றசாட்டை முன்வைத்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்களுடன் வழங்கப்படும் தொகுப்பில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறிய அண்ணாமலை, “கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா நியூட்ரிசியன் கிட் அரசு கொடுத்து வருகிறது. திமுக ஆட்சியில் அம்மா என்ற வார்த்தையை நீக்கிவிட்டனர்.
திருமாவளவன் : தி.மு.க. அரசு மீது அண்ணாமலை விளம்பரத்துக்காக குற்றம் சாட்டுகிறார்
மாலைமலர் : தி.மு.க. அரசு மீது அண்ணாமலை விளம்பரத்துக்காக குற்றம் சாட்டுகிறார்-
நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ளுவதற்காக அண்ணாமலை இதுபோன்று செயல்படுகிறார் என திருமாவளவன் கூறியுள்ளார்.
தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜனதா தான் என்கிற பிம்பத்தை உருவாக்க அக்கட்சியின் மேலிட திட்டத்தை அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
சென்னையில் இன்று காயிதே மில்லத் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் கட்சி நிர்வாகிகள் பால சிங்கம், தமிழேந்தி, செல்லத்துரை, இரா.செல்வம், எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி!
நக்கீரன் செய்திப்பிரிவு : கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று (05/06/2022) மதியம் 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி (வயது 18), பிரியா (வயது 19), மோனிஷா (வயது 16), நவநீதம் (வயது 20), சுமிதா (வயது 18), காவியா (எ) திவ்யதர்ஷிணி (வயது 10), பிரியதர்ஷிணி (வயது 15) ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கார்த்தி சிதம்பரம் கைதைத் தவிர்க்க தீவிரம்.... தீவிரம்!
மின்னம்பலம் :: சிவகங்கை மக்களவை காங்கிரஸ் உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 4) மனு தாக்கல் செய்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் மீது பஞ்சாப் மின்சார நிறுவனத்துக்கு சீன பணியாளர்கள் கொண்டுவர படுவதற்கு விசா கொடுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் முதல் குற்றம்சாட்டப்பட்டவராக பதிவு செய்யப்பட்டிருந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரும் கூட்டாளியுமான பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கார்த்தி சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்தப் பின்னணியில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பள்ளி திறப்பில் மாற்றம்?: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவர்களுடன் ஆலோசனை .. அறிவிப்பு!
கலைஞர் செய்திகள் : கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ் பொய்யாமொழி, கல்வித்துறை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய அரசு எப்பொழுதும் கடைசி நேரத்தில் தான் நம்மை அழைக்கின்றனர். குஜராத்தில் நடந்த கல்வி மாநாட்டிற்கும் அவ்வாறே அழைத்தனர். தமிழ்நாட்டில் கல்வித்றை தொடர்பான பல்வேறு நிகழ்சிகளை முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நடத்தி வருகிறோம்.
திமுக ஊழல் பட்டியலை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
News18 Tamil : : ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக தற்போது CMDA மாறியிருக்கிறது என்று தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
திமுக ஆடிட்டர் சண்முகசுந்தரம், அண்ணாநகர் கார்த்தி ஆகியோர் அரசில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றனர் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
23,8800 ஊட்டச்சத்து தொகுப்புகளை தமிழக அரசு வாங்குகிறது. 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பில் தனியார் ஹெல்த் மிக்ஸ் பொருளுக்கு பதிலாக ஆவின் பொருளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. பின்னர், இந்த முடிவு மாற்றப்பட்டது.
மலையக மக்களின் குடியுரிமையும் கம்யூனிசமும்
ராதா மனோகர்: : 1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு இந்திய
வம்சாவளியினரின் குடியுரிமையை பறித்த வரலாறு.தொடர்பாக சில தகவல்கள் ...
இந்த விடயத்தின் பின்னணி பற்றிய பல விடயங்கள் மர்மமாகவே இருக்கிறது
ஏராளமான பத்திரிக்கை செய்திகளும் நூல்களும் பொதுவெளிக்கு வந்தாலும் சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது
அரசியல் வாதிகளின் அ
ரசியல் வியாபாரமானது பல உண்மைகளை வெகு நேர்த்தியாக திட்டமிட்டு மறைத்தே வந்துள்ளது.
இந்திய வம்சாவளி தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே அப்போது இருந்திருக்கிறது
எமக்கு ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி கொண்டிருந்த மக்களிடையே இடதுசாரி கருத்துக்கள் ஓரளவு வரவேற்ப்பை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.
அந்த காலக்கட்டங்களில் கம்யூனிச அச்சுறுத்தல் என்ற பதம் உலக நாடுகளில் வெகு பலமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தையாகும்
இந்த பின்னணியை பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் மலையக தொழிலாளர்களின் வாக்குரிமை பறிப்பு பற்றி பேசவே முடியாது





